5 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கடையில் தங்கம், வைர நகைகள் கொள்ளை

Updated : அக் 25, 2018 | Added : அக் 25, 2018 | கருத்துகள் (13)
Advertisement
நகைக்கடை, நகை கொள்ளை, உத்தர பிரதேசம் , கான்பூர், கோர்ட், தங்க நகைகள் கொள்ளை, வைர நகைகள் கொள்ளை, உ.பி.,
Jewelery, jewel robbery, Uttar Pradesh, Kanpur, court, gold jewelery robbery, diamond jewelery robbery, UP,

கான்பூர் : உ.பி., மாநிலம் கான்பூரில் 5 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட நகைக்கடை ஒன்றில் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் செயல்பட்டு வந்த நகைக்கடை ஒன்று, தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013 ம் ஆண்டு மே 30 ம் தேதியன்று மூடப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வந்தது. சமீபத்தில், போலீசார் முன்னிலையில் கடையை திறக்கலாம் என கோர்ட் சமரசம் செய்து வைத்து, வழக்கை முடித்து வைத்தது. இதன்படி விரைவில் கடையை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் பூட்டப்பட்ட கடையை உடைத்து, அதில் இருந்த 10,000 காரட் வைரங்கள், 500 கிலோ வெள்ளி, 100 கிலோ தங்கம், 5000 காரட் மதிப்புடைய நகைகள், தொழில் தொடர்பான சில ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடையிலும், அருகில் உள்ள இடங்களிலும் உள்ள சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaram Kandalu - Madurai,இந்தியா
26-அக்-201801:50:01 IST Report Abuse
Rajaram Kandalu கூட்டாளிகளில் ஒரு களவாணி இருக்க கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-அக்-201819:46:37 IST Report Abuse
Sanny செம் சைட் கோல்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-அக்-201815:17:47 IST Report Abuse
Endrum Indian இவனுங்க ரெண்டு கோஷ்டியிலே ஒரு கோஷ்டி தான் இதை செய்திருக்கின்றது என்று மிகத்தெளிவாகத் தெரிகின்றதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X