அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் கூட்டணி:
பன்னீர் உறுதி

சென்னை : ''எங்கள் கொள்கையை ஏற்று, இணைந்து செயல்பட முன்வரும் கட்சிகளுடன், தேர்தலில் கூட்டணி அமைப்போம்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேர்தல்,கூட்டணி, பன்னீர், உறுதி


சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தினகரன், பல முறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ள தகவல், தொடர்ந்து எங்களுக்கு வருகிறது. துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில், அ.தி.மு.க.,வினர் போட்டி கூட்டம் நடத்தியது, தொடர்பான முழு விபரமும், இரு தரப்பினரிடமும் கேட்கப்பட்டுள்ளது.


திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட, 20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், விரைவில் வர உள்ளது. அ.தி.மு.க., சார்பில், 20 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை துவக்கி உள்ளனர். 20 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும்.

தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி, ஏற்கனவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. எங்கும் பாதிப்பு இல்லாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்த சூழ்நிலையிலும், முதல்வர், 'எட்டு தொகுதியில் வெற்றி பெற வேண்டும்' என, பேசவில்லை. முழுமையாக, 20 தொகுதிகளிலும், உறுதியாக வெற்றி பெற வேண்டும்' என்று தான் கூறினார்.

Advertisement


பிரிந்து சென்றவர்கள், திரும்பி வர வேண்டும் என, அழைப்பு விடுப்பது, எங்கள் பெருந்தன்மை. ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும், அவர்கள் மனநிலை. அ.தி.மு.க., எந்த சூழ்நிலையிலும், எந்த தேர்தலாக இருந்தாலும், தனித்து நின்றுதான் வெற்றி பெறும் என்ற முடிவை, ஜெ., ஏற்கனவே எடுத்திருந்தார். லோக்சபா தேர்தலில், ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், எங்களுடன் சேர முன்வந்தால், இணைந்து போட்டியிடுவோம். இவ்வாறு பன்னீர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
10-நவ-201810:44:36 IST Report Abuse

Jaya Ramநல்ல கோரிக்கை ஆனால் உங்களை கட்சிகள் அணுக வேண்டுமே

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
06-நவ-201820:03:28 IST Report Abuse

Paranthamanநல்லவர்களுக்கு துணை நிற்க மறுக்கும் டோக்கன் கூட்டங்கள்.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
06-நவ-201820:01:02 IST Report Abuse

Paranthamanபத்து வருடங்களுக்கு பழனிசமி யே தமிழக முதல்வர். எழுதி வைத்துக்கொள்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X