பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'விவசாயிகள் முன்னேற உழைத்தவர் படேல்'

சென்னை,: ''நாட்டை ஒருங்கிணைத்ததோடு, விவசாயிகள் முன்னேற்றத்துக்காக உழைத்தவர், சர்தார் வல்லபாய் படேல்,'' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, சென்னை, போர் நினைவுச் சின்னம் அருகே நடந்தது.

விவசாயிகள் ,முன்னேற, உழைத்தவர், படேல்


இதில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:சர்தார் வல்லபாய் படேலை

நினைவுகூரும் விதமாக, அவரது பிறந்த நாளை, ஒற்றுமை தினமாக, நாடு முழுவதும் கொண்டாடு கிறோம். நாடு முழுவதும், ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்றவற்றை, ஒரே அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒருங்கிணைத்தவர், சர்தார்வல்லவாய் படேல். காங்., ஆட்சியில், வல்லபாய் படேல் குறித்தும், அவரது முயற்சிகள் குறித்தும், பெருமையாக எடுத்துக் கூறவில்லை.


நாட்டின் ஒற்றுமைக்கு, 50 ஆண்டுகளாக, காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.படேல், நாட்டை ஒருங்கிணைத்த தலைவர் மட்டுமின்றி, விவசாயி கள் மீது, அதிக பற்று கொண்டவர். அவர்களின் முன்னேற்றத்துக்கும் உழைத்தவர். இதனால், ஒவ்வொரு ஊராட்சிகளில் இருந்தும், விவசாயிகளின் ஏர்முனை இரும்பை எடுத்து, வல்லபாய் படேல் சிலை செய்ய அனுப்பினோம். உலகில் மிக உயரமான, படேலின் சிலை திறக்கப் பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு முடிந்ததும், 2.6 கி.மீ., தொடர் ஓட்டத்தை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். போர் நினைவு சின்னத்தில் துவக்கிய பேரணி, துறைமுக அதிகாரிகள் குடியிருப்பு வழியாக, தீவுத்திடல் அருகே உள்ள, ராணுவ பூங்காவில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, பாலகிருஷ்ணரெட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-நவ-201815:46:42 IST Report Abuse

Srmu Ngb Goc Gocஅதை ஒழிக்க பாடுபடுபவர் மோடி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-நவ-201813:02:15 IST Report Abuse

Pugazh V//ஒவ்வொரு ஊராட்சிகளில் இருந்தும், விவசாயிகளின் ஏர்முனை இரும்பை எடுத்து, வல்லபாய் படேல் சிலை செய்ய அனுப்பினோம்.// அய்யய்யோ என்ன சார் இது ஒரு ராணுவ அமைச்சர் இப்படி பச்சைப்பொய்கள் பேசுகிறார்? அண்டப்புளுகு ஆகாசப்புளுகுகளின் உச்சம் இது. எத்தனை துணிச்சலாக பொய்களை சரளமாக சொல்கிறார்கள். எங்கள் சுத்துப்பட்ட 12 ஊராட்சிகளில் ஒரு குண்டூசி கேட்டு கூட யாரும் வரவில்லை. முனை சிதைந்த 36 ஏர்கள் இன்னும் இருக்கின்றன. சாதாரண மாக எந்த விவசாயியும் சிதைந்த ஏரை சரியாக்க முனைவாரே ஒழிய உருக்கவோ ஸ்க்ராப் விலைக்கோ விற்க மாட்டோம். பொன் விளைவித்த ஏராச்சே..கூரையில் கட்டி தொங்க வைத்திருப்போம். இதெல்லாம் விவசாயிகள் மட்டுமே அறிவது.

Rate this:
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
01-நவ-201812:42:40 IST Report Abuse

Suresh Ulaganathanஅதான் நீங்கள் 8 வழி சாலைக்கு அனுமதித்தீர்களா ? பாவம் எத்தனை விவசாயத்தை நம்பி வாழும் ஏழைகளை துன்புறுத்தி ரோடுகள் போடவேண்டுமா ?

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X