பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் அழைப்பை புறக்கணித்த டிரம்ப்

Added : அக் 28, 2018 | கருத்துகள் (59)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தியா விடுத்திருந்த அழைப்பை அவர் புறக்கணித்துள்ளார். 2019 ம் ஆண்டு கொண்டாடப்படும் இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவில் டிரம்ப் பங்கேற்க மாட்டார் என அமெரிக்க நிர்வாகம், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு எழுதி உள்ள கடிதத்தில்
டிரம்ப், இந்தியா, குடியரசு தினம், ரஷ்யா, ஏவுகணை ஒப்பந்தம்

புதுடில்லி : இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தியா விடுத்திருந்த அழைப்பை அவர் புறக்கணித்துள்ளார்.

2019 ம் ஆண்டு கொண்டாடப்படும் இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவில் டிரம்ப் பங்கேற்க மாட்டார் என அமெரிக்க நிர்வாகம், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக டிரம்ப் பங்கேற்பார் என இந்தியா நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அழைப்பை புறக்கணித்து அமெரிக்கா கடிதம் அனுப்பி உள்ளது.

டிரம்ப் எந்த காரணத்தினால் இந்திய குடியரசு தின விழாவை புறக்கணிக்கிறார் என்ற காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அமெரிக்க காங்.,ன் கூட்டுக் குழு கூட்டம் அதே சமயத்தில் நடப்பதால் டிரம்ப் இவ்விழாவை புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா, ரஷ்யாவுடன் செய்து கொண்டுள்ள ஏவுகணை ஒப்பந்தம், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்வது போன்றவையும் டிரம்ப்பின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
30-அக்-201806:28:00 IST Report Abuse
Vetri Vel கட்டிப்புடி வைத்தியம் பலிக்கலியா..?
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
29-அக்-201805:36:59 IST Report Abuse
Sanny ஒண்ணுமே இல்ல, நித்தம் போனால் முற்றம் சலிக்குமாம், நம்மாளு அடிக்கடி ஒரே நாடுகளுக்கு போவதால் வந்த வினை. நம்மாளு அடிக்கடி அமெரிக்கா போனதால், டிராம் அவர்கள் தான் சொல்வதைத்தான் நம்மாளு கேட்கணும் என்று உதார் விட்டார், அதனால ரஷியாவிடம் ஆயுதம் வாங்காதே என்று புலம்பினார், நம்மாளு கேட்டகவில்லை, அதனால டூ விட்டுவிட்டார். சரி விடுங்க அவர்வராவிட்டால் குறைந்தா போயிடும்.
Rate this:
Cancel
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
29-அக்-201800:35:25 IST Report Abuse
C.Jeyabalan அந்த இனவெறியனை பாரத மக்கள் நாடி அழைக்கிறார்களா அல்லது மத்திய அரசு மேம்போக்காக அழைத்ததா? இரண்டும் கேள்விக்குறியே அமெரிக்காவை விரும்பும் இந்தியர்கள், ஒரு இனவெறியனை விரும்பி அழைக்கவே மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X