கோவை: ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் குழப்பத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் குழப்பத்தில் உள்ளார். ரபேல் குறித்து ஒவ்வொரு இடததிலும் ஒரு விலையை கூறுகிறார். ஒரு முறை அம்பானிக்கு உதவியதாக கூறுகிறார். பின்னர் அதானிக்கு உதவியதாக கூறுகிறார்.சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளில் 25 சதவீதம் பொருட்களை அரசே கொள்முதல் செய்யும். ஏற்றுமதியில், இந்த நிறுவனங்களின் பங்கு உள்ளது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தமிழக முதல்வர் பழனிசாமி அனுப்பும் கடிதம் தொடர்பாக உடனடியாக நிதி அளிக்கப்பட்டு வருகிறது. நிதி தொடர்பாக தம்பிதுரை கூறிய கருத்து பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE