நபிநந்தன் என்கின்ற நான்...| Dinamalar

நபிநந்தன் என்கின்ற நான்...

Added : நவ 04, 2018 | |
பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் நபிநந்தனுக்கு இந்தாண்டு மறக்க முடியாத 'தலை' தீபாவளி. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், ஹீரோவாக 'எவனும் புத்தனில்லை' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்களை எழுதிக்கொண்டே இருக்கலாம். 'இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற அந்த தன்னம்பிக்கை தந்த ஊக்கம்தான் இன்று தினமலர் சண்டே
நபிநந்தன் என்கின்ற நான்...

பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கும் நபிநந்தனுக்கு இந்தாண்டு மறக்க முடியாத 'தலை' தீபாவளி. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர், ஹீரோவாக 'எவனும் புத்தனில்லை' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக இவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்களை எழுதிக்கொண்டே இருக்கலாம். 'இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்ற அந்த தன்னம்பிக்கை தந்த ஊக்கம்தான் இன்று தினமலர் சண்டே ஸ்பெஷலில் பேச வாய்ப்பு தந்திருக்கிறது' என்கிறார் 31 வயதான நபிநந்தன்.


* அதென்ன நபிநந்தன்?

என் ஒரிஜினல் பெயர் ஹசன். சினிமாவுக்காக நபிநந்தன் ஆனேன். நமிநந்தி என்பது சிவனின் பெயர். 63 நாயன்மார்களில் ஒருவரின் பெயரும்கூட. நியுமராலஜி அடிப்படையில் இந்த பெயரை சூட்டிக்கொண்டேன்.* சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

எனக்கு சொந்த ஊர் குற்றாலம். படித்து வளர்ந்தது சென்னை. முதல்படம் கி.மு., அடுத்த படம் தர்மதுரை. அந்த படம்தான் எனக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. சின்ன வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு மோகம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். எனது சக மாணவன் ஹர்ஷவர்தனின் மாமா மாஸ்டர் சேகர். பழைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அவர் மூலம் சினிமாவுக்கான கதவு திறந்தது.* கூத்துப்பட்டறை மாணவராமே நீங்கள்

சினிமா வாய்ப்பு தேடி தினமும் ரயில், பஸ்சில் பயணித்து கசங்கிய சட்டையுடன் ஹர்ஷவர்தன் வீட்டிற்கு செல்வேன். அங்கு அவனது நல்ல சட்டையை அணிந்து வாய்ப்பு தேடிச்செல்வேன். பல ஆண்டுகள் வாய்ப்பு தேடி அலைந்ததுதான் மிச்சம். பிறகு கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தேன். அங்குதான் இயக்குனர் மஜீத் அறிமுகமாக, எனக்கு கி.மு., படம் வாய்ப்பு கிடைத்தது.* மீ டூ விவகாரம் குறித்து?

நான் ஹீரோவாக நடிக்கும் 'எவனும் புத்தனில்லை' படத்தில் மீ டூ விவகாரம் குறித்து நல்ல மெசேஜ் சொல்லி இருக்கிறோம். 8 சினிமாவில் ஜெயித்த நீங்கள், படிப்பில் பெயில் ஆனீர்களாமே ஆமாம். சினிமா வாய்ப்பு தேடி அலைந்தே பிளஸ் 2 வில் பெயிலானேன். வீட்டில் கடும் எதிர்ப்பு. ஏன்னா நான் குடும்பத்தில் ஒரு பிள்ளை. படிப்பு வரலை. நடிப்புதான் வருது. வாழ்ந்தாலும், செத்தாலும் எனக்கு சினிமா சாப்பாடுதான் என்றேன். பிறகு குடும்பத்திற்காக ஒருவழியாக படித்து பாஸ் ஆனேன். கல்லுாரிக்கு தினமும் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், அஞ்சல் வழியில் பி.பி.ஏ., படித்தேன். பிறகு என் மனநிலையை புரிந்துக்கொண்டு அப்பா, அம்மா சப்போர்ட் பண்ணினார்கள்.* கேமரா முன் நின்ற அனுபவம்?

இளமை புதுமை படத்தில் சப்போர்ட் கேரக்டரில் நடித்தேன். அதுதான் எனது முதல் கேமரா அனுபவம். அதில் ஹீரோ எனது நண்பனான ஹர்ஷவர்தன். அந்த படம் வெளிவரலை. அவன் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு 'சைனா' என்ற படம் எடுத்தான். விரைவில் ரீலீஸ் ஆகப்போகுது. நண்பர் தயாநந்தன் சீனுராமசாமி உதவியாளர். அவர் மூலம் தர்மதுரை பட வாய்ப்பு கிடைத்தது. எவனும் புத்தனில்லை படப்பிடிப்பு முடிந்த நிலையில் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. இனிமேல் தான் என் கேரியர் ஆரம்பிக்கிறது என நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, என்கிறார் நபிநந்தன்.

இவரை வாழ்த்த 98844 55770

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X