நடிகர் ரஜினி கட்டளை: தி.மு.க., பாய்ச்சல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடிகர் ரஜினி கட்டளை: தி.மு.க., பாய்ச்சல்

சென்னை : 'நான் அரசியலுக்கு வந்தால், அதை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தோடு இருப்போர், இப்போதே விலகி விடுங்கள்' என, நடிகர் ரஜினி கூறினார். இதனால், கடும் கோபம் அடைந்த தி.மு.க., ரஜினி மீது திடீரென பாய்ந்துள்ளது.

நடிகர்,ரஜினி,கட்டளை, தி.மு.க., பாய்ச்சல்


அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த, நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கான, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வரு கிறார். 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை துவக்கி, உறுப்பினர்களை சேர்ப்பதுடன், மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும் நியமித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மன்ற உறுப்பி னர்கள் நியமனம், மாற்றம், ஒழுங்கு நட வடிக்கை என, அனைத்துமே, என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, என் ஒப்புதலுடன் தான்

அறிவிக்கப்படுகின்றன. நான் அரசியலுக்கு வந்தால், அதை வைத்து, பதவி வாங்கவும், பணம் சம்பாதிக்கவும் எண்ணுகிறவர்களை, அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள், இப்போதே விலகி விடுங்கள்.இவ்வாறு ரஜினி கூறியிருந்தார்.

மேலும், 'புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் அரசியலுக்கு வருகிறேன்' என்றும், அவர் கூறியிருந்தார். இது, தி.மு.க., தலைமைக்கு எரிச் சலை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் அதிகாரப் பூர்வ நாளிதழில், நேற்று ரஜினியை விமர்சித்து, கட்டுரை வெளியானது.ரஜினி அறிக்கையில் இருந்த கருத்துகள் குறித்து, அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போல, ரஜினியை கடுமையாக சாடியிருந்தனர்.

ரஜினி, யாருடைய கயிற்று அசைவிலோ, ஆடும் பொம்மையாகி விட்டதாக, அதில் குறிப்பிட்டு இருந்தனர். தி.மு.க., திடீரென ரஜினி மீது பாய்ந்தது, அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், நேற்று சென்னையில், கோடம்பாக்கம், ராகவேந்திரா மண்டபத்தில்,மன்ற நிர்வாகிகளுடன், ரஜினி திடீர் ஆலோசனை நடத்தினார்.

அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்,

Advertisement

நீக்கப்பட்டவர்களை, சில நிபந்தனைகளின் அடிப்படையில், மீண்டும் சேர்க்க முடிவு எடுக்கபட்டு உள்ளது. அதன்பின், ரஜினி வெளியிட்ட அறிக்கையில், 'என்னையும், ரசிகர்களையும், யாராலும் பிரிக்க முடியாது' என, தி.மு.க.,வுக்கு பதிலடி தந்துள்ளார்.ரஜினி வெளியிட்ட அறிக்கை:நான், 23ம் தேதி வெளியிட்ட அறிக் கையில், மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து, சில உண்மைகளை சொல்லி யிருந்தேன்.

அது, கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும், ரசிகர்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி.என்னையும், ரசிகர்களையும், யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை, நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன், நமக்கு துணை இருப்பான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-அக்-201800:09:11 IST Report Abuse

Pugazh VAre you new to TN politics, kulandhaiKannan?? The actors befried by ADMK are: jayalalitha, aisari velan, gundu kalyanam, senthil, thiyagu, latha etc.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-அக்-201822:50:53 IST Report Abuse

Pugazh Vபீஜேபீ யை எந்த கட்சி யும் சேத்துக்கலை போல..அதனால் ஆரம்பிக்காத கட்சி யுடன் கூட்டணி க்கு துண்டு போட ஆரம்பித்து விட்டார் கள். கரெக்ட்டா தேர்தல் சமயத்தில் காலா காணாம போயிடுவார். வேண்ணா அவரோட போஸ்டரை போட்டு ஓட்டு கேக்கலாம். குஷ்பு திமுக/ காங்கிரஸ் க்கு வந்த போது ஆ...நடிகையை நம்புகிற நிலைமை கேவலம் என்றெல்லாம் எழுதின பீஜேபீ இப்போது ரஜினியின் பின்னால் அலைவது மட்டும் சரியா?

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
27-அக்-201821:20:11 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஊழலுக்கு எதிரான எவருமே திமுக கம்பெனி உடன் எப்படி கூட்டணி சேர முடியும்

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X