சவுதியின் 'டுவிட்டர்' படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்| Dinamalar

சவுதியின் 'டுவிட்டர்' படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்

Added : அக் 24, 2018 | கருத்துகள் (53)
Advertisement
Saudi Arabia,Mohammed bin Salman, Jamal Khashogi,சவுதி அரேபியா ,  பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி டுவிட்டர் படை, சவுதி இளவரசர் சல்மான் , சவுத் ஆல் குதானி,  அல்ஜாபராஹ் , டுவிட்டர், ரியாத், சவுதி, முகமது பின் சல்மான், 
 journalist Jamal Khashogi, Saudi Twitter Force, Saudi Prince Salman, South Al Qudani, Aljaparah, Twitter, Riyadh, Saudi,

ரியாத் : அரசுக்கு எதிராக சமூக வலைதளமான 'டுவிட்டரில்' கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது.

சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சந்தேகத்துக்குரிய முறையில் துருக்கியில் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில், அலைபேசியை சோதனை செய்து, எதிர்ப்பாளர்களை தாக்கும் சவுதி 'டுவிட்டர்' படையின் செய்திகளை அலசுவாராம். இவர்கள், அரச குடும்பத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமர்சனம் செய்பவர்களை பட்டியலிட்டு தெரிவிப்பர். இதற்காக 'டுவிட்டரில்' தங்களது உளவாளி ஒருவரை நியமித்து, பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பெற்றுள்ளது.

சவுதி இளவரசர் சல்மானின் ஆலோசகராக உள்ள சவுத் ஆல் குதானி தலைமையில் 'டுவிட்டர்'சிறப்புப்படை அமைக்கப்பட்டது. 'வாட்ஸ்ஆப்பில்' உள்ள 'குரூப் சாட்' போல ஒருங்கிணைப்பு செய்து, 'டுவிட்டரில்' விமர்சனம் எழுதுபவர்களை அச்சுறுத்துவதுதான் இவர்களது பணி. இதன்மூலம் எதிர்பாளர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஏதாவது நிறுவன ஊழியர்கள் விமர்சனம் எழுதினால், அவர்களது முதலாளிகள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். மாதம் ரூ. 2.20 லட்சம் சம்பளம் என அறிவிக்கப்பட்டு, இப்படைக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில் உள்ள இளைஞர்கள் ஒருகட்டத்தில் வெளியேற நினைத்தால், அவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.

சவுதி புலனாய்வு துறையை சேர்ந்த அல்ஜாபராஹ் என்பவர் 2013ல் 'டுவிட்டரில்' பணிக்கு சேர்ந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று இன்ஜினியரானார். இவர்தான் எதிர்ப்பாளர்களின் 'டுவிட்டர்' கணக்கு, ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை சவுதி அரசுக்கு வழங்கினார் என கூறப்பட்டது. 2015ல் 'டுவிட்டரில்' இருந்து விலகிய இவர், தற்போது சவுதி அரசில் பணியாற்றுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
24-அக்-201814:47:12 IST Report Abuse
Viswam சவுதியின் கச்சா எண்ணெய் வளம் சிறிது வருடங்களுக்கே அவர்களின் அடுத்த ஆயில் இஸ்லாத்தின் உறைவிடமான மெக்கா மதீனா உலகமெங்கும் எவ்வளவு இந்த மதத்தார்கள் உள்ளனரோ அவர்களின் ஹஜ் வருகையில் மற்றும் அதன் வருமானத்தில் சவுதியின் எதிர்காலம் அமைந்திருக்கும் இப்போதே 12 பில்லியன் டாலர் ஈட்டுகிறார்கள் ஹஜ் மாற்றும் உம்ராவினால் 2022 ஆம் ஆண்டு இது 150 பில்லியன் டாலரை தொட்டுவிடும் அங்குதான் முட்டாவி எனும் மத காவலர்களை பார்க்கலாம். ஷரியா சட்டத்தையும் வஹாபி விதிமுறைகளையும் பாதுகாத்து இஸ்லாமியரை நெறிப்படுத்தி மெக்கா மதீனாவின் புகழ் குறையாமல் பார்த்துக்கொள்ளுவது தான் இவர்கள் வேலை. இறை நம்பிக்கையைவிட பயம் போய்விட்டால் எதிர்கால அரச குடும்ப வருமானம் பாதிக்கப்படலாம் சோசியல் மீடியாவில் கருத்து போடுபவர்களை ரிவெட் எடுக்க இந்த மாதிரி படையும் வைத்திருக்கிறார்கள். எல்லாம் பய மயம் குறை சொல்பவர்களின் கதியை தான் துருக்கியில் பார்த்தோமே நம்ம மக்கள் எல்லாம் அங்கே பணம் பண்ணப்போயி அவர்களுக்கு முட்டு கொடுக்கும் நிலை ஒருவேளை ஆதரித்து கருத்து போடவில்லை என்றல் சுளுக்கு எடுக்கப்படுமோ என்னவோ? இடோலெரான்சின் உச்சக்கட்டம் அங்குதான் ஆனால் செகுலர் போர்வையில் நமக்கு தான் கடிவாளம்
Rate this:
Share this comment
Cancel
karupanasamy - chennai,இந்தியா
24-அக்-201814:45:35 IST Report Abuse
karupanasamy பயங்கரவாதத்தை பிரசவித்து அதனை வளர்த்து கொத்துக்க செய்வது இசுலாம் இசுலாம் இசுலாம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-அக்-201813:38:11 IST Report Abuse
Nallavan Nallavan அமைதி மதமான இஸ்லாத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை அங்கீகரிக்கப்படவில்லையா ? வைரமுத்து, லாசரஸ் ஆகியோருக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது ......ஆகவே அவர்கள் விருப்பம்போல் பேசலாம் ..... எழுதலாம் என்று சொன்ன சிறுபான்மை அன்பர்களுக்கு இந்தக் கேள்வி ...... இதே அன்பர்கள்தாம் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்று கேட்டவர்கள் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X