சூரியசக்தி மின்சாரத்திற்கு, 'கிராஸ் மீட்டரிங்' : 'டெடா'விடம் கருத்து தெரிவிக்க திட்டம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சூரியசக்தி மின்சாரத்திற்கு, 'கிராஸ் மீட்டரிங்'
'டெடா'விடம் கருத்து தெரிவிக்க திட்டம்

மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, 'கிராஸ் மீட்டரிங்' முறையை அமல்படுத்துமாறு, 'டெடா' எனப்படும், எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் கருத்து தெரிவிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

சூரியசக்தி மின்சாரம், 'கிராஸ் மீட்டரிங்',டெடா, திட்டம்தமிழகத்தில், வீடு உள்ளிட்ட கட்டுமானங்களில் அமைக்கப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களில், உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை, மின் வாரியத்திற்கு விற்கலாம். இதற்காக, அந்த இடங்களில், மின் வாரியம், 'நெட் மீட்டர்' பொருத்துகிறது.அந்த மீட்டரில், சூரிய சக்தி மின் உற்பத்தி, அதில் மின் வாரியத்திற்கு வழங்கியது, கட்டட உரிமையாளர் பயன்படுத்திய மின்சாரம் போன்ற, விபரங்கள் பதிவாகின்றன. இந்நிலையில், சூரியசக்தி மின் திட்டத்திற்கு சலுகைகள் வழங்க, டெடா அமைப்பு,

சூரியசக்தி மின்சார கொள்கையை வெளியிட உள்ளது. இதற்காக, அரசு அலுவலகங்களில், கட்டாய சூரியசக்தி மின்சார பயன்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் அடங்கிய, வரைவு அறிக்கையை வெளியிட்டு, பலரிடமும் கருத்துகளை கேட்டுள்ளது. அதில், 'கிராஸ் மீட்டரிங்' என்ற, புதிய முறையை அமல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக, மின் வாரியம், கருத்து தெரிவிக்க உள்ளது.


இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்கூறியதாவது: நெட் மீட்டரில், மின் வாரியம், உற்பத்தியாளர் இடையே, யூனிட் அடிப்படையில், மின்சார கணக்கீடு நடக்கிறது. அதன்படி, உதாரணமாக ஒருவர், 100 யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு தருவதாகவும், அவர், 200 யூனிட், மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் வைத்து கொள்வோம்.அவர், 100 யூனிட் சூரியசக்தி மின்சாரம் போக, மீதி மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தினால் போதும். இதற்கு மாற்றாக, புதிய முறை அமல்படுத்த, 2017ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.அதில், சூரியசக்தி மின்சாரம் வாங்கியதற்கான கட்டணத்தை, மின் வாரியம் முழுவதுமாக செலுத்தி விடும். அதே போல், வாரியத்திடம் வாங்கும் மின்சார கட்டணத்தை, உற்பத்தியாளர் முழுவதுமாக செலுத்த வேண்டும். இதற்கு, இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. தற்போது, சூரியசக்தி கொள்கையை,டெடா வெளியிட உள்ளது. அதில், சூரியசக்தி மின்சாரத்தை கணக்கிட, நெட் மீட்டருக்கு பதில், கிராஸ் மீட்டரிங் பொருத்துமாறு கருத்து தெரிவிக்கப்பட உள்ளது.

Advertisement

இதன் வாயிலாக, சூரியசக்தி மின் நிலையம் உள்ள இடத்தில், இரு மீட்டர்கள் பொருத்தப்படும்.ஒன்றில், சூரியசக்தி மின்சாரம், மற்றொன்றில், மின் வாரிய மின்சாரம் பதிவாகும். அதற்கு ஏற்ப, வாரியத்திற்கு, கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல், மின் வாரியமும், உற்பத்தியாளருக்கு பணம் வழங்கும். வீடுகளில், 100 யூனிட் இலவசமாகவும், 500 யூனிட் வரை, மானிய விலையிலும், மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்த வீடுகளில், சூரிய சக்தி மின் நிலையம் அமைத்தால், ஏற்கனவே, மின்சார சலுகை கிடைப்பதுடன், அவர்களிடம் வாங்கும் சூரியசக்தி மின்சாரத்திற்கு, மின் வாரியம் பணம் செலுத்த வேண்டி வரும். இதனால், அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் மட்டும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க அனுமதி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துகளும் தெரிவிக்கப்படும். இவற்றை, சூரியசக்தி மின்சார கொள்கை வெளியிடும்போது, டெடா முழுவதுமாக ஏற்குமா என, தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
06-நவ-201804:06:47 IST Report Abuse

Manianசூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது மாதிரி இங்கேயும் வேண்டும்.ஆனால் மின்சாரத்தை இரவில் பெற சேமிப்புகலன்-பேட்டரி- தேவை. இதை ஏலோன் மஸ்க்( Elon Musk ) என்பவரின் கம்பனி மட்டுமே தயாரிக்கிறது. இவர்தான் சுமார் 450 கிலோ மீட்டர்(250 மைல்கள்) ஓடும் டெஸ்லா (Tesla) என்ற பேட்டரியில் ஓடும் காரை உற்பத்தி செய்கிறார். ஹைப்பர்லூப் என்பதுவும் இவருடைய கண்டு பிடிப்பே. இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பேட்டரிகளை பொருத்தி அவர்களின் சில மின்தேவைகளை காலக்கெடுவுக்கு முன்னேயே செய்துவிட்டார். ஸ்பேஸ் எக்ஸ் (Space X ) என்ற விண்வெளி ராகெட் கம்பனியும் வைத்துள்ளார்.சோலர் சிட்டிஎன்ற கம்பனி மூலம் சூரிய ஒளி சேகரிப்பு ஓடுகளை தயாரிக்கிறார். அவர் இரண்டு வித மின்சேமிப்பு கலன்களை உற்பத்தி செய்கிறார்-( Powerwall) பவர்வால் வீட்டு பாட்டரி ( home battery), (Powerpack) பவர் பேக்-( industrial-scale battery) தொழிற்சாலைக்கு தேவையான பேட்டரி.ஏலோனுடன், அவறை அழைத்து இந்தியாவில் மகாராஷ்டிராவில்- 40% கட்டிங் இல்லாமல் அந்த வீட்டு சேமிப்பு பேட்டரி தொழில் வந்தால் நாடே முன்னேரும். அவருக்கு 'பாரத ஒளி ரத்னா' பட்டம் தருவோமென்றால் சரி என்பார். மேலும் தில்லி-அகமதாபாத் ஹைப்பர் லூப் 1% வட்டியில், ஜப்பானின் புல்லட் ரயில் மாடலில்-கட்டுங்கள் என்றால் ஒரே கல்லில் பல மாங்காய்கள்-புதிய தொழில்கள், மின உற்பத்தி,வேலை வாய்ப்பக்கள், ஐடிகளில் புதிய தொழில் நுட்ப கல்வி, சுற்றுச் சூழல் மாசு குறைப்பு, பொக்குவரத்து நேர மிச்சம், குறு தொழில்கள்,ஏற்றுமதி வருமானம்.......ஆனால் இந்தியாவை நாசமாக்கி,எதையும் மக்களுக்கு பயன்பட விடக்கூடாது என்று ஒன்று சேரும் தேசவிரோத எதிர் கட்சிகள் சிதம்பரம்-சோனியா-ராகுல் தலைமையில் தடுக்குமே.

Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
07-நவ-201808:39:01 IST Report Abuse

vasanthanஅது போல திட்டங்களை ஏற்று கொள்ள மாட்டோம் . போராளீஸ் தயாராக இருக்கீர்களா உங்களுக்கு வேலை வந்து விட்டது. சுடலை காசு வாங்கி கொண்டு சொல்லும் இடத்தில எல்லாம் கைஎழுத்து போட்டு விட்டு அவரே எதிர்பார் , ஆமைக்கறி பீமன் சொல்லவே வேண்டாம் எழவு வீட்டிலும் காசு பார்க்கும் பார்ட்டி , வாயிலே விவசாயம் செய்யும் கொய்யாக்கண்ணு , தொட்டது துலங்கும் சைக்கோ , எச்ச பிரியாணி குருமா , ரெடியாகுங்கள் உங்களுக்கு வேலை வந்து விட்டது, உலகநாயகன் புரியாத கவிதை எழுதுவார், இன்னும் என்னென்ன கூத்து நாம் பார்க்க போகிறொமவ் ......

Rate this:
Manian - Chennai,இந்தியா
07-நவ-201813:12:57 IST Report Abuse

Manianஅம்மன் சார். திருடர்கள் கழகம் பற்றி மறந்து விட்டது. ஆனா கவலை இல்லை. அந்தமாதிரி தொழிற்ச்சாலை மஹாராஷ்ட்டிராவில்தான் வரும். அங்கே இதுவரை 40 % கட்டிங் கிடையாது. அப்பாவுகளுக்கு பொறுமை ஜாதி. போடுடா மோதலே எடுத்துக்கோ, அப்பிலே 15 % லாபத்தில் பங்குதான்னு பொறுமைய இருப்பானுக. "ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவு வாடி இருக்குமாம் கொக்கு" சரபோஜி மகாராசா தமிழிலிருந்து மராடிக்கு வலுவை இப்படி சொல்லி இருக்கார்னு சொன்னாராம். அந்த பயலுக ஒரு ராத்திரி பட்டினின்னாலும் ,நாளைக்கு விருந்துதானே இன்னு தொழில் சேய்க்குறானுக. இங்கே வந்த சாமன்களையே முழுக்க திருடுகிறது திருட்டுக்கழகம் காத்துக்கிடத்தே இருக்குதே. அப்பரோ இங்கே அதெல்லாம் வரவே வாராது. நாலு பயலுக இங்கே கூவுவானுக- மோடி வட நாட்டுககே எல்லாம் செய்வார், இங்கே எதுவுமே இல்லை. நம்மக்கு காய் விசிறி பனை ஓலையில் செய்திருக்கிறதே அதுவே போதும். ஆறு மணிக்கே தூங்கினா பாசு. டாஸ்மார்க்கிலே குடிச்சப்புறமாலே டயம் என்னாத்துக்கு?...

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-நவ-201810:36:10 IST Report Abuse

Manianசூறிய ஒளி மிஞ்சாரத்தை வீடுகளில் உபயோகிப்பவர்களும் அதை சேமித்து இரவில் உபயோகிக்கலாம். மேற்கு ஆஸ்திரேலியாவில் இது டெஸ்லா இதை செயல்படுத்தப் போடுகிறது. ஏற்கவனே இதுபோல் தொழிலுக்கும் செய்து விட்ட்து. Tesla battery will power unusual community storage project in Western ஆஸ்திரேலியா- Participants will virtually store their excess solar energy. இது இந்தியாவில் நடக்குமா, நடக விடுவார்களா என்பது வேறு கேள்வி. மேல் நாடுகளும் செய்தி மேம்பாட்டிற்கு ஹைடிரஜன் வாயு, காலைல கலை நிறுவுதல், சூறிய ஒளி மிஞ்சாரம் என்று பன்முகத்தன்மையோடு முன்னேறுகிறார்கள்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-நவ-201811:56:53 IST Report Abuse

Manianகடலில் காற்றாலை நிறுவுதல் (தரையில் சூடு அதிகமாவதை தடுக்க)......

Rate this:
LodakkuPaandi - Madurai,இந்தியா
04-நவ-201812:15:09 IST Report Abuse

LodakkuPaandiஇன்னிக்கு உபரி மின்சாரம் பத்தி பேசுவான். நாளைக்கு உள்ள மின்சாரத்துக்கு பணம் கட்ட சொல்வான்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
06-நவ-201811:34:28 IST Report Abuse

Manianஅப்போ ராவிலே சூரிய ஒளி மின்சாரம் இல்லாத போது, அவனுகதானே மின்சாரம் தரணும். ஓசியில் தருவானா? மின் கம்பம், மின்சார இணைப்பு எல்லாம் பழைய படி இருந்தாகணுமே. அதுக்கு யாரு காசு தருவாக்களாம்?. தடையில்லாம மிஞ்சராம் கெடக்குறது மொதல்லே வேணும். புதுசா தொழில்கள் வரவும். வேலை கெடைக்கணுமேன்னு நெனைக்காம, குத்தாமே கண்டுக்கிட்டு இருந்தா நாடே உருப்படாது. "இலவசம்" என்று கிடையாவே கெடையாது. எப்போ அதுக்கு வடடியோட திருப்ப தரனும்ங்கறதுதான் கேள்வி. காலியான மொய் மாதிரிதான் இதுவும்....

Rate this:
venkat - chennai,இந்தியா
04-நவ-201811:59:24 IST Report Abuse

venkatஅதிக பயன்பாட்டாளர்கள் மேற்கூரை சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளுவது பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடியின் புராட்சிகர 2022 ல் 100 GW சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில் ஊக்குவிக்கப் படுகிறது. பயன்பாட்டை துல்லியமாக இருந்த இடத்திலேயே கண்காணிக்க உதவ, தற்போது இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் மீட்டரில், இந்த மேற்கூரை சூரிய மின் உற்பத்தி உபரியை மின்வாரியத்திற்கு அனுப்புவதை கணக்கிடும் நெட் மீட்டரும் சேர்த்து அடக்குவது உறுதி செய்யப்பட வேண்டும். இதனால் ஸ்மார்ட் மீட்டரை பொருத்திய பிறகு, எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டாளர்கள் மேற்கூரை சூரிய உற்பத்தியை நிறுவிக்கொள்ளலாம்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
06-நவ-201811:28:58 IST Report Abuse

Manianஇதை நடை முறையை படுத்த எப்போவாது மாக்கள் எண்ணத்தை அரசாங்க வியாதிகள் கேட்டதுண்டா? மொதல்லே இது வரட்டும்....

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X