ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா : கட்காரி

Added : அக் 28, 2018 | கருத்துகள் (75)
Share
Advertisement
ஐதராபாத் : இந்தியா, ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. இங்கு நாட்டை ஆண்டவர்கள் குடும்பம் மட்டுமே லாபம் அடைந்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.ஐதராபாத்தில் பா.ஜ., யுவ மோட்சா விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ., குடும்ப கட்சி அல்ல. ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அரசியல் செய்யும் கட்சியும் அல்ல. வாஜ்பாய், பா.ஜ.,வின் மிகப் பெரிய தலைவர். இருந்தும் அவரையோ
நிதின் கட்காரி, இந்தியா, பா.ஜ.,அத்வானி, வாஜ்பாய்,  மோடி, அமித்ஷா

ஐதராபாத் : இந்தியா, ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. இங்கு நாட்டை ஆண்டவர்கள் குடும்பம் மட்டுமே லாபம் அடைந்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பா.ஜ., யுவ மோட்சா விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ., குடும்ப கட்சி அல்ல. ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அரசியல் செய்யும் கட்சியும் அல்ல. வாஜ்பாய், பா.ஜ.,வின் மிகப் பெரிய தலைவர். இருந்தும் அவரையோ அத்வானியையோ நாங்கள் அடையாளபடுத்தவில்லை. இன்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் உள்ளனர். தலைமை மாறிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு தனி நபரின் பெயரை வைத்தும் இந்த கட்சி இயங்கவில்லை. கொள்கைகள் அடிப்படையிலேயே பா.ஜ., செயலாற்றி வருகிறது.

பிரதமரின் வாரிசு பிரதமராக வேண்டும். முதல்வரின் வாரிசு முதல்வராக வேண்டும் என்ற நிலையை நாங்கள் மாற்றி உள்ளோம். ஜனநாயகம் என்பது யாரையும் சார்ந்தது இல்லை. இந்தியா ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. இங்கு நாட்டை ஆண்டவர்களின் குடும்பம் மட்டுமே பயனடைந்துள்ளது. விவசாயம், தொழில்துறை போன்ற முக்கிய துறைகளின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
29-அக்-201806:44:34 IST Report Abuse
Viswam நீண்ட பொது துறை குழுமங்களை பட்டியல் இட்டு காங்கிரஸின் சாதனை என்று கூறும் அன்பர்களுக்கு முதல் நேருவின் அமைச்சகத்தில் நல்ல மனிதர்கள் இருந்தார்கள் - சியாமா பிரசாத் முகேர்ஜீ தொழில் துறை, ஹொர்மி பாபா வர்த்தகம், ஜெகஜீவன் ராம் தொழிலாளர், NV காட்கில் பவர் முதலாம் பிளானிங் கமிஷன் சொல்படி முதலில் 5 பொதுத்துறை கம்பனிகளும், காலப்போக்கில் 200 கும் மேல் கம்பனிகள் ஆகிவிட்டது இந்த விஷயங்களை அவர்கள் செய்திராவிட்டால் எதற்கும் லாயக்கில்லாமல் போயிருப்பார்கள் மேலும் 70 வருட சாசனம் கிட்டியிருக்காது பிறகு வந்த காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சணம்தான் தெரியுமே யாரை வேண்டுமானாலும் உயர் பதவிக்கு போடுவது, விருப்பு வெறுப்புகளை தேவை செய்ய புது கம்பெனி ஆரம்பிப்பது எல்லாம் நடந்தேறியது குடும்பத்தினருக்கு வேலை, வேண்டியவர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது எல்லாம் நடந்தது HMT மற்றும் NTC எப்படி அழிந்தது என்று பார்த்தாலே போதும் இதே காங்கிரஸ் தான் 1985 இல் சிக் கம்பனிஸ் ஆக்ட் கொண்டுவந்தது 90 களில் லிபேரலைசேஷன் என்கிற காலத்தின் கட்டாயத்தால் பொது துறை வணிகங்களை தீரா வியாதிக்கு தள்ளினார்கள் பொதுமக்கள் பார்வைக்காக மஹரத்னா, நவரத்னா, மினி ரத்னா என்று பெயர் சூட்டினார்கள் பார்லமேன்டில் கேள்வி பதில் நேரத்தில் காங்கிரஸ் அமைச்சர் (2013 ) இல் சுமார் 65 முடங்கிய கம்பனிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் வியாதி கம்பெனிகளை விற்க முயற்சித்தது (2004 ) வாஜ்பாய் அரசு முதன்முதலாக இப்போது காங்கிரஸ் சொம்புகள் அவரை மாமனிதர் என்று போற்றுகிறார்கள், அனால் அப்போது தூற்றினார்கள் பிறகுதான் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் பப்ளிக் அஸெட் மேனேஜ்மென்ட் என்கிற புது துறை பைனான்ஸ் அமைச்சகத்தில் வியாதி கம்பெனிகளை சீர்படுத்த வந்தது பொது துறை குழுமங்கள் நாட்டிற்கு தேவை நல்ல திறமைசாலிகள் உள்ள பொதுத்துறை குழுமங்கள் இன்றும் இருக்கிறது காங்கிரெஸ்ஸால் சீரழிக்கப்பட்ட ஏர் இந்தியா (மற்ற ஏர்லைன்ஸ்க்கு நல்ல வருமானம் உள்ள ரூட் தாரை வார்த்து கொடுத்தது) போல கம்பெனிகளும் உள்ளது ஆகையால் சும்மா லிஸ்ட் போட்டு பழைய நாட்களை மெல்ல வேண்டாம் வேண்டுமானால் காங்கிரஸின் ஊழல் லிஸ்ட் போட்டு பெருமிதம் அடையுங்கள்
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
28-அக்-201821:25:35 IST Report Abuse
Ambika. K புகழ் உங்கள் நினைவாற்றலுக்கு மிக்க மகிஷ்ச்சி உங்கள் கூறுபடியே நீங்கள் பட்டியலிட்டுள்ள காங்கிரஸ்ன் சில சாதனைகளை பாப்போம் AI சுதந்தரம் வந்தபொழுது TATA என்னும் மாமனிதனிடம் இருந்தது அப்பொழுது AI யில் வேலை என்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. இபொழுது AI யில் வேலை என்றால் சம்பளம் ஒழுங்காக வருமா என்ற கேள்வி இரண்டு BHEL தொடங்கியதில் நோக்கம் இந்தியா மின் தேவையில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதற்க்காக. எங்கு இருக்கிறோம் தோழா தங்க நாற்கரத்தின் மூளை திரு வாஜ்பாய் அவர் நேரு காந்தி குடும்பத்தில் பிறக்க வில்லை. இந்தியாவில் ரயில்வே வளர்ச்சி 5 சதவிகிதம் இந்த 70 ஆண்டுகளில்.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
28-அக்-201819:22:21 IST Report Abuse
rmr அரசியல் கொள்ளையர்கள் , ஊழல் அதிகாரிகள் . திருட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் இவர்களால் சுரண்டப்பட்டு ஏழ்மையான மக்கள் உள்ள நாடு இந்தியான்னு சொன்னால் அது உண்மை . நீங்கள் சொல்றது ஒன்னும் சேரி இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X