அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாய்ப்பு!
காலியான, 20ல், 11 ல் மும்முனை போட்டி
அ.தி.மு.க., - தி.மு.க., 7 இடங்களில் நேரடி மோதல்
12ஐ கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்க வியூகம்

இருபது சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால், அதில், 11 தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., இடையே, மும்முனை போட்டியும், இரண்டில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இடையே நேரடி மோதலும், மீதமுள்ள, ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டியும் இருக்கலாம் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாய்ப்பு,தொகுதிகள், அ.தி.மு.க.,  தி.மு.க., மும்முனை போட்டி, அ.ம.மு.க., தங்கதமிழ்செல்வன்,  எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், துணை முதல்வர், முதல்வர், பன்னீர்செல்வம்

அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட, 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு சரியே என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், இரு நீதிபதிகள் இடம் பெற்ற உயர் நீதிமன்ற அமர்வு, ஏற்கனவே மாறுபட்ட உத்தரவு பிறப்பித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.இதனால், காலியாகும், 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும்

சேர்த்து, மொத்தம், 20 தொகுதிகளுக்கும், ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி, தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

'இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், நாங்கள் போட்டியிட தயார்' என, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர், தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார். சென்னை, அறிவாலயத்தில் நடந்த, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், '20 தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சி அமைக்கும்; தேர்தல் பணிகளில் ஈடுபடுங்கள்' என, கட்சியினரை முடுக்கி விட்டுள்ளார்.

அதேபோல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 12 தொகுதி களை கைப்பற்றி, ஆட்சியை நீட்டிக்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.மேலும், எந்தெந்த தொகுதிகளில் மும்முனைப் போட்டி, இருமுனைப் போட்டி ஏற்படும் என்பது குறித்தும், விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:திருவாரூர், திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, சாத்துார், தஞ்சாவூர், பெரம்பூர், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பெட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய, 11 தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., இடையே, மும்முனை போட்டிக்கு வாய்ப்பு உள்ளது.மீதமுள்ள, விளாத்திகுளம்,

Advertisement

ஆம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், அரூர் ஆகிய, ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, நேரடி போட்டி நிலவலாம்.

பெரியகுளம், ஆண்டிப்பட்டியில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இடையே தான் போட்டி. தகுதி நீக்கம் அடிப்படையில், பதவி இழந்த, 18 பேரையும் மீண்டும் போட்டியிட செய்து, தொகுதி மக்களின் ஆதரவையும், அனுதாபத் தையும் பெற, அ.ம.மு.க.,வும் திட்டமிட்டுள்ளது. அதேபோல, 20 தொகுதி களில், தி.மு.க., வெற்றி பெற்றால், அக்கட்சியின் தலைமையில், புதிய ஆட்சி அமைக்க முடியும் என்பதால், 20 தொகுதி களையும் கைப்பற்ற, தி.மு.க.,வும் தயாராகி உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அ.தி.மு.க., தரப்பில், ஆட்சியை தக்க வைக்க, 12 இடங்களில் வெற்றி பெற, வியூகம் அமைக்கப் பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-201819:18:44 IST Report Abuse

Christophermulti corner contests in all constituencies. 20 seats will go to one party.

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
28-அக்-201817:06:38 IST Report Abuse

Tamilselvanபிராடு, 420 , டோக்கன் பார்ட்டி டெபாசிட் வாங்காது. இந்த மாபியா கும்பலின் கடைசி தேர்தல். இருப்பது ரூபாய் டோக்கன்,பருப்பு இப்போது வேகாது.

Rate this:
murugan - chennai,இந்தியா
28-அக்-201815:44:19 IST Report Abuse

muruganதளபதி மற்றும் முதல்வர், துணை முதல்வர் நிலைமையை நினைத்தால் பாவமாக உள்ளது ............... TTV வச்சி செய்யப்போறார்.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X