பொது செய்தி

இந்தியா

அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை: பிரதமர் பெருமிதம்

Added : அக் 28, 2018 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பெருமைமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் இந்த ஆண்டு சிறப்பானது. ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை வரும் 31ம் தேதி திறந்து
மன்கிபாத், பிரதமர் மோடி, இந்தியா, சாதனை

புதுடில்லி: விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பெருமை

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் இந்த ஆண்டு சிறப்பானது. ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை வரும் 31ம் தேதி திறந்து வைக்க உள்ளேன். பட்டேல், மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை கொண்டவர். நாட்டை ஒற்றுமைப்படுத்தினார். 31ம் தேதி நடக்கும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். ஒற்றுமையாக இருப்பதே நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.

மன் கி பாத் என்ற தலைப்பில் 49வது முறையாக ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். இந்தியா இன்று ஒருங்கிணைந்த நாடாக விளங்க இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மதிநுட்பமும், அறிவுக்கூர்மையும்தான் காரணம் என்று, புகழாரம் சூட்டினார்.


பாராட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்கள் என்னை சந்தித்தனர். இந்த விளையாட்டில் நமது வீரர்கள் ஏராளமான பதக்கங்கள் வென்றுள்ளர். பல புதிய உச்சங்களை எட்டியுள்ளனர். விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியை நாம் வெற்றிகரமாக நடத்தி காட்டினோம். இதற்காக அனைத்து தரப்பிலும் இருந்து நமக்கு பாராட்டு கிடைக்கிறது.


காப்போம்

சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும். சமூக பணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரியாக உள்ளது.இயற்கையை காப்பது நமது கடமை. அதற்காக அனைவரும் சிறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று காலாட்படை தினத்தை கொண்டாடி உள்ளோம். ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் குடும்பத்திற்கு தலை வணங்குகிறேன். நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் குடும்பத்திற்கு வணக்கம் தெரிவிக்கிறேன். நவ., 11 அனறு முதல் உலக போரின் 100வது ஆண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த போரில் இந்தியாவுக்கு நேரடியாக பங்கேற்கவில்லை. இருப்பினும், அந்த போரில் நமது வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். அவர்களை வணங்குகிறேன்.கடந்த 100 ஆண்டுகளில் அமைதிக்கான அர்த்தம் மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
29-அக்-201814:34:32 IST Report Abuse
Ananthakrishnan தாங்க முடியலை. எப்படா 2019 - தேர்தல் வரும்-னு எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க. இப்ப மக்கள் இருக்கிற மனநிலையிலே இந்தியா முழுதும் சேர்த்து, இப்ப காங்கிரசுக்கு உள்ள அளவுக்கு தான் பி.ஜே.பி -க்கு எம்.பி-ங்க தேறுவாங்க-ன்னு நினைக்கிறன். குஜராத் மாடல் அரசியல் இந்தியா முழுக்க இனிமேல் எடுபடாது. 2019 தேர்தலுக்கு அப்புறம் மக்கள் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விடுவாங்க. இவர் இருக்கிற வரைக்கும் திடீர், திடீர்-னு ஏதாவது குண்டை வீசப்போறாரோன்னு பயமாவே இருந்துகிட்டு இருக்கு. போதும்-டா சாமி.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-அக்-201808:04:12 IST Report Abuse
Srinivasan Kannaiya என்னமோ சொல்லுகிறார்... காதில் பஞ்சு உள்ளது
Rate this:
Cancel
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
29-அக்-201804:27:19 IST Report Abuse
Dr Kannan AXN PRABHU - Chennai அவர்களின் விரிவான உண்மயான கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன். வள்ளுவர் குரலில் சொல்லிவுள்ளார் " இடப்பாரை இல்ல ஏமாற மன்னன் கெடுப்பரிலானும் கெடும் " . மேலும் சில BJP-மோடிஜி ஆட்சியின் அவலங்களை பதிவிடுகிறேன். 1. "GDP" அளவில் தலை இட்டு 7.4% என்கிறார். ஆனால் புதிய அளவீடு முறை தானாகவே GDP % 2-3% அதிகரித்துள்ளது. அதை மூடி மறைத்துவிட்டார்கள் 2. இந்திய ரூபாயின் மதிப்பு பன்னாட்டு சந்தையில் 7.4% குறைந்து உள்ளது (ரியல் டெர்ம்ஸ்) என்று IMF பதிவுசெய்துள்ளது. எனவே பன்னாட்டு சந்தையில் வாங்கும் திறன் முறையில் (purchasing power parity - PPP)இந்தியாவின் "GDP" 0% தான் வளர்ந்துள்ளது. 3. முழு அதிகாரத்தியும் தன் கைவசப்படுத்தி இந்தியன் குடிஆண்மைக்கு மற்றும் அதிகார பகிர்விடுதல் முறையை சுத்தமாக அழித்து விட்டார்.4. அனைவருக்கும் வளர்ச்சி என்றில்லாமல் ஒரு சில கார்பொரேட் நண்பர்களுக்காகவே செயல் படுகிறார். 5. நாட்டை திறமையாக ஆள தெரியாத சர்வாதிகாரிகள் ஹிட்லர் மற்றும் முசோலினி, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று மக்களை திசை திருப்பி தப்பிக்க போர் புரிய தூண்டி நாட்டை சீரழித்தது மாதிரி மோடிஜி அவர்கள் ல் தற்பொழுது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவால்ஜி மூலம் மக்களை திசை திருப்புகிறார். அடுத்த தேர்தல் வரை பேச எதுவுமில்லாமல் எதிரிகள் (சீனா மற்றும் பாக்கிஸ்தான்) படை எடுப்பார்கள் என்ற பயமுறுத்தல் அரசிலுக்கு தயாரித்து விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X