எப்.ஐ.ஆர்.,ல் சொதப்பிய ரூரல் போலீஸ்!| Dinamalar

எப்.ஐ.ஆர்.,ல் 'சொதப்பிய' ரூரல் போலீஸ்!

Added : நவ 06, 2018
Share
புத்தம்புது பட்டுச்சேலை கட்டி, எளிமையான அலங்காரத்தில், பெரிய துணிப்பையுடன் சித்ரா வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, 'அக்கா! இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று கட்டி அணைத்துக்கொண்டாள்.''முதல்ல தமிழ்ல வாழ்த்துச் சொன்னது நீதான்டி...தீபாவளி வாழ்த்துகள்; என்ன கொண்டு வந்திருக்க?'' என்று கேட்டு பையைப் பிரித்தாள் சித்ரா.உள்ளே சில்வர் பாத்திரங்களில், அதிரசம், முறுக்கு, சீடை,
 எப்.ஐ.ஆர்.,ல் 'சொதப்பிய' ரூரல் போலீஸ்!

புத்தம்புது பட்டுச்சேலை கட்டி, எளிமையான அலங்காரத்தில், பெரிய துணிப்பையுடன் சித்ரா வீட்டுக்குள் நுழைந்த மித்ரா, 'அக்கா! இனிய தீபாவளி வாழ்த்துகள்' என்று கட்டி அணைத்துக்கொண்டாள்.''முதல்ல தமிழ்ல வாழ்த்துச் சொன்னது நீதான்டி...தீபாவளி வாழ்த்துகள்; என்ன கொண்டு வந்திருக்க?'' என்று கேட்டு பையைப் பிரித்தாள் சித்ரா.உள்ளே சில்வர் பாத்திரங்களில், அதிரசம், முறுக்கு, சீடை, போளி என பாரம்பரியமான பலகாரங்கள்; வீடே மணக்க ஆரம்பித்தது.''எல்லாமே அம்மாவும், பாட்டியும் வீட்டுலயே செஞ்சது...என்ன இருந்தாலும், நம்ம பாரம்பரியத்தை மறக்கலாமா...இந்த வருஷம் நானும் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்!'' என்றாள் மித்ரா.''சூப்பர்ப் மித்து...இந்த தீபாவளிக்கு, 'ஸ்வீட்' கடைகள், ஜவுளிக்கடை எல்லாத்துலயுமே, பிஸினஸ் கொஞ்சம் குறைஞ்சிருச்சின்னு தான் சொல்றாங்க...உண்மையா இருக்குமா?'' என்று கேட்டாள் சித்ரா.''இருக்கலாம்...ஆனா, இந்த வருமானம் 'கம்மி'ங்கிற பிரச்னையெல்லாம் ஆபீசர்களுக்குக் கிடையாது; அவுங்க வழக்கம் போல வசூல் தட்டி எடுத்துட்டாங்க!'' என்றாள் மித்ரா.''அதுலயும் இந்த வருஷம், ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல தான் அதீத வசூலாம்; வடக்கு தாலுகா தான், 'டாப்'பாம்... சிட்டிக்குள்ள இருக்குற நிலங்களை 'டிஜிட்டல்' ஆவணமாக்குறதுக்கு, பட்டா பெயர் மாத்துற வேலை அங்க நடக்குது; அந்த 'கேம்ப்'ல, என்ன டாக்குமென்ட் கொடுத்தாலும், 'அதில்லை; இதில்லை'ன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்லி, லட்சம் லட்சமா பணம் பறிக்கிறாங்களாம்!'' என்றாள் சித்ரா.''இப்போ தாசில்தார்கள் காட்டுல தான் பணமழை பெய்யுது...மாவட்ட நிர்வாகம், ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இருக்குறதால, வஞ்சகமில்லாம வசூல் பண்றாங்க!'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...அப்பிடியெல்லாம் வசூல் பண்ணித்தான், நம்ம மாவட்ட ஆபீசரோட மகனுக்கு நிச்சயதார்த்தம் பண்றதுக்கு, கோயம்புத்துார்ல இருந்து விருதுநகருக்கு பத்து இன்னோவா, சாப்பாடு, தங்குறதுன்னு மத்த ஏற்பாடு எல்லாம் 'சிறப்பா' பண்ணி அனுப்பிருக்காங்க. அஞ்சு தாசில்தார்கள் தான், எல்லாச் செலவையும் பிரிச்சு ஏத்துக்கிட்டாங்களாம்!'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்க்கா...அந்த கல்யாண விவகாரத்துல, வேற ஒரு மேட்டரும், பங்களா ஏரியாவுல பரபரப்பா ஓடிட்டு இருக்கு; அது வேண்டாம்!'' என்று பேச வந்ததை பாதியில் விழுங்கினாள் மித்ரா.மித்ரா கொண்டு வந்த பலகாரங்களை, சித்ரா வீட்டிலுள்ள எல்லோரும் ரசித்து, ருசித்து, புகழ்ந்து கொண்டிருந்தனர்; எல்லோருக்கும் இஞ்சி டீ போட்டு எடுத்து வந்தார், சித்ராவின் அம்மா. மித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...''அக்கா...தீபாவளி நேரத்துல, ஆர்.டி.ஓ.,ஆபீஸ்ல நடந்த ரெய்டுல, பிரேக் இன்ஸ்பெக்டர் பாபு இறந்து போனாரே... அந்த டிபார்ட்மென்ட்காரங்க எல்லாரும் பயங்கர 'அப்செட்'ல இருக்காங்க!''''ரெய்டு நடத்துனதெல்லாம் தப்பில்லை மித்து...ஆனா, அந்த பிரேக் இன்ஸ்பெக்டர்ட்ட 'என்கொயரி' பண்றப்போ, விஜிலென்ஸ்காரங்க, கொஞ்சம் மனிதாபிமானத்தோட நடந்திருந்தா, அவரோட உயிரைக் காப்பாத்திருக்கலாம்கிறாங்க...''''அது தெரியலை...இந்த மேட்டர்ல, விஜிலென்ஸ் மேல, எல்லாருக்கும் கோபம் என்னன்னா...இதே மாவட்டத்துல, ஆளுங்கட்சிக்கு வேண்டிய சில ஆபீசர்கள் கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு, அஞ்சாறு வருஷமா, இங்கேயே அசையாம இருக்காங்க. அவுங்களை ஏன் விஜிலென்ஸ் கண்டுக்கிறதே இல்லைங்கிறது தான்!''''உண்மைதான்க்கா...கார்ப்பரேஷன்ல ஆளுங்கட்சி 'சப்போர்ட்'ல இருக்கிற சில ஆபீசர்கள் சம்பாதிச்சதுக்கு அளவே இல்லை; யாரையுமே கை வைக்க மாட்டேங்கிறாங்களே...ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருந்து, கிழக்கு மண்டலத்துக்கு வந்த ஆபீசர், 'எதுக்கெடுத்தாலும் மினிஸ்டர் பேரை பயன் படுத்துறார்'னு பேசுனோமே...அவரு இப்போ, தன்னோட 'லஞ்ச ரேட் கார்டை' அதிகப்படுத்திட்டாராம்''''என்ன மித்து சொல்ற...ஒண்ணுமே புரியலை!'' என்றாள் சித்ரா.''அக்கா...முன்னெல்லாம் ஒரு கையெழுத்துக்கு, ரெண்டாயிரம், அஞ்சாயிரம்னு வாங்கிட்டு இருந்தவரு, 'என்னைப் பத்தி பேப்பர்லயே வந்துருச்சு; அதனால, 'ரேட்' கூடிருச்சு'ன்னு சொல்லி, 'லஞ்ச ரேட்'டை ரெண்டு மடங்காக்கிட்டாராம்!'' என்றாள் மித்ரா.''சரி...அதை விடு மித்து...வடவள்ளியில டிஎம்கேகாரர் ஒருத்தரை, நிலமோசடி பண்ணுனதா டி.சி.பி.,யில அரெஸ்ட் பண்ணுனாங்களே...மாஜிஸ்திரேட் 'ரிமாண்ட்' பண்ண முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாரே...என்னாச்சு?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ஆர்.எஸ்.பாரதி பேசுன கூட்டத்துக்கு, அவர் தான் எல்லா ஏற்பாடும் பண்ணுனார்ங்கிற கோபத்துல தான், எப்பிடியாவது அவரை தீபாவளிக்கு 'உள்ளே' வைக்கணும்னு அவசர அவசரமா எப்.ஐ.ஆர்., போட்ருக்காங்க. ஆனா, சைட் நம்பர், சர்வே நம்பர் எல்லாமே தப்பா இருந்திருக்கு; அது மட்டுமில்லாம, ஏ.பி.டி.ஓ., கொடுத்த புகார்ல, அவரோட பேரே இல்லாம, எப்பிடி எப்.ஐ.ஆர்.,ல பேரு சேர்த்தீங்கன்னு கேள்வி வந்துச்சாம்!'' என்றாள் மித்ரா.''எனக்குத் தெரிய...அந்த உடன் பிறப்பு ஒண்ணும் சாதாரண ஆளு இல்லை...அவர் மேல, இந்த மாதிரி நில மோசடி புகார் நிறையவே கேள்விப்பட்ருக்கேன்; ஆனா, இந்த கேஸ்ல...ஆளுங்கட்சி சப்போர்ட்ல வலம் வர்ற 'பாப் கட்டிங்' ஆபீசரம்மாதான் படு சொதப்பு சொதப்பிட்டதா போலீஸ்ல பேசிக்கிறாங்க!'' என்றாள் சித்ரா.''நம்ம ரூரல் போலீஸ் பண்றதெல்லாம் கொஞ்சம் எல்லை மீறி தான் போயிட்டு இருக்கு...மதுக்கரை ஸ்டேஷன்ல, கோர்ட் டூட்டி பாக்குற ஏட்டய்யா மேலயே திருட்டு கேஸ் போட்ருக்காங்க...ஏதோ 'லேண்ட் மேட்டர்'தான் பின்னணியாம்...ஆளுங்கட்சி பிரஷர்ல தான், அவர் மேலயும், அவரோட குடும்பத்துக்காரங்க எல்லார் மேலயும் கேஸ் போட்ருக்கிறதா, போலீஸ்காரங்க குமுறுறாங்க!'' என்றாள் மித்ரா.''சிட்டியிலயும் போலீஸ் பேரைக்கெடுக்க நிறைய்யப்பேரு இருக்காங்க...காந்திபுரம் ஏரியாவுல, தள்ளுவண்டிக் கடைங்க நிறைய இருக்கிறதுக்குக் காரணமே, 'குழந்தை' பேர்ல இருக்குற ஒரு எஸ்.ஐ.,தான்...இப்போ தீபாவளிக்கு, பெரிய பெரிய ஸ்வீட் கடைகள்ல தினமும் ஏழெட்டு பாக்கெட் வாங்கிட்டுப் போயிட்டு, அதுக்கான 'பில்'களை எல்லாம் இந்த தள்ளுவண்டிக்காரங்க தலையில கட்டிட்டாராம்!'' என்றாள் சித்ரா.வெளியில் ஆம்புலன்ஸ் சத்தம் அலறிக் கொண்டு சென்றதைக் கேட்டதும், பேச்சு மாறியது...''நம்ம ஜி.எச்.,ல திடீர் விசிட் அடிச்ச ஹெல்த் மினிஸ்டர், எல்லாரையும் 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிட்டார்னு கேள்விப்பட்டேன்...என்ன நடந்துச்சாம்?'' என்று கேட்டாள் மித்ரா.''யூஸ்வலா...விஜய பாஸ்கர் ஜி.எச்., வர்றதுன்னா முன் கூட்டியே சொல்லிருவாங்க; இவுங்களும் சுத்தம் பண்ணி, 'ஜிக் ஜாக்' வேலையெல்லாம் பண்ணிருவாங்க; அன்னிக்கு, அவர் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான், தகவலே வந்திருக்கு. அதுவும், லோக்கல் மினிஸ்டர் வர்றதுக்கு முன்னாடியே வந்துட்டாராம்'' என்றாள் சித்ரா.''ஓ...கிடைச்ச 'கேப்'புல, அவரா 'ரவுண்ட்ஸ்' கிளம்பிட்டாரோ?'' என்று கேட்டாள் மித்ரா.''இல்லை...ஏதாவது வார்டு பாக்கலாம்னு அவர் சொன்னப்போ, டிராமா, எமர்ஜென்ஸி பாக்குற 'டாய் வார்டு'க்கு, அவுங்களா கூப்பிட்டுப் போயிருக்காங்க; அதைப் பாத்துட்டு, 'என்ன இவ்ளோ கேவலமா வச்சிருக்கீங்க; சென்னை ஸ்டான்லிக்கு வந்து பாருங்க'ன்னு காய்ச்சி எடுத்துட்டாராம். அப்புறம் காய்ச்சல் வார்டுக்குப் போனப்போ, பெட், கட்டில், கொசு வலை எல்லாமே பழசா இருக்கிறதைப் பாத்துட்டு, இன்னும் கொந்தளிச்சிட்டாராம்!'' என்றாள் சித்ரா.''அதான் ஒரு மேனேஜர், ரெண்டு சூபர்வைசர், ரெண்டு பணியாளர்கள்னு அஞ்சு பேரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாராமே!'' என்று கேட்டாள் மித்ரா.''ஆமா மித்து...பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்கிறது மாதிரி, அவுங்க சிக்கிட்டாங்க; ஆனா, அந்த வார்டுகளுக்கு செலவு பண்ணுனதைப் பத்தி 'ஆடிட் ரிப்போர்ட்' கேட்ருக்காராம்; நிறைய டாக்டர்கள் ஆடிப்போயிருக்காங்க!'' என்றாள் சித்ரா.''அக்கா...நிறைய மேட்டர் இருக்கு; டைம் இல்லை...இன்னும் நான் நிறைய பிரண்ட்ஸ் வீட்டுக்குப் போகணும்...பை பை!' என்று கைகாட்டிய படி கிளம்பினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X