பதிவு செய்த நாள் :
'மோடிக்கே மீண்டும் வெற்றி'
50 சதவீதம் பேர் நம்பிக்கை

புதுடில்லி : இணையதள பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

மோடி,மீண்டும்,வெற்றி,50 சதவீதம் பேர்,நம்பிக்கை


'டெய்லி ஹன்ட்' என்ற, ஆங்கில இணையதள பத்திரிகை மற்றும், நீல்சன் இந்தியா என்ற ஆய்வு நிறுவனம் இணைந்து, சமீபத்தில் அரசியல் கருத்துக் கணிப்பு நடத்தின.

இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி குறித்தும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்தும், கேள்விகள் கேட்கப்பட்டன.

மொத்தம், 54 லட்சம் பேர், இந்த, 'ஆன்லைன்' கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். இதில், 63 சதவீதத்துக்கும் அதிகமானோர், நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாகவும், கடந்த தேர்தலின் போது, அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை, தற்போதும் தொடர்வதாகவும் பதில் அளித்தனர்.

மேலும், 'மோடி இரண்டாவது முறையாக பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்' என, 50 சதவீதத்துக்கும்

Advertisement

அதிகமானோர் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.

'நெருக்கடியான நேரத்தில், நாட்டை சிறப்பாக வழிநடத்தும் தலைவர் யார்' என்ற கேள்விக்கு, 'மோடி' என, 62 சதவீதத்தினரும், 'ராகுல்' என, 17 சதவீதத்தினரும் பதில் அளித்து இருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-நவ-201816:36:49 IST Report Abuse

Malick Rajaஅப்புறம் என்னாத்துக்கு தேர்தல் நடத்தவேண்டும் என்றுகூட சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ..

Rate this:
Anandan - chennai,இந்தியா
10-நவ-201810:31:50 IST Report Abuse

Anandanஎப்படி எல்லாம் முட்டு குடுக்க வேண்டிஇருக்கிறது.

Rate this:
yila - Nellai,இந்தியா
09-நவ-201800:34:56 IST Report Abuse

yilaமோடி Vs யார்? இது ஒன்றே போதும் பிஜேபி தோற்பதற்கு. யார் வேண்டாம் என்பதில் மக்கள் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள். அதானியின் விமானத்தை, மீண்டும் குஜராத் திரும்புவதற்கு, இப்போதே தயார் செய்து வைத்து விடலாம்.....

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X