எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோஷம்!
சபரிமலையில் வென்றது சரண கோஷம்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு முதன்முதலாக, மாத பூஜைக்காக நடை திறந்திருந்த ஐந்து நாட்களில் 10 முதல் 50 வயதிற்குட்டபட்ட ஒரு பெண் பக்தர் கூட தரிசனம் செய்யவில்லை.

சபரிமலையில் வென்றது சரண கோஷம்!


உண்மையான பெண் பக்தர்கள் யாரும் தரிசிக்கவும் வரவில்லை. வீம்புக்காக வந்த பெண் ஊடகவியலாளர்கள், போராட்ட பெண்ணியவாதிகள், சுற்றுலா வந்த அப்பாவி பெண்கள் என மொத்தம் 15 பேரை ஐயப்பபக்தர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். கேரள மார்க்சிஸ்ட் அரசும்,அதன் போலீசும் எப்படியும் ஒரு பெண்ணையாவது தரிசிக்க வைக்க வேண்டும் என்று நடத்திய முயற்சியை, சபரிமலையின் புனிதம், ஐதீகத்தை காப்பதே நோக்கமாக கொண்ட பக்தர்களின் சரண கோஷ போராட்டம் முறியடித்தது.
மாத பூஜைக்காக அக்.,17 மாலையில் நடைதிறக்கும் முன்பே, நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என இந்து இயக்கங்கள், பா.ஜ., சார்பில் போராட்டங்கள் நடந்தன. பத்து வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் தரிசனத்திற்கு வரவேண்டாம் என, பல பெண்கள் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்திருந்தன. என்றாலும் முதல் ஆளாய், வட இந்திய ஆங்கில ஊடகங்களின் பெண் நிருபர்கள் நிலக்கல், பம்பை வந்து சபரிமலை செல்ல முயற்சி செய்தனர். செய்தி சேகரிப்பு தான் அவர்கள் நோக்கம் என்றாலும், ஊடகங்களின் வியாபார போட்டி அதன் பின்னணியில் இருந்தது. எங்கள் பெண் நிருபர் பதினெட்டாம் படியை தொட்டு விட்டார்' என்று அங்கிருந்து 'லைவ்' செய்யவே, வழக்கமாக வரும் ஆண் நிருபர்களை தவிர்த்து பெண்களை அனுப்பியிருந்தன அந்நிறுவனங்கள்.
ஆனால் நிலக்கல், பம்பையில் கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை மீறி அவர்கள் சபரிமலைக்கு வர இயலவில்லை. எனினும் 'நியுயார்க் டைம்ஸ்' பெண் நிருபர், போலீஸ் பாதுகாப்புடன் மலையேறி பாதிவழியில் பக்தர்களின் போராட்டத்தால் திரும்பிச் சென்றார்.இப்படி, பரபரப்பை பரப்ப நினைத்த ஆங்கில ஊடகங்கள்,பக்தர்களின் போராட்டத்தால் பதுங்கிகொண்டன. ஆந்திராவை சேர்ந்த ஊடக பெண் ஒருவரும் பாதி துாரம் மலையேறி வந்து எதிர்ப்பால் திரும்பிச்சென்றார். மலையாள ஊடகங்கள், பக்தர்களின் உணர்வை புரிந்து கொண்டு பெண் நிருபர்களை சபரிமலைக்கு அனுப்பவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்வீட்டி மேரி, தலித் இயக்க செயற்பாட்டாளர் மஞ்சு(இவர் மீது பல வழக்குகள் உள்ளன) ஆகியோரும் பாதி வழியில் திரும்பிச் சென்றனர். ஐந்தாம் நாளில் பிந்து என்ற பெண் முண்டக்கயம் என்ற ஊரில் தடுக்கப்பட்டு, போலீசால் திருப்பி அனுப்பபட்டார்.ரஹானா வந்தது எப்படிசபரிமலை சன்னிதான நடைப்பந்தல் வரை வந்த,பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவை போலீஸ், எப்படிபாதுகாப்பு தந்து அழைத்து வந்தது என்பது இப்போது, கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. போலீசுக்கு தெரிந்து தான் அவரது பயணம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. பத்தனம்திட்டா கலெக்டர் நுாஹ், பம்பையில் பாதுகாப்பில் உள்ள ஐ.ஜி., மனோஜ் ஆப்ரஹாம் ஆகியோரை 17 ம் தேதி தொடர்பு கொண்ட ரஹானா, தான் சபரிமலையில் இருமுடி கட்டுடன் மறுநாள் வருவதாகவும், பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு 'நீங்கள் பம்பைக்கு எப்படியாவது வந்து விடுங்கள்; அங்கிருந்து சபரிமலை மலையேற நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்' என போலீஸ் உத்தரவாதம் தந்தது. அதன்படி ரஹானா பாத்திமாவும், அவருடன் பெண் ஊடக நிருபரும், 180 போலீசார் பாதுகாப்புடன், போலீசின் கவசஉடை, ெஹல்மெட் அணிந்து 4 கி.மீ., மலையேறி சபரிமலை நடைப்பந்தல் வந்தனர்.இருமுடி கட்டை தலையில் வைத்து வர வேண்டியவர்கள், ஏதோ 'டிரக்கிங்' செல்வது போல ஹெல்மெட் அணிந்து வந்ததும் பக்தர்கள் மனம் பதறினர். குழந்தை 'சாமிகள்', பிற ஐயப்ப சாமிகள், கோயில் நம்பூதிரிகள் வழிமறித்து பதினெட்டாம் படி அருகே தரையில் கிடந்து எதிர்ப்பு தெரிவித்ததும், பயந்து போன போலீஸ் அதே பாதுகாப்புடன் அவரை திருப்பி அழைத்துச்சென்றது.

Advertisement

மற்ற பெண்கள் வந்து போனது போன்று சாதாரணமான விஷயம் அல்ல இது. பெண்ணியவாதி என்று கூறிக்கொள்ளும் ரஹானா பாத்திமாவின் பின்னணியை திரும்பி பார்த்தால், பல திடுக்கிடும் விஷயங்கள் (விதிகளை உடைத்தெறி) என்ற வாசகங்களுடன் ஐயப்பனை கிண்டலும், கேலியும் செய்தமீம்ஸ்களால்நிறைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த 'முத்த போராட்டத்தில்' முதல் ஆளாய் கலந்து கொண்டவர். திருச்சூர் பூரம் விழாவில் ஆண்கள் மட்டும் விளையாடும் 'புலிக்களியில்' ஆண் வேடமிட்டு விதிமீறி கலந்து கொண்டவர். இப்படி பல சர்ச்சை பின்னணி கொண்டவர் என்று, போலீசுக்கு நன்கு தெரிந்தும் அனுமதித்தது எப்படி?
சபரிமலையில் மத வேறுபாடு இல்லை என்றாலும், மாற்று மதத்தை சேர்ந்த பெண் இந்த நேரத்தில் தரிசனம் செய்தால் ஏற்படும் பின்விளைவுகளை எல்லாம் முன்கூட்டியே கணிக்காமல் போலீஸ் அனுமதித்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பம்பை முதல் சன்னிதானம் வரை தனிஒருவருக்கு, வி.ஐ.பி., போல ஐ.ஜி., ஸ்ரீஜித் தலைமையில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்ட துடிக்கும் பிரணாய் விஜயன் அரசு, எப்படியாவது ஒரு பெண் தரிசனம் நடத்த வேண்டும் என்று விரும்பியதன் விளைவே இந்த ஏற்பாடு. ஆனால் அது தோல்வியில் முடிந்தது அரசிற்கும், பக்தர்களின் காணிக்கையில் 'வாழும்' தேவசம் போர்டுக்கும் ஏற்பட்ட பெரும்பின்னடைவு. ஐயப்பன் மீது பக்தர்கள் கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற பக்தியே, அரசின் திட்டத்தை தோல்வியடைய செய்தது என்றால் மிகையல்ல. பா.ஜ.,-ஆர்.எஸ்.எஸ்.,மற்றும் இந்து அமைப்புகள் பம்பையிலும், நிலக்கல்லிலும் பெண்களை தடுத்தது. ஆனால் மலையேறி வந்த பெண்களை, சன்னிதானம் அருகே தடுத்தது ஐயப்ப பக்தர்களே. அவர்கள் நிரந்தரமாக அங்கே நிற்கும் போராட்டக்காரர்கள் அல்ல; மாறாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று பல மாநில பக்தர்கள்; தரிசனத்திற்கு வந்தவர்கள். பெண்கள், போலீசுடன் வருவது அறிந்து மறித்து தரையில் புரண்டு படுத்து தடுத்தனர்.
அப்படியும் மிஞ்சியவர்களை 'ஐதீகம் மீறாதீர்கள்' என்று உருகி கெஞ்சினர். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் 'சரணம் ஐயப்பா' என்று கோஷமிட்டனர். கண்ணியமான பக்தர்களின் கோஷத்தால் பின்வாங்கி திரும்பினர் போலீசும், 'கலக' பெண்களும்!இந்த ஐந்து நாளில் ஐயப்பனுக்கு பக்தர்கள் தந்த காணிக்கை ஒன்றே கால் கோடி ரூபாயை வாரிச்சுருட்டிய தேவசம் போர்டு, இனியாவது பக்தர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தனது கம்யூனிச சித்தாந்தத்தை திணிக்க நினைக்கும் கேரள அரசு, பக்தர்கள் மனதையும் புரிந்து கொள்ள வேண்டும்.உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பு.-ஜி.வி.ரமேஷ் குமார் rameshkumargv@dinamalar.in

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Chennai,இந்தியா
23-அக்-201815:06:03 IST Report Abuse

Vijayஉச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமென்றால் அணைத்து மசூதிகளில் ஒலிக்கும் ஒளி பெருக்கியை எடுத்து விடுங்கள்

Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
29-அக்-201805:11:25 IST Report Abuse

 nicolethomsonநீங்க இப்படியெல்லாம் சொன்னீங்க அப்புறம் ஆந்திராவில் 68 வயது அய்யரை 6 முஸ்லீம் போட்டு தாக்கினார்களே, அது போன்று உங்களுக்கும் பீஸ்புள் குரூப் பண்ணிடும், ஓகேவா, ஏனென்றால் இப்போதைக்கு இளிச்சவாயர்கள் என்றால் உங்க இந்துக்கள் தான், எனக்கு பப்லிசிட்டி வேணும் என்றால் இந்துக்களை திட்டி மீம்ஸ் போட்டால் போதும் தமிழகத்தில் நான் பாப்புலர் ஆயிடுவேன், நீங்க? ...

Rate this:
Vijay - Chennai,இந்தியா
23-அக்-201815:05:02 IST Report Abuse

Vijayகேரளாவில் கம்யூனிசம் வீழ்வது உறுதி

Rate this:
Devathasan T - Tenkasi,இந்தியா
23-அக்-201812:18:34 IST Report Abuse

Devathasan Tஐயப்பா உன் கருணையால் கிடைத்த பதவியில் இருப்போர் தன்னிசையாக வந்தவன் போலல்லவா பிதற்றுகிறான்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X