பதிவு செய்த நாள் :
பட்டாசு,வழக்கு,சுப்ரீம் கோர்ட்,கறார்

புதுடில்லி: 'தீபாவளி பண்டிகையின் போது, கூடுதலாக இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்ற, தமிழக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. 'இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்' என, கறாராக கூறியுள்ள, உச்ச நீதிமன்றம், எந்த நேரத்தில் வெடிக்கலாம் என்பதை, மாநில அரசு முடிவெடுக்க அனுமதி அளித்துள்ளது.
காற்று மாசு பிரச்னையை தவிர்க்கும் வகையில், தீபாவளியின் போது, பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிப்பதற்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.'இரவு, 8:00 -- 10:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்' என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், காற்று, ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தாத, 'கிரீன்' எனப்படும், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இந்த கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி, பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி பண்டிகை, இதிகாச கதைகளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், நரகாசுரன் என்ற அரக்கனை, கிருஷ்ணர் வதம் செய்த நாள், தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் இந்த வதம் நடந்ததால், அதிகாலை வேளையில், தீபாவளியை, தென் மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். அதனால், இரவு, 8:00 - 10:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை தளர்த்தி, அதிகாலை, 4:30 - 6:30 மணி வரையும், கூடுதலாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,

புதுச்சேரியில், பகலில் தீபாவளி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 'மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது' என, கேட்ட அமர்வு, பின் உத்தரவிட்டதாவது:
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு, டில்லியை அடிப்படையாக வைத்து பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், தங்கள் வழக்கம், பாரம்பரியத்தின்படி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநில அரசுகள் முடிவு செய்யலாம். ஆனால், இரண்டு மணி நேரத்துக்கு மேல், அவகாசம் தர முடியாது.
வட மாநிலங்களில் வசிக்கும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில மக்கள், இரவிலேயே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வசிக்கும், வட மாநில மக்கள், அந்தந்த மாநிலங்கள் குறிப்பிடும் நேரத்திலேயே வெடிக்க

வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழகத்தில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது குறித்து, மாநில அரசு அறிவிக்க உள்ளது.

இன்று விரிவான உத்தரவு!


பட்டாசு வெடிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக, சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம், தனியாக மனு தாக்கல் செய்துள்ளது; அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:காற்று, ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தாத, 'கிரீன்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பட்டாசுகளை மட்டுமே விற்கும் படி, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், அதற்கான வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால், அடுத்த ஆண்டில் இருந்தே, மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நேற்று இதை விசாரித்த, நீதிபதிகள் கூறியதாவது:கிரீன் பட்டாசுகள் குறித்த உத்தரவு, டில்லி பிராந்தியத்துக்கானது; அது, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு பொருந்தாது. இது தொடர்பான விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விரிவான உத்தரவு, இன்று வெளியாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
31-அக்-201820:51:06 IST Report Abuse

Bhagat Singh Dasanஇப்படி எல்லாம் தடை போட்டு பாரம்பரியத்தை தடுத்தால், சுலபமாக ஹிந்துயிசம் அழியும்

Rate this:
தலைவா - chennai,இந்தியா
01-நவ-201800:12:55 IST Report Abuse

தலைவா ஆணவம் எடுத்து திரிந்தால் சுலபமாக ஹிந்துயிசம் அழியும். ...

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-அக்-201820:31:05 IST Report Abuse

Natarajan Ramanathanஇந்த அபத்தமான தீர்ப்பு வழங்கிய (அ)நீதிபதி நாசமாய்ப்போக வேண்டும்.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
01-நவ-201800:13:38 IST Report Abuse

தலைவா எது அபத்தம். தெருவில் உச்சா போவதும் உரிமை என்று முழக்கமிடுங்கள் முட்டாள்களே??? ...

Rate this:
Bala - madurai,இந்தியா
31-அக்-201819:09:18 IST Report Abuse

Balaசுப்ரீம் கோர்டாவது ஹை கோர்டாவது

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X