நான் பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்: ராகுல்

Updated : அக் 30, 2018 | Added : அக் 30, 2018 | கருத்துகள் (63)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

உஜ்ஜைனி : 'ம.பி.,யில் காங்., அரசு பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்; இது பொய்யான வாக்குறுதி அல்ல' என காங்., தலைவர் ராகுல் தெரிவித்தார்.

ம.பி., மாநிலம் உஜ்ஜைனியில் நடந்த காங்., பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் மோடி இதுவரை ஒன்றும் செய்தது கிடையாது. காஷ்மீர் மாநிலம் உருக்குலைந்ததால் தான் பயங்கரவாதிகள் எளிதில் ஊடுருவுகிறார்கள். இதற்கு மோடியே முழுப்பொறுப்பு. மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றும்.

ம.பி.,யில் காங்., ஆட்சி அமைத்தால், ஒரே வாரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்; அதனை செய்ய காங்., முதல்வர் தவறினால், அவர் நீக்கப்பட்டு புதிய முதல்வர் நியமிக்கப்படுவார். அவர் அதனை நிறைவேற்றுவார். நான் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவன் இல்லை.

ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானத்துக்கு காங்., ஆட்சியில் ரூ.526 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலை மறைக்கவே சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
02-நவ-201817:04:03 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பல லக்ஷம் கடன் வாங்கின்ட்டுட்டு மூனிலே ஒருபங்கு கோல்ட் லே இன்வெஸ்ட் பண்ரான்னுக என்பது 00%உண்மை மாஸசம்பளக்காரன் ஒருகிராம் கோலெடுவாங்கர்துஇல்லீங்க கிசங்கள் வீடுகளில் மினிமம் அரைகிலோ தங்க இருக்குமாம் அவா கல் நகைகள் வாங்கறதே இல்லீங்க வாங்கின தங்கம் கூட பணம் ரொடேடிங் தான் கடன் திருப்பி னதாக சரித்திரமே இல்லீங்களே கடன் கொடுத்த வாங்கியே தான் லோலோன்னு அலையுவான்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
01-நவ-201817:09:25 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இது வமிசமே புழுகுண்ணிகூடம் தானே ஹரிச்சந்திராகோத்திரமா (அம்மா ம்மா இந்திரா பெரோஸ்கான் >ராஜீவ் கான் அண்ட் சோனியா கான் ?காந்தி என்று மாற்றினால் இதுகள் எல்லாம் காந்தியின் வமிசமாய்யா ????//இந்த சமைத்து வாய் திறந்தாள் புளுகளேதான் உதிரும் என்பது உலகறிஞ்ச உண்மை கேட்டுட்டு ரசிக்கவும் ஆட்ச்சியை ப்ளீஸ் பிஜேபி க்கே தரவும் தமிழ்நாடு உறுபடணும்னாய எல்லா திராவிட கோடீஸ்வராலும் ஒழிஞ்சுபோகணும்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-அக்-201821:26:46 IST Report Abuse
r.sundaram இதுவே போய்தான். ரபேல் விமான பேரத்தில் ஊழல் என்று சொல்வதே பொய்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X