இந்தியாவை போல் தீபாவளி கொண்டாடும் 10 நாடுகள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவை போல் தீபாவளி கொண்டாடும் 10 நாடுகள்

Added : நவ 05, 2018 | கருத்துகள் (35)
Advertisement
Hari Deepavali, Diwali festival, Diwali celebration,இந்தியா, தீபாவளி, வெளிநாடுகள், பிஜி இந்தியர்கள், இந்தோனேசியா, ஹரி தீபாவளி, தீபாவளி பண்டிகை, தீபாவளி கொண்டாட்டம், அமெரிக்கா, 
India, Deepavali, Overseas, Fiji Indians, Indonesia,  USA,

புதுடில்லி : இந்தியாவில் கொண்டாடப்படுவதை போன்று அதே உற்சாகத்துடன் உலகின் முக்கியமான 10 நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

பிஜியில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளதால் அங்கு உற்சாகத்துடன், பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அங்கு தீபாவளியை முன்னிட்டு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் தீபாவளியன்று இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசுகள், வாணவேடிக்கை வெடித்தும் மக்கள் கொண்டாடுகின்றனர்.

மலேசியாவில் 'ஹரி தீபாவளி' என்ற பெயரில் சிறிது வித்தியாசமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்கள் காலையில் எண்ணெய் குளியலுடன் நாளை துவக்குகிறார்கள். பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மலேசியாவின் பட்டாசுகள் கொளுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், இனிப்புக்கள் மற்றும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடுகிறார்கள்.

மொரீசியசில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் என்பதால் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அங்கு தீபாவளியன்று பொது விடுமுறையும் விடப்படுகிறது. நேபாளத்தில் தீபாவளி அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் தசைன் பண்டிகைக்கு பிறகு மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. லட்சுமி பூஜைகளும் நடத்தப்படுகிறது.
இலங்கையில் தீபாவளிக்கென பிரத்யேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுகிறது.
கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வசிக்கிப்பதால் இங்கு 3வது அதிகாரப்பூர்வமாக மொழியாக பஞ்சாபி உள்ளது. இதனால் தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டுகிறது.

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்குவதால், அப்பகுதி வண்ண விளக்குகளால் பிரகாசிக்கிறது. தசராவும், அதுனைத் தொடர்ந்து வரும் தீபாவளியும் அதிக மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் இந்தியாவைப் போன்று தீபாவளி பஜாரும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மற்றும் லிசெஸ்வர் பகுதியில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் பிரம்மாண்டமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் தீபாவளியை மக்கள் இந்தியாவை போன்று கொண்டாடுகிறார்கள். கரீபியன் தீவுகளில் ராமாயண காட்சிகள் காட்சிபடுத்தப்பட்டு, முக்கிய அம்சமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இதே போன்று நியூசிலாந்தின் ஆக்லாந்து, அமெரிக்காவின் சான் ஆன்டானியோ பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தீபாவளி பண்டிகையை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
08-நவ-201815:43:10 IST Report Abuse
இந்தியன் kumar உலகத்தில் உள்ள அணைத்து நாடுகளிலும் இருள் அகன்று இறைவன் அருளால் தீப ஒளி பெருகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
07-நவ-201811:00:54 IST Report Abuse
Jayvee சன் டிவி மற்றும் கலைஞர் டிவி மட்டும் ஹிந்து பண்டிகையைகளை குறிப்பிடாமல் விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் என்று கூறியும், இஸ்லாமிய மற்றும் கிருத்தவ பண்டிகை நாட்களை குறிப்பிட்டு கூறி கொண்டாடுவதும் முக்கியமான ஒன்று.. இதையும் மக்கள் அறிந்து கொள்ளட்டும்.. கேடு கெட்ட திராவிட கலாச்சாரம் ஒழிக..
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
06-நவ-201808:04:46 IST Report Abuse
Chanemougam Ramachandirane தீபாவளி நல் வாஸ்த்துக்கள் நாட்டு ,மக்கள் நலம் பெறவேண்டும் என்றல் நம்மால் தேர்ந்தெடுத்த நபர்கள் முதலில் நமக்கு எல்லா சேவையையும் சட்டம் , கல்வி, வேலை வாய்ப்பு வரை இலவசமாக அதுவும் செலவில்லாமல் கிடைக்க வழி செய்தலே போதும் மேலும் ஏழை பணக்காரன் என்ற நிலையை கொண்டு வந்து ஜாதியை முற்றிலும் ஒழிக்க சட்டத்தை நிறைவேற்றணும் ஜாதியை 2 வருடங்களில் படி படியாக ஒழிக்கலாம் இதனால் சட்டம் ஓஸுங்கு சீர் கெடும் நாட்டில் என்பதினை ஆளுமைகள் உணர்ந்து மத்தியில் சட்டம் இயற்ற ஊடகங்கள் இயக்கங்கள், face புக் முகவர்கள் இந்த தீபாவளி திரு நாளில் அரசுக்கு வெளிப்படுத்தனும் நாடு வளம் பெற மக்களை ஜாதி என்கிற பெயரால் பிரிப்பதை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X