பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நியூட்ரினோ, நியூட்ரினோ ஆய்வு திட்டம், தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி ரகுவேந்திர ரத்தோர், தேனி  நியூட்ரினோ ஆய்வு மையம், நியூட்ரினோ திட்டம், பொட்டிபுரம் கிராமம், நியூட்ரினோ ஆராய்ச்சி,  ரகுவேந்திர ரத்தோர் , 
Neutrino Research Project, National Green Tribunal, Judge Raghuvendra Rathore, Theni Neutrino Research Center, Neutrino Project, Pottipuri Village, Neutrino Research, Raghuvendra Rathore,Neutrino,

புதுடில்லி : 'தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வன விலங்கு வாரிய அனுமதி பெறப்பட வேண்டும்' என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூட்ரினோ திட்டம் தொடர்வது கேள்விக்குறியாகி உள்ளது.

நியூட்ரினோ என்பது, மின்னியல் ரீதியில், நேர்மறை, எதிர்மறை இன்றி, நடுத்தன்மை உடைய நுண்துகள். எலக்ட்ரானை ஒப்பிடுகையில், இதன் அடர்த்தி, மிகக் குறைவு. கதிரியக்க தாக்கத்தால், நியூட்ரினோ உருவாகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம், புவியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து, நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக, மலை அடியில், 2.5 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை தோண்ட திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஒப்புதல் தந்துள்ளது. இதையடுத்து, 2015ல், இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்திட்டத்தை எதிர்த்து ஒரு அமைப்பு சார்பில், டில்லியில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த அமைப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், 'நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால், தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில், மக்களிடம் கருத்து கேட்டு, முடிவு செய்ய வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, கடந்த மாதம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நியூட்ரினோ திட்டம் தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு, திட்டத்தை செயல்படுத்தும் டாடா நிறுவனம் ஆகியவை,

எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும்' என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது. எழுத்து மூலம் பதில்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சமீபத்தில், மீண்டும் விசாரணை நடந்தது.

இந்த வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி, ரகுவேந்திர ரத்தோர் தலைமையிலான அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, வன விலங்கு வாரியத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். நியூட்ரினோ திட்டத்தால், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் வன விலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதுவரை, இத்திட்டத்தை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.ஆய்வு பணிகள் முடிந்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

'ஆந்திரா கொண்டு செல்ல அரசியல் சதி'

''நியூட்ரினோ திட்டத்தை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல, அரசியல் சதி நடக்கிறது. அந்த சதியை, தமிழக அரசு முறியடிக்க வேண்டும்,'' என, அறிவியல் ஆலோசகர், பொன்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை, பொட்டிபுரத்தில் அமையும் நியூட்ரினோ திட்டம் தொடர்பான, டில்லி பசுமை தீர்ப்பாய இடைக்கால உத்தரவை வரவேற்கிறேன். நியூட்ரினோ திட்டம் அமைவதன் ஒரு தொடர்ச்சி படிக்கல்லாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்காமல், தமிழக அரசு இழுத்தடித்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. தற்போது டில்லி பசுமை தீர்ப்பாயம், மத்திய வன விலங்கு வாரியத்திடம் அனுமதி பெற தான் உத்தரவிட்டிருக்கிறது. இத்திட்டம் குறித்து மக்களிடம் தவறான தகவல்களை, சிலர் பரப்புகின்றனர். நியூட்ரினோ திட்டத்தால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. இத்திட்டம் அமைந்தால், தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி, மேல்படிப்புக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இத்திட்டத்தை ஆந்திராவிற்கு கொண்டு செல்ல, அரசியல் சதி நடக்கிறது. இதை புரிந்து, தமிழக அரசு முறியடிக்க வேண்டும். பொதுவாக, இந்தியா எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபடக்கூடாது என, சில வெளிநாடுகள், மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும். அதன்படி, நியூட்ரினோ திட்டத்தை இந்தியாவில் இருந்து கொண்டு எதிர்ப்பவர்கள், வெளிநாட்டின் கைக்கூலிகள் தான். இவ்வாறு அவர் கூறினார்.Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
03-நவ-201822:02:53 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஸ்டாலின் வந்தா ஏதேனும் பாலும் தமிழகத்தில் ஓடுமாமே?................. இவர் படத்தை பேப்பரில் போட்டா அன்றைக்கு மழை கூட வராது.......அவ்வளவு ராசியான ஆளு

Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-நவ-201817:50:59 IST Report Abuse

elakkumananஅய்யா டுமிழன்களே, இந்த திட்டம் நிச்சயம் எதிர்த்து ஒழிக்கப்படவேண்டிய திட்டம்தான். இதில் உங்கள் சந்தேகங்களை தீர்க்க ஏராளமான டுமிழன்கள், மத சார்பற்ற மற்றும் (கொஞ்சம் கூட வெளி நாட்டுத்தொடர்பே இல்லாத ) "உண்மையான' என்ஜிஓஸ் இருக்காங்க. போதும் போதாதற்கு மிக அருமையான தீர்ப்புகளை வாரி வாரி வழங்கி வரும் SC சொல்லிருச்சு. இது எல்லாத்துக்கும் மேல, மோடி அரசு செஞ்சா எதுவுமே தப்புதான். அப்பொறம் பொருளாதாரம் , கல்வி வளரும்னு சொல்லுறீங்க. அதுக்கு எங்க டுமிழன் ஒரு பாதி போட்டான் பாருங்க - ' அந்த சயின்டிஸ்ட் வந்து இந்த ஏரியா பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுப்பங்களானு' எங்க டுமிழன் எப்பவுமே இப்பிடித்தான். நல்ல விஷயத்தை மட்டும்தான் தடுப்பான். இப்பிடி அறிவு பூர்வமா யோசிக்கிறதுதான் எங்க டுமிலன்ஸோட பிறவி குணம். அப்பொறம் மோடி, எனக்கு ஒன்றரை லச்சம் பிச்சை போடலை, தமிழ் நாடு வஞ்சிக்கப்படுத்து, வடக்கு வாழுது, தெற்கு தேயுது, இந்தி ஒழிக, மோடி ஒழிக அப்படின்னு கருப்பு கொடி பிடிப்பான். எல்லா ஸ்டேட்லயும் தண்ணி பிச்சை வாங்கி கடலில் விட்டு மகிழ்வான். தன் தலையில் மண்ணை வாரி போடுதல், டோகேனுக்கு ஒட்டு போடுறது, ஊழலை ஒடனே மறப்பது, நல்லதை கண்டிப்பா மறுப்பது இதெல்லாம் எங்கள் டுமிழர்களின் பிறவி குணம். நாசமா போங்க.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
03-நவ-201817:26:21 IST Report Abuse

IndhuindianMake an announcement for a Research Project, Exploration Project or even starting a large scale industry. The likes of Stalin, Vaiko, Thiruma, Vaiko, who are all scientists, technocrats, nuclear physicists, environmental scientists, geologists et al rolled into one are ready with opposing the project unmindful of the benefits to the State. As someone in these columns mentioned only projects suited to Tamil Nadu are Distilleries and wineries. They would not oppose them. On the contrary they would happily invest in these industries either directly or through their benamis. Could they provide scientific and empirical study as to how oil and gas exploration is environmentally damaging?. What is their knowledge of physics to oppose the Nutrino project or for opposing nuclear power projects (as it happened in Kudankulam). Do they realise that Nuclear power projects are technological marvel and challenging to highest level of civil engineering. They cannot even spell properly the Nuclear Fission or Fusion but ready with up in arms gathering the unemployed and unemployable. By their actions, they are taking the State in industrial deceleration. Expansion of NLC- Oppose., Privatise Salem Steel- Oppose. Quo vaids Tamil Nadu?

Rate this:
Esthov Antony Ashok Rayappan - Madurai,இந்தியா
03-நவ-201820:09:34 IST Report Abuse

Esthov Antony Ashok RayappanNeutrino observatory Laboratory regarding the Study of " God Particles", may be beneficial to human beings but certainly detrimental to birds ,reptiles and animals. If we disturb the equilibrium of the nature, certainly we will face the problem. It is NOT a Political issue, it is an environmental issue. No need for Tamil Nadu. ...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X