பதிவு செய்த நாள் :
கட்டாயம்!
நாடு முழுவதும், 'கிரீன்' பட்டாசு அடுத்த ஆண்டு...
டில்லியில் இந்தாண்டே செயல்படுத்த உத்தரவு

புதுடில்லி :'கிரீன் எனப்படும், மாசு ஏற்படுத்தாத பட்டாசுகள் வெடிப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, டில்லிக்கு மட்டுமேபொருந்தும்; நாட்டின் மற்ற பகுதிகளுக்கு, இந்தாண்டு பொருந்தாது. அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் கிரீன் பட்டாசுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது.

கட்டாயம்,நாடு, கிரீன் பட்டாசு, டில்லி, சுப்ரீம் கோர்ட்


காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகை யில், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு, பல கட்டுப்பாடுகளை விதித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. பட்டாசுகளை, இரவு, 8:00 - 10:00 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், 'கிரீன்' எனப்படும், காற்று, ஒலி, ஒளி மாசு ஏற்படுத் தாத பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம், தன் உத்தரவில் தெரிவித்தது.

இதை எதிர்த்து, பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் அதிகாலையில் தான், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'அதனால், இரவில் பட்டாசு வெடிக்க அனு மதித்த 2 மணி

நேரத்துடன், கூடுதலாக, அதிகாலை, 4:30 - 6:30 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு, 'பட்டாசு வெடிப்பதற்கு, 2மணிநேரத்துக்கு மேல்,அனுமதி தர முடியாது. அதேநேரத்தில், எப்போது வெடிக்க வேண்டும் என்பதை, தமிழக அரசு முடிவு செய்ய லாம்' என, நேற்று முன்தினம் தெரிவித்தது. இது குறித்து விரிவான தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது.

அதன்படி, உச்ச நீதிமன்றம், நேற்று அளித்துள்ள விரிவான தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

*பட்டாசு வெடிப்பதற்கு, இரண்டு மணி நேரம் தான் அவகாசம் தரப்படும்

* வட மாநிலங்களில் ஏற்கனவே அறிவித்த படி, இரவு, 8:00 - 10:00 மணி வரை வெடிக்கலாம்.

* தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை, மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் ஆன் லைன் மூலம் பட்டாசுகள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, நாடு முழுவதுக்கும் பொருந்தும்

* தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டால், அந்தந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

* 'கிரீன்' பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்துக்கு மட்டுமே பொருந்தும்

Advertisement

* அடுத்தாண்டு முதல், நாட்டின் அனைத்து மாநிலங் களிலும், கிரீன் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது.

ரூ.500 கோடி இழப்பு


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, டில்லியை சேர்ந்த அனைத்திந்திய வியாபாரி கள் கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ள தாவது: 'டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களில்,மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்' என, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியா பாரிகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், அடுத்த ஆண்டு முதல், இதை கட்டாயமாக்க லாம். ஏற்கனவே வாங்கி வைத்துள்ள பட்டாசு களை விற்பனை செய்ய முடியாவிட்டால், வியாபாரிகளுக்கு மிக பெரிய பாதிப்பு ஏற்படும்.


இந்த உத்தரவால், டில்லி பிராந்தியத்தில் உள்ள பட்டாசு வியா பாரத்தை நம்பியுள்ள குடும்பங் கள், கவலையில் உள்ளன. 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை, டில்லி வியாபாரிகள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ளனர்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பது குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது. தீபாவளியன்று, அதிக ஒலி மாசு ஏற்படுத்தக் கூடிய பட்டாசு களை வெடிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதிக மாசு ஏற்படும் இடங்களை, மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்கும்.
-கருப்பணன், சுற்றுசூழல் துறை அமைச்சர்


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
01-நவ-201821:32:12 IST Report Abuse

raghavanஇரண்டே மணி நேரத்தில் எல்லோரும் அவசரம் அவசரமாக பட்டாசு போடும்போது அங்கங்கே தீ விபத்துக்கள் ஏற்படுமே. ஆபத்துக்கு விரையும் 108 வண்டிகள் அந்த அளவுக்கு இல்லையே. என்னய்யா பண்ணபோறீங்க?

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-நவ-201817:37:23 IST Report Abuse

இந்தியன் kumarபசுமை பட்டாசுகளை நாள் பூராவும் வெடிப்போம் .

Rate this:
01-நவ-201813:20:11 IST Report Abuse

நடராஜன்வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்கும் நான் இந்த ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய்க்காவது பட்டாஸ் வாங்கி நாள் முழுதும் விடப்போகிறேன்.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X