பொது செய்தி

இந்தியா

இலங்கை நிகழ்வுகளை கவனிக்கிறோம்: இந்தியா

Updated : அக் 28, 2018 | Added : அக் 28, 2018 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இலங்கையில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.உதவி தொடரும்இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களை இந்தியா கவனித்து வருகிறது. ஜனநாயக மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு
இந்தியா, இலங்கை, ரணில் விக்கிரமசிங்கே, சிறிசேன, ராஜபக்சே, சீனா, வெளியுறவு அமைச்சகம்

புதுடில்லி: இலங்கையில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


உதவி தொடரும்

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களை இந்தியா கவனித்து வருகிறது. ஜனநாயக மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் மதிக்கப்படும் என நம்புகிறோம். அந்நாட்டு மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


எதிர்ப்பு

இலங்கை பார்லிமென்ட்டை அதிபர் சிறிசேன முடக்கி வைத்ததற்கு சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை கலந்து ஆலோசிக்காமல், அதிபர் தன்னிச்சையாக பார்லிமென்ட்டை முடக்கியதாகவும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


பாதுகாப்பு வாபஸ்

தன்னை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் பிரதமர் யார் என்பதை பார்லிமென்ட் முடிவு செய்யட்டும் எனக்கூறி வருகிறார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை முற்றிலும் விலக்கி கொள்ள அதிபர் சிறிசேன உத்தரவிட்டு உள்ளார். ரணில், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தை உடனடியாக காலி செய்யாவிட்டால், அதனை ஆக்கிரமிக்க ராஜபக்சே தரப்பு திட்டமிட்டு உள்ளது.
இதனிடையே, ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.


வாழ்த்து

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவை, அந்நாட்டிற்கான சீன தூதர் செங் சியோ, முதல் ஆளாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.சீன அதிபரின் வாழ்த்து செய்தியை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
29-அக்-201814:59:14 IST Report Abuse
murali சுடாலின், வைகோ,சீமான், குருமா, எல்லாரும் ஸ்ரீலங்கா சென்று போராடவேண்டும் தமிழர்களை காப்பாற்ற.
Rate this:
Cancel
r.kumar - chennai,இந்தியா
29-அக்-201808:06:56 IST Report Abuse
r.kumar சைனா காரன் ரெடியாக இருக்கிறான் இலங்கையை ஆக்கிரமிக்க இங்க இருக்கிற அரசியல்வாதி தான் சம்பாதிக்கணும் தான் மட்டும் நல்ல இருக்கணும் நெனைக்கிறேன் நாடு நல்ல இருக்கணும் நெனைக்க மாட்டேங்குறான் கடைசீ வரை திருந்தாத ஜென்மங்கள்
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-அக்-201808:03:33 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பவும் இந்தியாவை பொறுத்தவரை இலங்கையில் எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்பதுதான் வேலை...இல்லை என்றால் பல லட்சம், தமிழ் போராளிகளை இலங்கை கபளீகரம் செய்த பொழுது பார்த்தது கொண்டுதானே இருந்தது.,..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X