சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோர்ட் உத்தரவை கேரளா அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் 17-ம் தேதி கோயில் திறந்தபோது பெண்கள் பலர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க கோயிலை சுற்றியுள்ள பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை, ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில் வரும் திங்களன்று ( நவ. 5) சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட உள்ளதால், இன்று (நவ.3) நள்ளிரவு முதல் நவ. 6-ம் தேதி வரை பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE