பதிவு செய்த நாள் :
'மாஜி' அமைச்சர் அக்பருக்கு நெருக்கடி
மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

புதுடில்லி: பாலியல் புகாரால், மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, எம்.ஜே.அக்பர், 67, மீது, 'ஏஷியன் ஏஜ்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், பல்லவி கோகோய், 48, பாலியல் பலாத்கார புகார் கூறியுள்ளார்.

மாஜி அமைச்சர்,அக்பர்,நெருக்கடி,பெண்,பாலியல் புகார்


பா.ஜ.,வை சேர்ந்த, எம்.ஜே.அக்பர், வெளியுறவுத்துறை இணையமைச்சராக பதவி வகித்தவர். இவர், 'ஏஷியன் ஏஜ்' என்ற ஆங்கில பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியபோது, தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, சில பெண்கள் புகார் கூறினர். இதையடுத்து, அமைச்சர் பதவியை, அக்பர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அக்பர் மீது, ஏஷியன் ஏஜ் பத்திரிகையில் கட்டுரை பகுதிக்கான ஆசிரியராக பணியாற்றிய, பல்லவி கோகோய் என்பவரும், பாலியல் பலாத்கார புகார் கூறி உள்ளார். தற்போது, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய பப்ளிக் ரேடியோவில் பணியாற்றி வரும் பல்லவி கோகோய், அமெரிக்காவில் இருந்து, வெளிவரும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:

ஏஷியன் ஏஜ் பத்திரிகையில், 23 வயதில் பணியில் சேர்ந்தேன். 'ஓப் - எட்' என்ற கட்டுரை பக்கம் தயாரிக்கும் ஆசிரியராக இருந்தேன். மிக சிறிய வயதில், பெரிய பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நான் விரும்பி செய்த அந்த வேலைக்கு, பெரிய விலையை தர நேர்ந்தது. அப்போது, அந்த பத்திரிகை ஆசிரியராக இருந்த அக்பர், பாலியல் ரீதியாக, மோசமான வார்த்தைகளால், தரக்குறைவாக பேசுவார். தினமும், யாரையாவது, மிக சத்தமாக திட்டுவார்.

கடந்த, 1994ல் ஒரு நாள், அலுவலகம் சென்றிருந்தேன். நான் தயாரித்து வைத்திருந்த கட்டுரையை, அக்பரிடம் காட்டினேன். அதை புகழ்ந்து தள்ளிய அக்பர், திடீரென என்னை கட்டியணைத்து முத்தம் தந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவமானத்துடன் அங்கிருந்து வெளியே வந்தேன்.

நான் பணியில் சேர்ந்து ஓராண்டு ஆன பின், ஜெய்ப்பூரில் பணி நிமித்தமாக அக்பருடன் செல்ல நேர்ந்தது. அப்போது, ஓட்டல் அறையில், என்னிடம் தகாத முறையில் அக்பர் நடந்து கொண்டார். அவரை தடுத்தபோதும், தன் முழு பலத்தையும் பயன்படுத்தி, என் ஆடைகளை கிழித்தெறிந்தார். பின், என்னை பலாத்காரம் செய்தார்.

அந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அப்போது, நான் சொல்லி இருந்தாலும் யாரும் நம்பியிருக்க மாட்டர்கள். அவருடன் ஓட்டல் அறைக்கு சென்றதற்கு மிகவும் வருந்தினேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement

'சொல்வதெல்லாம் பொய்!'

பல்லவி கோகோய் கூறியுள்ள பாலியல் புகாரை, முன்னாள் அமைச்சர், எம்.ஜே. அக்பரும், அவரது மனைவி மல்லிகா அக்பரும் மறுத்துள்ளனர்.அக்பர் கூறியதாவது: என் மீது பல்லவி கோகோய் கூறியுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. பல்லவியும் நானும், பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் உறவு வைத்திருந்தோம். இது, எங்களுடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும். எங்கள் இடையில் இருந்த உறவால், என் குடும்பத்திலும் சர்ச்சை ஏற்பட்டது. பின், அந்த உறவு நின்று போனது. இவ்வாறு அவர் கூறினார். மல்லிகா அக்பர் கூறியதாவது: பல்லவி கோகோயால், என் குடும்பத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. நள்ளிரவில் கூட, பல்லவி கோகோய், என் கணவருக்கு போன் செய்வார். என் முன்னிலையில், என் கணவருடன் மிக நெருக்கமாக நடந்து கொள்வார். தற்போது, பல்லவி பொய் சொல்வதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர் கூறுவது முழு பொய் என்பதை உறுதியாக கூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-நவ-201806:13:56 IST Report Abuse

meenakshisundaramஇதையும் அக்பரின் மனைவியும் அக்பருமாக சேர்ந்து இப்படி கூறலாம் -அந்த செயல் இருவரின் ஒப்புதலோடு என்று ,பாவம் அக்பரின் மனைவி ஏதோ ஒரு விஷயத்திலிருந்து காப்பாற்றி விடலாமே என்று நினைக்கப்போயி அதுவே அப்புறம் தமிழ் கவிஞர் கதையை போல ஆகிறதோ?

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
03-நவ-201822:43:07 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்அக்பர் பிஜேபியாக இருந்ததால் பதவி விலகினார். அது நிதி மன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் இரண்டாவதாக ஒருவர் சொன்னது பற்றி அக்பர் பரஸ்பரம் புரிதலுடன் உறவு இருந்தது என கசொல்லிவிட்டார்.......இதனால் சில காலமாக குடும்பத்தில் பிரச்சனை இருந்தது என கூறிவிட்டார்......கருணாநிதி போல பல குடும்பங்களை சமாளிக்க இவருக்கு தெரியவில்லை ஏனெனில் இவர் பிஜேபி........திமுக அல்லவே........

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
03-நவ-201818:33:29 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்திமுகவை உங்களுக்கு பிடிக்கலாம்,ஸ்டாலின் பழமொழிகளை ரசிக்கலாம், கனிமொழி கவிதையை பாராட்டலாம், அழகிரி வார்த்தையை உத்தரவாக கூட ஏற்கலாம் அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் திமுக ஊழல் கட்சி நல்ல ஊழல் செய்யவில்லை என கூறுவது சிரிப்பு . எனவே நீங்கள் செய்வது மிகவும் சீரியசான காமெடியே................... ஆங்கிலத்தில் கருத்து சொல்லும் அளவிற்கு அறிவை கொடுத்த ஆண்டவன் சாரி ஆசிரியர் ஏன் உங்களுக்கு பகுத்து ஆராயக்கூடிய திடமான மனதை கொடுக்க மறந்தான்....... ..... .......பக்தி நம்பிக்கை வேண்டும் அது தாய்,தந்தை,குரு,நண்பன், கடவுள் ஆகியோரிடம் இருக்கலாம்.....ஆனால் ஊழல் செய்த , செய்யும், வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒரு ஊழல் குடும்பத்தின் மேல் தேவையா??................. மன்னிப்பு தெரியாமல் செய்தவர்களுக்கு சக மனிதன் கொடுப்பது.....ஆனால் திட்டமிட்டு செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டியது மன்னிப்பு அல்ல தண்டனையே.......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X