தமிழ் கைதிகள் விடுதலை? ராஜபக்சே தந்திரம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தமிழ் கைதிகள் விடுதலை?
ராஜபக்சே தந்திரம்

கொழும்பு : அண்டை நாடான இலங்கையில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே, தமிழ், எம்.பி.,க்களின் ஆதரவை பெறும் நோக்கில், சிறையில் போர் கைதிகளாக உள்ள தமிழர்களை விடுதலை செய்வார் என கூறப்படுகிறது.

தமிழ் கைதிகள்,விடுதலை, ராஜபக்சே,தந்திரம்


ஆதரவு:


இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற, சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவிஏற்றனர்.

சமீப காலமாக, விக்கிரம சிங்கேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி, புதிய பிரதமராக,

ராஜபக்சேவை நியமிப்பதாகவும், அதிபர் சிறிசேன அறிவித்தார். தற்போதைய நிலையில், 225 உறுப்பினர்கள் உடைய இலங்கை பார்லி.,யில், ரணிலின், யு.என்.பி.,க்கு, 106 உறுப்பினர்கள் உள்ளனர். யு.பி.எப்.ஏ.,க்கு, 95 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழர் கட்சியான, டி.என்.ஏ., எனப்படும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, 16 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் ஜே.வி.பி., கட்சிக்கு, ஆறு உறுப்பினர்களும் உள்ளனர்.

தீவிரம்:


பார்லியில், ராஜபக்சே தலைமையிலான ஆட்சிக்கு எதிராக, கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க, ராஜபக்சே ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராஜபக்சேவின் மகன், நமல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள பதிவில், 'இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக, பிரதமர் ராஜபக்சே விரைவில் முடிவு எடுக்க உள்ளார்' என, தெரிவித்துள்ளார்.

'சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.தமிழ் கைதிகளை விடுவிப்பதன் மூலம், தமிழ் எம்.பி.,க்களின் ஆதரவை பெற்று, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடித்து விட முடியும் என, ராஜபக்சே கருதுவதாக தெரிகிறது.

Advertisement

இதனால், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது கைது செய்யப்பட்டு, தற்போது சிறைகளில் உள்ள தமிழர்கள், விரைவில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

'குழப்பத்துக்கு தீர்வு காணுங்கள்'

'பார்லிமென்ட் கூட்டத்தை விரைவில் கூட்டி, தற்போதுள்ள அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண வேண்டும்' என, தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கையில், புதிய பிரதமராக, ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து அரசியல் குழப்பம் தீவிரம் அடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே - ராஜபக்சே இடையிலான அதிகார போட்டியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு பெற்றவர் மட்டுமே வெற்றி பெற முடியும் சூழல் உள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, எம்.பி., தர்மலிங்கம் சித்தாந்தன், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''பார்லிமென்ட் கூட்டத்தை விரைவில் கூட்டி, தற்போதைய குழப்பத்துக்கு தீர்வு காணும்படி, அதிபரை வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohini Tharmakulasingham - Jaffna,இலங்கை
05-நவ-201812:33:51 IST Report Abuse

Rohini Tharmakulasinghamஅன்புள்ள தமிழ்நாட்டு உள்ளங்களுக்கு ஓன்று கூற விரும்புகினறேன். இலங்கையில் வாழும் தமிழர்கள் கல்வி வேலைவாய்ப்பு உயர் பதவிகள் பொருளாதாரம் ஆகியவற்றில் உயர்வாக இருக்கிறார்கள். நாட்டை பிரிக்கும் கோரிக்கை சுயநலதமிழ் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டது. தமிழர்கள் மட்டுமல்ல முழுநாடும் பாதிக்கப்பட்ட்து. எங்கள் நாட்டில் ஆரம்ப வகுப்பு ஒன்றிலிருந்து தமிழ் இந்துசமயம் கடடய பாடங்கள். நீதிமன்றங்களில் தமிழ் மொழி அரச நிர்வாகத்தில் தமிழ் மொழி. இலங்கை முழுவதும் தமிழ் மொழி பாடசாலைகள் உள்ளன.நம்பமுடியாத செய்தி ஓன்று.

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-நவ-201819:47:44 IST Report Abuse

Sanny உண்மை, ஆனால் தமிழனுக்கு இடையில் ஒற்றுமை இல்லையே, தமிழனுக்கு அங்கு போதிய பாதுகாப்பு இல்லையே, அதுதானே பிரச்சனை,...

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
05-நவ-201810:39:55 IST Report Abuse

தமிழ் மைந்தன் இவரின் ஆதரவாளர்களான திமுக குடும்பம் மற்றும் சோனியா குடும்பத்திற்கு மட்டுமே இவரை பற்றி முழுமையாக தெரியும்

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
05-நவ-201809:54:20 IST Report Abuse

VOICEபோராடுவதற்கு பதில் பிரபாகரன் இது போன்று அரசியல் கட்சி தலைவராக MP தனது கைகளில் வைத்துஇருந்தால் இன்று அவர் ஒரு உயர்ந்த இடத்தில இருந்திருப்பார். வந்திருக்க வேண்டும். முதலில் புத்தி தீட்டவேண்டும் அதோடு கத்தியும் தீட்டி வைத்துக்கொள்ளவேண்டும் தேவைப்பட்டால் உபயோகப்படுத்த.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X