அக்பர் சொல்வது பொய்': பெண் பத்திரிகையாளர் ஆவேசம்

Added : நவ 04, 2018 | கருத்துகள் (29)
Share
Advertisement
அக்பர் சொல்வது பொய்': பெண் பத்திரிகையாளர் ஆவேசம்

புதுடில்லி:' மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த, பா.ஜ.,வின், எம்.ஜே., அக்பர், 67, இவர்'ஏஷியன் ஏஜ்' உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியராக அக்பர் இருந்தபோது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பல பெண் பத்திரிகையாளர்கள் 'மீடூ' என்ற பெயரில் புகார்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள, என்.பி.ஆர்., எனப்படும், தேசிய பொது ரேடியோ என்ற செய்தி நிறுவனத்தில் பணியாற்றும், பல்லவி கோகோய், தன்னை பலாத்காரம் செய்ததாக, அக்பர் மீது குற்றம்சாட்டி, ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதிஉள்ளார்.ஆனால், இதை, அக்பரும், அவருடைய மனைவி, மல்லிகாவும் மறுத்துள்ளனர். பரஸ்பரம் முழு ஒப்புதலுடன், பல்லவியுடன் உறவு வைத்திருந்ததாக, அக்பர் தெரிவித்து உள்ளார்.இதை, பல்லவி கோகோய் மறுத்துள்ளார். சமூக தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:என் சம்மதத்துடன் உறவு வைத்திருந்ததாக அக்பர் கூறியுள்ளது முழு பொய். பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.தைரியம்நான், என் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். நான் உண்மையை தொடர்ந்து பேசுவேன். இதன் மூலம், மற்ற பெண்களுக்கும் தைரியம் வந்து, இத்தகைய கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
04-நவ-201820:04:01 IST Report Abuse
Lion Drsekar அரசியலில் இவைகள் எல்லாம் சகஜம், சட்டசபை குறிப்பில் , குறிப்பாக தமிழக சட்ட சபை குறிப்பில் இருக்கிறது, யாரால் என்ன செய்ய முடிந்தது ?? இதுதான் ஜனநாயகம், சுட்டிக்காயாவர் இறந்தார், சுட்டி காட்டுபவர் இறப்பார் வந்தே மாதரம்
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
04-நவ-201818:50:48 IST Report Abuse
madhavan rajan இவ்வளவு நாட்கள் கழித்து உங்களுக்கு துணிவு வந்து நீங்கள் பேசும்போது அவர் மறுக்காமல் நடந்ததைக் கூறினால் நீங்கள் பொய் என்று சொல்வது ஏற்கமுடியாது.
Rate this:
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
04-நவ-201815:19:36 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் அக்பர் உறவுகொண்டோம் என்பதை மறுக்கவில்லை.இந்த உறவு எனது மனைவிக்கு தெரிந்து பல வருடங்களாக பிரச்சனை ஏற்பட்டு பிறகு பிரிந்து விட்டோம் என தெளிவாக சொல்லிவிட்டார். பின்பு வலுக்கட்டாயமாக என்றால் எப்படி. நீங்களோ உடைகளை கிழித்து பின் உறவு கொண்டார் என சொல்ல அவரோ உடைகளை களைந்துவிட்டு பிறகு உறவு கொண்டோம் என்கிறார். நடந்தது உண்மை பிறகு இதிலென்ன விளம்பரம். பொன்மணி வேற எதையோ எதிர்பார்க்கிறார்.................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X