படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Updated : அக் 31, 2018 | Added : அக் 31, 2018 | கருத்துகள் (131)
Advertisement
Statue of Unity ,Sardar Vallabhbhai Patel, PM Modi ,படேல் சிலை ,இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ,பிரதமர் நரேந்திர மோடி ,பிரதமர் மோடி ,நரேந்திர மோடி ,ஒற்றுமை சிலை ,நர்மதா நதி ,சாது பேட் தீவு ,குஜராத் ,Patel Statue ,Iron Man ,Prime Minister Narendra Modi ,Prime Minister Modi ,Narendra Modi ,Unity Statue ,Narmada River ,SatuPat Island ,Gujarat ,Sardar Vallabhbhai Patel Statue ,

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும், மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உயர உருவ சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, திறந்து வைத்தார். உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை, இதற்கு கிடைத்து உள்ளது.


குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.


நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது.சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில் முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று, அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்; இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில அரசு செய்தது. தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக, சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.


135 டன் இரும்பு நன்கொடை


'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படும், சர்தார் வல்ல பாய் படேல் சிலை, குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில், நர்மதா நதியின் நடுவில் அமைந்துள்ள, 'சாது பேட்' எனப்படும் தீவில் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இந்த தீவுக்கு செல்ல, 250 மீட்டர் நீள இணைப்பு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள, 7 லட்சம் கிராமங்களில் இருந்து, விவசாய கருவிகள் சேகரிக்கப்பட்டு, அதில் இருந்த இரும்புகள் எடுக்கப்பட்டு, சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், 135 டன் இரும்பை, விவசாயிகள் நன்கொடை அளித்துள்ளனர். சிலை உள்ள பகுதியில், 52 அறைகள் உள்ள கட்டடம், மூன்று நட்சத்திர ஓட்டல், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்தார் படேலின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையிலான பொருட்கள், அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.சிலையின் மேற்பகுதியில், 200 பேர் நின்று பார்க்கும் வசதி உள்ளது. இங்கிருந்து சர்தார் சரோவர் அணை மற்றும் விந்திய சாத்பூரா மலைப்பகுதிகளை, 200 கி.மீ., துாரம் பார்க்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (131)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
04-நவ-201805:00:08 IST Report Abuse
Murugan இங்கு ஒன்றுமில்லா அரசியல் தலைவருக்கு எல்லாம் சிலை வைக்கிறோம். இந்த மாதிரி சிறந்த தலைவருக்கு எல்லாம் சிலை வைத்து அவர்கள் வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கு விட்டு செல்வது மிகவும் சிறப்பு ……..வாழ்க பாரதம் ………..வளர்க படேலின் புகழ் …………….
Rate this:
Share this comment
Cancel
TAMILANNNNNNN - pakkatu orutan,இந்தியா
31-அக்-201821:40:25 IST Report Abuse
TAMILANNNNNNN இத்தனால மக்களுக்கு என்ன லாபம். பட்டினியல்ல சாகிறவங்க செத்துக்கிட்டுதான் இருகாங்க. அரசியல்வாதிங்க கஜானா தான் நிரம்புது. இந்த காசை விவசாயத்திற்கு பயன்படுத்தி இருந்த நாடும் நல்லாஇருந்திருக்கும் விவசாகிகளும் சகமாட்டாங்க
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. இப்போது தான் மோடி அவர்கள் ஒரு பெரிய சிலையை வைத்துள்ளார். 1967ம் ஆண்டே திராவிடத் தமிழன் ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி தமிழர்களுக்கு கொடுத்து நிரந்தரமாக பஞ்சத்தை அகற்றி மெரினா கடற்கரையில் எத்தனையோ சிலைகளை நிறுவினான். அது தான் சாதனை. மோடி செய்தது ஒன்றும் பெரிய தல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X