செவ்விதழ் மங்கையோ... ரம்பையின் தங்கையோ... என கவிபாடும் ராணியாய் இளைஞர்களை சுண்டி இழுக்கும் சினிமா கதாநாயகி ஷனாயா டாப்னி 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறக்கிறார்
* உங்களைப்பற்றி...முப்பையில் பிறந்தாலும் தாய்மொழி தமிழ். வளர்ந்தது, பள்ளி படிப்பு கோவை. ஈரோட்டில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். பெங்களூரு எச்.சி.எல்.,ல் பணியாற்றினேன். சிறுவயதில் ரொம்ப சுட்டி. அதே நேரத்தில் எனது கருத்தில் வலுவாக இருப்பேன்.
* சினிமாவிற்குள் வந்த அனுபவம் ...எச்.சி.எல்.,-ல் வேலை செய்யும் போது எனக்குள் விரக்தி, மன அழுத்தம் இருந்தது. பணியில் திருப்தி இல்லை. எனவே இது எனக்கான தளம் இல்லை என முடிவு செய்தேன். அதை தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்தேன். கண்ணகி,காக்கி உள்ளிட்ட சில குறும்படங்கள் பாராட்டு பெற்று தந்தது. சினிமா ஆர்வம் இருந்ததால் நடிப்பு இயல்பாக வந்து விட்டது.
* சினிமாவில் கிடைத்த ரோல்கள் ...கன்னடத்தில் தேசிய விருது பெற்ற சன்சாரி விஜய் நடித்த 'வர்த்தமான' படத்தில் கேரக்டர் ரோலில் நடித்தேன். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தது. தற்போது தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசனுடன் ஹீரோயினியாக நடித்துள்ளேன். விரைவில் ரீலீஸ் ஆகும்.
* கிளாமராக நடிப்பீர்களாஸ்கிரிப்ட்டுக்கு கிளாமராக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நடிப்பதில் தவறில்லை. இதை ஆர்ட்டாகத்தான் பார்க்கிறேன். ஆபாசம் என்பது நமது பார்வையில் தான் உள்ளது. மாடர்ன் கேரக்டராக இருந்தாலும், வில்லி கேரக்டராக இருந்தாலும் 'பவர்புல்' ரோலில் நடிக்க விரும்புகிறேன்.
* காதலில் சிக்கி விட்டீர்களா ...சினிமாவிற்குள் வந்தவுடன் கிசு,கிசு என எந்த சிந்தனைக்கும் இடம் அளிப்பதில்லை. சினிமாவை காதலிக்கிறேன். ரோல் மாடலாக பார்வதி மேனன், மெலிஷா மெக்காட்டியை கருதுகிறேன். இவர்கள் விதவிதமான நடிப்பை வெளிப்படுத்துவார்கள். நடிகர் விஜய் உடன் நடிக்க ஆசை.இவரை பாராட்ட daphnebme@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE