பதிவு செய்த நாள் :
தேவசம்போர்டுக்கு மட்டுமே சபரிமலை சொந்தம் :
கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்:''வன்முறையின் கூடாரமாக சபரிமலையை மாற்ற அனுமதிக்க முடியாது. சபரிமலை, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு மட்டுமே சொந்தம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு ஆதரவு தந்துள்ளது,'' என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தேவசம்போர்டு,சபரிமலை,சொந்தம்,முதல்வர்,பினராயி விஜயன்

சபரிமலை பிரச்னை குறித்து திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:சபரிமலையை சிலர் வன்முறையின் கூடாரமாக மாற்றி விடலாம் என கனவு காண்கின்றனர். அது நடக்கப் போவதில்லை. சபரிமலையில் அமைதி நிலைக்க வேண்டுமெனில் அங்கு கிரிமினல்கள் இருக்க கூடாது. கிரிமினல்களை வெளியேற்றி உண்மையான பக்தர்கள் தரிசனம் நடத்த வசதி செய்யப்படும். அது அரசின் தலையாய கடமை.

சபரிமலை பணிக்காக சென்ற பெண் ஊழியர்களும் தடுக்கப்பட்டனர். போராட்டத்தில் தேவசம்போர்டு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு என்றால், அது பற்றி தேவசம்போர்டு விசாரிக்க வேண்டும். பிரச்னைகளை ஏற்படுத்தி தீர்ப்பை திருத்த சங்பரிவார் அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

எப்படி ஆனாலும் தீர்ப்பு அமல்படுத்தப்படும். இது அரசின் தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல. நீதிமன்ற தீர்ப்பை எந்த அரசும் அமல்படுத்தி தான் ஆக வேண்டும். 'கோயில் நடை அடைப்பேன்' என தந்திரி கூறியுள்ளார். உதவி பூஜாரிகள் போராட்டம் நடத்தினர். தீர்ப்புக்கு எதிரான செயலை அனுமதிக்க முடியாது. கோயில் நடை

திறப்பதும், அடைப்பதும் தேவசம்போர்டின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

திறக்கப்பட்ட கோயில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை மட்டும்தான் தந்திரி முடிவு செய்ய முடியும். பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பது தேவசம்போர்டு, தந்திரியின் கடமை.சபரிமலையில் உளவுத்துறை தோல்வி அடையவில்லை. சன்னிதானத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்காக சட்டசபையை கூட்ட வேண்டிய தேவை இல்லை. சபரிமலை வருவோரின் பக்தியை யாராலும் பரிசோதிக்க முடியாது. ஒரு நபரின் உருவம், செயல்பாடுகளை வைத்து பக்தியை எடை போட முடியாது.சபரிமலை, தேவசம்போர்டுக்கு மட்டுமே சொந்தமானது. வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

பந்தள ராஜ்யத்தையும், சபரிமலை காணிக்கை உட்பட வருமானத்தையும் திருவிதாங்கூர் மன்னருக்கு, பந்தளம் மன்னர் கொடுத்து விட்டார். இப்படித்தான் சபரிமலை உள்ளிட்ட கோயில்கள் அரசின் சொத்தாக மாறின. 1949 ஒப்பந்தப்படி சபரிமலையில் உரிமை உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் இணைந்த பின் கோயில்கள் தேவசம்போர்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இதில் பந்தளம் மன்னர் குடும்பத்துக்கு எந்த பங்கும் இல்லை. விழா காலங்களில் உள்ள கடமைகளை மன்னர் குடும்பம் நிறைவேற்றும். அதில் அரசு தலையிடாது. தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் பக்தர்களை இந்த அரசு மதிக்கிறது என்றுதான் அர்த்தம். பக்தர்கள் அனைவரும் சபரிமலை போகலாம்.

எதிர்ப்பு என்ற பெயரில் சிலர் பந்தல் கட்டி போராட்டம் நடத்தினர். அதற்கு அரசு எதிர்ப்புதெரிவிக்கவில்லை. ஆனால் சபரிமலைக்கு சென்றவர்களை பரிசோதனை செய்யும் நிலைக்கு சென்றதால்தான்

Advertisement

நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது.

பெண்கள், பக்தர்கள், நிருபர்கள் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். 'நாங்கள் சொல்வதைதான் வெளியிட வேண்டும்; இல்லா விட்டால் தாக்குதல் நடத்துவோம்' என மிரட்டினர். கோயிலுக்கு வந்த பெண்களின் வீட்டில் தாக்குதல் நடத்தினர். சபரிமலையில் அரசியல் லாபம் பெற பா.ஜ.,- காங்., முயற்சி செய்கின்றன.

பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படும் ஒரு கூட்டம் காங்கிரசில் உள்ளனர். இதன்மூலம் காங்., தற்கொலை முயற்சி மேற்கொள்கிறது. 'சபரிமலை குறித்த தீர்ப்பை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அராஜகம் செய்பவர்களை வெளியேற்றி அனைத்து பக்தர்களும் தரிசனம் நடத்த வசதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன் முன்பதிவு?


''சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு குறித்து பரிசீலிக்கப்படும்,'' என பினராயி விஜயன் கூறினார்.அவர் கூறியதாவது: பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி செய்வது பற்றி ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மணி நேரத்திலும் எத்தனை பேர் வருவர், எத்தனை பேர் தரிசனம் நடத்த முடியும் என தெளிவான புள்ளி விபரம் வேண்டும்.

இதன்படி 'ஆன்லைன்' முன்பதிவு வசதி செய்யப்படும். இதன்மூலம் பக்தர்கள் சன்னிதானத்தில் அதிக நேரம் இருக்க முடியாது. திருப்பதி கோயிலைப் போல 'ஆன்லைன்' முன்பதிவு செய்யப்படும். விரைவில் இதில் முடிவு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
24-அக்-201817:59:08 IST Report Abuse

S.AJINSதிருவாங்கூர் சமஸ்தானம் , பந்தளம் மகாராஜா ஆகியோருடன் உரிமையாளர் .ஆனால் கோவில் என்பது எல்லா பொதுமக்களுக்கு வழிபடுவதற்குத்தான் . பெண்கள் பொதுமக்கள் கிடையாதா ? பெண்கள் மனித ஜாதி கிடையாதா ? கடவுள் ஆன் , பெண் இருபாலரேயும் ஒருபோலவே நேசிக்கிறார் . சாத்திய அடிமைத்தனம் போல் , இது பெண் அடிமைத்தனம் . இதை புரிந்து கொள்ளாமல் பெண்களே போராடுவது வருத்தம் அளிக்கிறது

Rate this:
Thirumoolar - chennai,இந்தியா
24-அக்-201820:16:53 IST Report Abuse

Thirumoolar. உண்மையில் உச்ச கோர்ட்டை மதிப்பதாக இருந்தால் முல்லை பெரியாறு அணை பற்றிய தீர்ப்பை மதித்திருக்க வேண்டும் அது மட்டுமல்லாது சாலை விடுதி இன்னும் பிற பல சட்டங்கள் அமலில் உள்ளது மதிக்கிறதா...உச்ச கோர்ட்டிக்கிற்கு மத சம்பந்தமான விஷயங்களில் தலை இட அனுமதி வழங்க கூடாது. எப்போது அனுமதிக்க வேண்டும் என்றால் அங்கு ஏதாவது கொலையோ கொள்ளையோ போனால் சட்டம் நீதிமன்றம் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கலாம். ...

Rate this:
Mithun - Bengaluru,இந்தியா
24-அக்-201817:29:10 IST Report Abuse

Mithun1950 இல் கிறிஸ்துவ தீவிரவாதிகள் சபரிமலை ஐயப்பன் சிலையை உடைத்து கோவிலை தீயிட்டு கொளுத்தினர், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் தான் கம்ம்யூனிஸ்டுகள் இப்போது அதே ஐயப்பன் விவகாரத்தின் மூலம் மூடுவிழா காணப்போகிறார்கள்.

Rate this:
Narayanan Thannappa - Canton,Detroit,யூ.எஸ்.ஏ
24-அக்-201817:02:54 IST Report Abuse

Narayanan Thannappaகல்வி அறிவில் முதலிடம் வகிக்கும் ஒரு மாநில முதல்வர் மனசாட்சி சிறுதும் இன்றி பொய் உரைக்கலாமா ? ஒரு முகமதிய பெண்மணிக்கு காவல் துறை உடையை அணிவித்து கோவிலுக்குள் அழைத்து சென்றது யார் ? கோவிலை கொச்சைப்படுத்த முயன்றது இவரது அரசா அல்லது இவர் கூறும் கட்சியா. பொய்யர் களி தின்ன நேரம் நெருங்கிவிட்டது

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X