பொது செய்தி

இந்தியா

சிபிஐ இயக்குனர்கள் நீக்கம் ஏன்?: அருண் ஜெட்லி விளக்கம்

Updated : அக் 24, 2018 | Added : அக் 24, 2018 | கருத்துகள் (28)
Advertisement
Arun Jaitley,Alok Verma, Rakesh Astana, Nageswara Rao,அருண் ஜெட்லி, சிபிஐ, அலோக் வர்மா , ராகேஷ் அஸ்தானா, நாகேஸ்வர ராவ் , மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ,  பிரதமர் மோடி, சிபிஐ இயக்குனர்கள் நீக்கம், CBI,   Union Minister Arun Jaitley, Prime Minister Modi, CBI directors removal,

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதுடன், புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது ஏன் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.


குற்றச்சாட்டு

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், சிபிஐ ஒரு பிரதான விசாரணை அமைப்பு. அதன் நேர்மையை பாதுகாப்பதற்காகவும், நியாயமான விசாரணை நடைபெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மீது சிறப்பு இயக்குனர் புகார் கூறுகிறார். சிறப்பு இயக்குனர் மீது சிபிஐ குற்றம்சாட்டுகிறது. சிபிஐ.,யின் 2 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்படியானால் இதனை யார் விசாரிப்பது? நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். அரசு இதனை விசாரிக்க முடியாது.


உறுதி

நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ.,யின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும். 2 உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும். விசாரணைக்கு முன் யார் குற்றவாளி என சொல்ல முடியாது. சிபிஐ கூண்டுக்கிளி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டார். இருப்பினும் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் முழு விசாரணையையும் கண்காணிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


விளக்கம்

இதனிடையே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: சிபிஐ உயர் அதிகாரிகள் மீது ஆக., 24ல், சிவிசி எனப்படும், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், செப்., 11ல் தங்களிடம் உள்ள ஆவணங்கள், கோப்புகளை செப்., 14க்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு சிவிசி நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக சிபிஐக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. செப்.,24க்குள் அறிக்கை அளிப்பதாக சிபிஐ உறுதி அளித்தது. ஆனால், இயக்குனர் மற்றும் சிபிஐ அளித்த உறுதிப்படி எந்த ஆவணங்களும் அளிக்கவில்லை. இதன்பின்னரே, முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை வழங்குவதில் சிபிஐ இயக்குனர் தயங்குகிறார் என்பதை சிவிசி உணர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
24-அக்-201819:24:03 IST Report Abuse
Ramesh I have seen many people's comment which is so strange. They are talking about Rafale deal.It is matter of 30000 crores being invested in India(10-70 companies are under this process). I am sure many people are aware about MAKKAL MARUNTHAGAM /JAN AUSHADH scheme. If this government really wants to make money , they would have called all the India Pharma Company Chiefs and bargained to give bribe as fund to party in some means.With this scheme ts are available 80% LESSER COST(Available 10-20 Rs/10 t against 150 Rs/10 t).All Pharma Companies , Doctors who are running medical shops, Medical Shop Owners are in Shivering mode due to this scheme...Many people in TN are using but not telling ly. We used to buy medicines for Rs4000/month for my family(Parents) and not its costing about Rs300-350 /month. Rs.3600/Month direct SAVINGS...There are 600 Medicines under this scheme which are produced for GOI and sold in these shops.
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
24-அக்-201819:12:23 IST Report Abuse
G.BABU "சி. பி . ஐ யின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும்" ..... இவர் இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வுடையவர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
S.AJINS - CHENNAI,இந்தியா
24-அக்-201817:51:35 IST Report Abuse
S.AJINS தெய்வமே குறைந்த பட்சம் சிபிஐ இயையாவது சுதந்தரமா இயங்க விடுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X