புதுடில்லி : போபர்ஸ் வழக்கில் சிபிஐ.,யின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் ஆட்சியின் போது இந்திய ராணுவத்திற்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் வாங்கியதில் ரூ.64 கோடி முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 2005 ம் ஆண்டு மே 31 ம் தேதி டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
தீர்ப்பு வெளியிடப்பட்ட 90 நாட்களுக்குள் மேல்முறையீட்டு செய்ய வேண்டும் என்ற விதியின்படி மேல்முறையீடு செய்ய சிபிஐ தவறி விட்டது. ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 4000 நாட்களுக்கு நாட்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்ய முடியாது என கூறி சிபிஐ.,யின் மனுவை ஏற்க மறுத்து, தள்ளுபடி செய்துள்ளது.
காங்., மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டாக சிபிஐ மற்றும் பா.ஜ.,வால் கூறப்பட்டு வந்தது போபர்ஸ் முறைகேடு ஆகும். காங்.,க்கு பெரும் நெருக்கடியாக இருந்து வந்ததில் போபர்ஸ் முறைகேடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE