சொல்லுங்க.... 'சார்' என துருவங்கள் பதினாறு படம் மூலம் நம்மை பயமுறுத்திய சந்தோஷ் கிருஷ்ணா வளர்ந்து வரும் முன்னணி நடிகர். 50 க்கும் மேற்பட்ட குறும்படங்கள், வேதாளம், துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முக்கிய
கதாபாத்திரங்களில் விரைவில் வரவிருக்கும் சந்தோஷ்கிருஷ்ணா வாசகர்களுக்காக மனம் திறந்த போது...
நான் சென்னைப் பையன். சிறுவயது முதலே எனக்கு சினிமா ஆசை என பொய் சொல்லமாட்டேன். நண்பர்களுடன் இணைந்து விளையாட்டாக குறும்படத்தில் நடித்தேன். அப்போது சுற்றியிருப்பவர்கள் பாராட்டுக்களில் துவங்கியது எனக்குள் இருந்த நடிகனின் உத்வேகம். எம்.பி.ஏ., முடித்த நான் வாழ்வின் உண்மை நிலை புரிய தேடலை நோக்கி நகர்ந்தேன்.
'சினிமாவில் நடிக்க' வாய்ப்பு தேடவில்லை. நடிக்க மட்டுமே வாய்ப்பு தேடினேன். சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அஜித்குமார் வேதாளம் படத்தில் சிறு காட்சியில் இடம் பெற்றேன். அதன் மூலம் 'தல' ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானேன். தொடர்ந்து ஆடிஷன்களில் பங்கேற்று வந்தபோது கிடைத்த வாய்ப்பு தான் 'துருவங்கள் பதினாறு' திரைப்படம்.
அந்த கதாபாத்திரம் படத்தில் அமைந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படம் வெளியான பின் என்னை பலர் அடையாளம் காண துவங்கினர். தற்போது வெல்வெட் நகரம், பப்பி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். பணம், புகழுக்காக மட்டுமே நான் சினிமாவை தேடவில்லை. எனக்கு அதன் மீது தீராதக் காதல். அதனால் தான், சினிமாவில் நான் படும் அவமானங்களும், கஷ்டங்களும், ஏமாற்றங்களும் எனக்கு வலியாகவே தெரியவில்லை.
நாம் வெற்றி பெற நல்ல நண்பர்கள், தோழி இருந்தால் நம் கனவு வெறும் கனவாக மட்டும் இருக்காது. சுற்றும் பூமியின் ஓட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்கிறேன். இயல்பான விஷயங்களை செய்த படியே வாழ்க்கை நகர்கிறது. தேடலும், தீராக்காதலும் முற்றினால் சினிமாவில் பணம், புகழும் பெரிதாக தெரியாது, என்றார்.
இவரை பாராட்ட thesanthoshkrishna

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement