யுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி

Added : நவ 04, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
ரேடியோவில் பாடல்களுக்காக காத்து கொண்டிருந்த காலம் போனது. தற்போது இணையதளம், ஒவ்வொருவரின் கைகளுக்குள் வந்தவுடன் விரும்பிய பாடல்களை எளிதில் கேட்க முடிகிறது. 'டிவி' நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர், சிறுமியர் பலரும் பாடகர்களாக ஜொலிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். குழந்தை பருவம் முதல் பாடல், இசை என பயணித்து கொண்டிருக்கிறார் பிளஸ் 2 மாணவி ப்ரியா மாலி,17. தற்போது சினிமா
யுவன்சங்கர் ராஜாவுடன் டூயட் பாடினேன் - நெகிழ்கிறார் 17 வயது பாடகி

ரேடியோவில் பாடல்களுக்காக காத்து கொண்டிருந்த காலம் போனது. தற்போது இணையதளம், ஒவ்வொருவரின் கைகளுக்குள் வந்தவுடன் விரும்பிய பாடல்களை எளிதில் கேட்க முடிகிறது. 'டிவி' நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர், சிறுமியர் பலரும் பாடகர்களாக ஜொலிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். குழந்தை பருவம் முதல் பாடல், இசை என பயணித்து கொண்டிருக்கிறார் பிளஸ் 2 மாணவி ப்ரியா மாலி,17. தற்போது சினிமா பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் அவர் அளித்த பேட்டி...

* குடும்பத்தை பற்றி....திருச்சி சொந்த ஊர். அப்பா பெங்களூருவில் பணியாற்றுவதால் அங்கு சென்றோம். தற்போது என்னுடைய இசை பயணத்திற்காக சென்னையில் குடியேறி விட்டோம். அம்மா வித்யா மாலி என்னுடைய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கிறார்.
* இசையில் ஆர்வம்...சிறுவயதில் இருந்து என்னுள் இசை ஆர்வம் இருந்தது. ஆர்வத்தை அறிந்த எனது அம்மா, முறையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்துஸ்தானி இசை உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள துவங்கினேன். கிடார், பியானோ வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
* சாதிக்க எண்ணம் உருவானது எப்போது...5 வயது முதல் பாடுவதையும், இசை கற்பதையும் முறையாக செய்கிறேன். அதை தொடர்ந்து தனியார் 'டிவி' நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தேர்வாகினேன். ஒரு இசை நிகழ்ச்சியில் ஜெயிக்க அதிக வாய்ப்பு இருந்தது. அந்த சமயத்தில் அம்மாவிற்கு சிறு விபத்து ஏற்பட்டது. அதனால் மனமுடைந்த என்னால் அந்நிகழ்ச்சியில் ஜெயிக்க முடியாமல் போனது. அப்போது தான் இசைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

* சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பு பற்றி...யுவன்சங்கர்ராஜா குரல் தேர்வு செய்வதாக கேள்விப்பட்டோம். அவரின் மெயில் ஐ.டி.,க்கு என்னுடைய குரல் பதிவு அனுப்பினோம். மூன்று மாதங்களுக்கு பின் அழைத்தார். சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்', 'ஜூனியஸ்' படத்தில் அவருடன் டூயட் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் என்.டி.ஆர்., பேரன் நடிக்கும் படத்திலும், கன்னடத்திலும் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

* பிற மொழியில் பாடுகையில் உச்சரிப்பில் சிரமம் இல்லையா...இல்லை. எனக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் தெரியும். இதனால் என்னால் சிறப்பான உச்சரிப்பை கொடுக்க முடியும்.

* பிடித்த இசையமைப்பாளர்கள்....யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் பிடிக்கும்.
* எந்த மாதிரியான பாடல்கள் பிடிக்கும்...கானா, சோகம், காதல், மெலோடி பாடல்கள் பிடிக்கும்.

* உங்களின் பொழுதுபோக்கு...நான் குறும்படங்களுக்கு இசையமைத்து கொடுக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சினிமாவுக்கும் இசையமைப்பேன். போட்டோகிராபி, டிரக்கிங் பிடிக்கும். பேட்மின்டன் விளையாடுவேன்.

* எதிர்கால திட்டம்...நல்ல பாடகி , இசையமைப்பாளர் என மக்கள் கொண்டாடும் அளவிற்கு என்னை தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.இவரை பாராட்ட 97413 98700

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-நவ-201808:36:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கொஞ்ச நாள் கழிச்சி மீ டூ ன்னுக்கிட்டு வராம இருந்தா சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X