பதிவு செய்த நாள் :
சிபாரிசுக்கு வந்த இளம்பெண்ணிற்கு வாரிசு?
அமைச்சர் ஜெயகுமாருக்கு நெருக்கடி

சென்னை: வேலைக்கு சிபாரிசு கேட்டு வந்த, இளம்பெண்ணுடன் ஏற்பட்ட உறவு காரணமாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிபாரிசுக்கு வந்த இளம்பெண்ணிற்கு வாரிசு?  அமைச்சர் ஜெயகுமாருக்கு நெருக்கடி


அந்த பெண்ணின் தாயாருடன், அமைச்சர் மொபைல் போனில் பேசுவது போல வெளியான ஆடியோ பதிவுகள், தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளன.தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவேல், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'தமிழக எம்.பி., ஒருவருக்கு தம்பி பிறந்துள்ளார்; அந்த, எம்.பி.,யின் தந்தை அமைச்சராக உள்ளார்' என்றார். அந்த நபர் யார் என்ற, சர்ச்சை எழுந்தது.இந்நிலையில், பெண் ஒருவருடன், அமைச்சர் ஜெயகுமார் பேசுவது போன்ற, இரண்டு ஆடியோ பதிவுகள், நேற்று வெளியாகி, அரசியலில் புயலை கிளப்பி உள்ளன.
ஆடியோவில் பேசும் பெண், 'என் மகள் கர்ப்பமாகி விட்டார். அதை கலைக்க உதவ வேண்டும்' என்கிறார். 'இது தொடர்பாக பேச வீட்டிற்கு வா' என, அமைச்சர் அழைக்கிறார்.மற்றொரு ஆடியோவில், அந்த பெண், 'மகளை, மருத்துவமனையிலிருந்து

வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். அவள் கர்ப்பமான விவகாரம் வீட்டிற்கு தெரிந்து, உறவினர்கள் என்னை அடித்தனர். கர்ப்பத்தை கலைத்து விட்டால், அவர் அமைதியாகி விடுவார். எனவே, கல்யாணத்திற்கு ஏதாவது கேட்டு வாங்கு; வேண்டுமென்றால், நாங்களும் வருகிறோம் என, உறவினர்கள் கூறுகின்றனர்' என, தெரிவிக்கிறார்.
அதற்கு அமைச்சர், 'இது, எப்படி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தது. வீட்டிற்கு தனியாக வா; இது குறித்து பேசலாம்' என, அழைக்கிறார். அத்துடன், தான் கூறும் மருத்துவமனையில், கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும், உறுதி அளிக்கிறார்.இந்த ஆடியோக்களை, தினகரன் தரப்பினர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, அமைச்சர் ஜெயகுமாருக்கு மகன் பிறந்ததற்கான, பிறப்பு சான்றிதழும், சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தாயார் பெயர் சிந்து; தந்தை பெயர், டி.ஜெயகுமார் என, குறிப்பிடப்பட்டுள்ளது.குழந்தை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள, தனியார் நர்சிங் ஹோமில், ஆக., 8ல், பிறந்துள்ள விபரமும், பிறப்பு சான்றிதழில் பதிவாகியுள்ளது.'

சட்டப்படி எதிர் கொள்வேன்


அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:சசிகலா குடும்பத்தை கடுமையாக எதிர்ப்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர். என் மீது களங்கம் கற்பிக்க, ஓராண்டுக்கு முன், நட்சத்திர

Advertisement

ஓட்டலில், நான் ஒருவரோடு இருப்பது போல மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நான் சைபர் கிரைமில் புகார் கொடுத்தேன்.; மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில், பெயிலானவர்கள், தற்போது, இந்த வேலையை செய்துள்ளனர்.என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள், மார்பிங் செய்து, 'ஆடியோ'வை, 'வாட்ஸ் ஆப்'பில், பரப்பியுள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள், சட்டத்தின் முன் பதில் கூற வேண்டும். இதை, சட்டப்படி எதிர்கொள்ள நான் தயார்.'எங்களிடம் ஒரு ஆடியோ உள்ளது' என, ஒரு மாதத்திற்கு முன் கூறினர்; போலியாக தயாரிப்பதில், அவர்கள் கெட்டிக்காரர்கள். அந்த மோசடி கும்பல், சசிகலா குடும்பம்; தினகரனை சார்ந்தவர்கள் தான். நாங்கள் சிங்கங்கள்; சிறு நரிகளுக்கு அஞ்சமாட்டோம்.பிறப்பு சான்றிதழில், யார் பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். டி.ஜெயகுமார் நான் மட்டும் தானா; ஸ்டாலின் பெயரை கூட அங்கு போடலாம். இது திட்டமிட்ட சதி. இது போன்ற எத்தனையோ சதிகளை பார்த்துள்ளேன்; இது, பெரிய விஷயம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
27-அக்-201815:39:27 IST Report Abuse

Naam thamilarவெற்றிவேல் MLA , மாபியா கும்பல் இதை சொல்லவில்லை, உன்னோட மாமியார் கும்பல் தான் இதை சொல்லுகிறது என்று நிருபர்கள் மத்தியில் சொல்லி இருக்கிறார்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-அக்-201803:19:11 IST Report Abuse

Manianஒன்னை நிஃக நல்ல புரிஞ்சுக்கிடுங்க தம்பிகளா. ஊரோடு ஒத்து வாழ், கோவணம் கெடடாத ஊரிலே கெட்டினவன் பைத்தியம் ன்னு சொல்வுவங்க. நான் இப்போ எனாபெரிய தப்பு பண்ணி போடடென் ? அப்போ அந்த இயற்கைக்கை சட்டத்தை மீறுவது ஏயைக்கை விரோதம் இல்லையா? இப்போ ஈனா, அந்த புள்ளேக்கு வேண்டிய காசு எப்போவோ தயாராய்ச்சிடுத்தே.

Rate this:
bal - chennai,இந்தியா
25-அக்-201811:55:26 IST Report Abuse

balபத்து வருடம் கழித்து மீடூவில் இந்த பெண்மணி சொல்வார்...

Rate this:
மேலும் 123 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X