"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் செயற்கை மேகம்

Added : மார் 26, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
துபாய் : விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள்

துபாய் : விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.


இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம். இவ்வாறு சாவூத் அப்துல் கனி கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppusamy - Chennai ,இந்தியா
29-மார்-201110:48:09 IST Report Abuse
Karuppusamy அப்படியே செயற்கை மழை கூட இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
Balamurugan N - Mannargudi,இந்தியா
27-மார்-201104:21:49 IST Report Abuse
Balamurugan N வியப்பாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
Rate this:
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
27-மார்-201100:38:04 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. அருமையான கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X