ஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்ற மாணவிக்கு கலெக்டர் உதவி

Added : அக் 23, 2018 | கருத்துகள் (2)
Advertisement

ஈரோடு:தாளவாடி மலை கிராமத்தில், பெற்றோரை இழந்த மாணவி, கல்லுாரியில் படிக்கவும், விடுதியில் தங்கவும் தேவையான உதவியை, ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் செய்து கொடுத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட, தாளவாடி தாலுகா, காளிதிம்பம் மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 17. இவரது தாய் மாராத்தாள், 2005ல் இறந்தார். இவரது தந்தை சாமிநாதன், கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார்.
அப்போது, பிளஸ் 2 முடித்த சிவரஞ்சனி, கோவை அரசு கலை கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரம் படிக்க தேர்வாகி இருந்தார். பெற்றோர் இறந்ததால், சிவரஞ்சனியால் கல்வியை தொடர முடியவில்லை. இதனால், மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார்.

இதையறிந்த, ஈரோடு கலெக்டர் கதிரவன், தாளவாடி சென்று, சிவரஞ்சனியை நேரில் சந்தித்து, கல்லுாரி படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொண்டார்.கல்லுாரி கல்வி இயக்குனரை தொடர்பு கொண்ட, கலெக்டர், சத்தியமங்கலம் அரசு கலை கல்லுாரியில், சிவரஞ்சனி, பி.காம்., படிக்கவும், அங்குள்ள கல்லுாரி விடுதியில் தங்கவும் ஏற்பாடுகளை செய்தார். மேலும், அவருக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janan Janan - Chennai,இந்தியா
23-அக்-201821:13:05 IST Report Abuse
Janan Janan contact through collector ::: The District Collector, First Floor, Collectorate, Erode – 638011 Phone : +91-424-2266700 Camp Office : +91-424-2262444, 2262555 Fax : +91-424-2261555 E mail : collrerd[at]nic[dot]in
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
23-அக்-201819:52:56 IST Report Abuse
சுந்தரம் இந்த மாணவியின் மின்னஞ்சல் முகவரி அல்லது அலை பேசி எண்ணை தெரிவிக்கவும். நான் உதவுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X