தினந்தோறும் தீபாவளிதான்!| Dinamalar

'தினந்தோறும் தீபாவளிதான்!'

Added : நவ 06, 2018 | |
தீபாவளி என்பதற்கு அடையாளமாக, தெருவெங்கும் பட்டாசு வெடிச்சத்தம் காதை பிளந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும், சிறுவர்கள், கோர்ட் உத்தரவை மறந்து, தங்கள் இஷ்டத்துக்கு பட்டாசு கொளுத்தி, அந்த இடத்தையே அதகளமாக்கி கொண்டிருந்தனர். வண்டியை நிதானமாக ஓட்டி சென்ற சித்ரா, வெறிச்சோடிய குமரன் ரோட்டில் வேகமெடுத்து, மித்ரா வீட்டுக்கு சென்றாள். ஹாலில் அமர்ந்து, பேப்பர் படித்து
'தினந்தோறும் தீபாவளிதான்!'

தீபாவளி என்பதற்கு அடையாளமாக, தெருவெங்கும் பட்டாசு வெடிச்சத்தம் காதை பிளந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும், சிறுவர்கள், கோர்ட் உத்தரவை மறந்து, தங்கள் இஷ்டத்துக்கு பட்டாசு கொளுத்தி, அந்த இடத்தையே அதகளமாக்கி கொண்டிருந்தனர். வண்டியை நிதானமாக ஓட்டி சென்ற சித்ரா, வெறிச்சோடிய குமரன் ரோட்டில் வேகமெடுத்து, மித்ரா வீட்டுக்கு சென்றாள்.
ஹாலில் அமர்ந்து, பேப்பர் படித்து கொண்டிருந்த மித்ரா, ''அக்கா... வாங்க, வாங்க. ேஹப்பி தீபாவளி,'' என்று வரவேற்று உபசரித்து, ஸ்வீட், காரம் வகைகளை டீபாயில் வைத்தாள்.அதை ருசித்தவாறே, ''மித்து, ஸ்வீட் எல்லாம் சூப்பரா இருக்கே!'' என்று, பக்கோடாவை சுவைத்தாள்.''ஏங்க்கா... நான் என்ன கட்சிக்காரர் மாதிரி, எலக் ஷனில், சீட் கேட்கவா? உங்களை உபசரிக்கிறேன்,''
''ஏதோ பொடி வைச்சு பேசறியே. யாரை, யாரு அப்படி உபசரிச்சாங்க,'' என்றாள் சித்ரா. ''எல்லாம் சூரியக்கட்சியில்தான். மலையிலிருந்து இறங்கி வந்த மாஜி அமைச்சரை வைத்து, பொதுக்கூட்டம் நடத்தினார். அடுத்த எலக்ஷனில், எப்படியாவது வடக்கில் 'சீட்' வாங்க வேண்டும் என்பது அவரோடு ஐடியாவாம். அதற்காக, அவரை வைத்து காய் நகர்த்துகிறாராம்,'' என்றாள் மித்ரா. ''நானும் கேள்விப்பட்டேன் மித்து. ஆனா, இப்போதைய நிலவரப்படி, மாவட்டம் மீது தலைமை கோபமாக இருக்கறதாக சொல்றாங்க. இதைச் சரிக்கட்டத்தான், மாஜி அமைச்சரை வைத்து, கூட்டம் போட்டாருன்னு, இன்னொரு தரப்பு சொல்றாங்களாம்,''அப்போது, 'அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை' என்ற செய்தியை பார்த்த மித்ரா, ''தீபாவளி நேரத்தில், எல்லா ஊரிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினாங்களே. திருப்பூரில் ஏன் எங்கயுமே நடக்கலை. எல்லோரும் திருந்திட்டாங்களா?,'' என்றாள்.''அட... நீ.. வேற! இங்க இருக்கறவங்கதான், அனுபவம் மிக்க ஆட்களாயிற்றே. அதனால், ரொம்பவும் ஜாக்கிரதையா, காயை நகர்த்தி, வைட்டமின் 'ப' போட்டு தள்ளிட்டாங்களாம். அதுவுமில்லாம, இது என்ன தீபாவளிக்கு மட்டும் பணம் புழங்கற ஊரா? தினம்தினம் தீபாவளிதானே,'' என்று சிரித்தாள் சித்ரா.
''லோக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், எதையும் கண்டுக்கலை. ஆனால், ஐகோர்ட் விஜிலென்ஸ் டீம் ரெண்டு நாள் ஜரூராக வேலை செஞ்சாங்க தெரியுங்களா?'' ''அப்படியா? விஜிலென்ஸ் ரெய்டா? எப்போ நடந்தது,'' ''சென்னையிலிருந்து வந்த விஜிலென்ஸ் 'டீம்' இங்கிருந்து சில தகவல்களை நகல் எடுத்துருக்காங்க. அதுபோக, வெளியாட்கள்கிட்ட என்கொயரியும் நடத்தியிருக்காங்கக்கா,'' ''ஓேஹா... இதைத்தான் சேம்பரில், வக்கீ்ல்கள் பேசிட்டு இருந்தாங்களா?''கூறிய சித்ரா, ''இந்த எல்.பி.ஏ., ஆபீசில், நடக்கிற கொடுமை வேறெங்கும் நடக்காதுடி,''என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''ஏங்க்கா.. அப்படி என்னதான் நடக்குது?'' கேட்டாள் மித்ரா. ''அங்க இருக்கற ஆபீஸர்களுக்கு, வாய்ப்பூட்டு போட்டிருக்காங்க போல. வருஷத்துக்கு மூணு ஏ.டி., மாறிடறாங்க. ஒவ்வொருத்தரும் புதுசு புதுசா 'ரூல்ஸ்' போடறாங்க. 'யார் வந்தாலும் பேசக்கூடாது. குறிப்பா, 'பிரஸ்'கிட்ட, மூச்சே விடக்கூடாதுன்னு, உத்தரவு போட்டிருக்காங்களாம்''''ஏதாவது சந்தேகமுன்னு, மக்கள் கேட்டா, போய்ட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்களாம். 'ஏ.டி., நம்பர் கொடுங்க, பேசிக்கலாமுன்னு கேட்டால், நாங்க தரக்கூடாதுங்க,'ன்னு சொல்லி சமாளிக்கிறாங்களாம்,''''உண்மையிலேயே கொடுமைதாங்க்கா''''ஆனா, அதுவே, 'ரியல் எஸ்டேட்' காரங்கனா, தனி மரியாதை கொடுத்து வழியுறாங்களாம். ஏன்னா, அவங்க 'நல்லா' கவனிக்கிறதாலதான், எல்லோரும் பேசிக்கறாங்க'' என்று விளக்கினாள் சித்ரா. அப்போது, அருகிலுள்ள கோவிலிலிருந்து மேள சத்தம் கேட்டது. அதைக்கேட்ட, மித்ரா, ''கோவில் சின்னதாக இருந்தாலும், 'கொட்டு மேளம்' பெரிசுன்னு சொல்வாங்க, அதுமாதிரியே தான் தோழர்கள் நடந்துக்கறாங்க,'' என்றாள்.
''கமல் மாதிரி பேசாதீடி. நேரடியா விஷயத்துக்கு வா''கார்ப்ரேஷன் சொத்துவரி உயர்வு, அடிப்படை வசதியில்லாதது, உள்ளாட்சி தேர்தல் நடக்காததுனு எதையும், தோழர்கள் கண்டுக்கறதே இல்லை. போனஸ் பிரச்னை எதுவும் இல்லைனு சோர்ந்து போயிருந்தவங்க, புதுசா 'லேண்ட்' மேட்டர் கிடைச்சதும், உள்ளே புகுந்து வெளையாடுறாங்க,''
''ஓேஹா... அது எங்கே?''
''அது.... அந்த, ...மலையிலதான். கோவிலின் இடத்தில், நிர்வாகம் கம்பி வேலி போட்டதற்கு, எதிர்ப்பு தெரிவிச்சதில், தோழர்களின் பங்கு இருக்குன்னு, ஊர்க்காரங்களே பேசிக்கறாங்க. ஆனா, ஒருவழியா, இப்ப பிரச்னை ஓய்ந்துள்ளது,''என்றாள் மித்ரா.அருகில், பட்டாசு வெடிச்சத்தம் பயங்கரமாக கேட்டது. ''காலையிலிருந்து வெடிச்சத்தம்தாங்க. காது ரெண்டா போயிடுமாட்டம் இருக்குதுங்க்கா''''அட மித்து. இது தீபாவளி வெடிதாண்டி. ஆனா, சிட்டியில் இன்ஸ்., ஒருத்தர் தினமும் தீபாவளி கொண்டாடுறார். புகாரில் சிக்கிய நபர்களை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி, அடி பின்னி எடுக்கிறாராம். ஆனா, அதே நேரம், கொடுக்கல் வாங்கல் பிரச்னை, நல்லா 'வாங்கிட்டு' அடிக்கற மாதிரி அடிக்கிறாராம். இவரோட நடவடிக்கைக்கு யார், 'மணி' கட்டறதுன்னு, 'மொழி' தெரியாத வட மாநில தொழிலாளர்களும் கூட யோசிக்கிறாங்களாம்,''''பார்த்தா கரடுமுரடா இருப்பாரே. அவர்தானே. அது சரிங்க்கா. காங்கயம் ஸ்டேஷன் பணம் திருட்டு போன மேட்டர் என்னாச்சுங்க,'' ''ஞாபகம் வைச்சு கரெக்டா கேட்டுட்டா. அந்த சம்பவம், எஸ்.பி., காதுக்கு போயிடுச்சு. விஷயம் பப்ளிக் மத்தியில் பரவிய உடன், 'பணம் உள்ளதான் இருந்துச்சு'ன்னு சொல்லி சமாளிபிகேஷன் பண்ணிட்டாங்க. ஆனா, இதுக்காக, யார், யார் தலை உருண்டுச்சுனு தெரியல. பொறுத்திருந்து பார்க்கலாம்,'' என்றாள் சித்ரா. ''அக்கா.. அதே ஸ்டேஷனில், மகளிர் போலீசாரின் போட்ட சண்டை, பெரிய பிரச்னையாயிடுச்சாம்,''
''ஆமாம். உண்மைதான். பெண் போலீஸ் ஒருத்தர், இன்னொரு பெண் போலீசின் டூவீலரை சொல்லாமல் வெளியே எடுத்து சென்று விட்டு வந்தார். அதைப்பார்த்த அவர், 'யாரை கேட்டு வண்டியை எடுத்துட்டு போனாய்?' என்று ஆரம்பிச்சு, வாக்குவாதம் முற்றி, காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு, ரொம்ப அசிங்கமாக பேசினாங்களாம்,''''அப்போது, ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள், 'என்னடா.. இது, நாம பரவாயில்லையாட்டம் இருக்குது'ன்னு தெறிச்சுட்டாங்களாம்,''
''இதெல்லாம், எஸ்.பி., க்கு தெரியுமா? காங்கயம் ஸ்டேஷனில், இப்படி அடிக்கடி ஏதோ ஒண்ணு நடந்துட்டேதான் இருக்குது. யாருமே கண்டுக்கறதில்லையாங்க்கா,''''அதே சந்தேகம் எனக்கும்தாண்டி வருது. ரொம்ப கடுமையாக நடவடிக்கை எடுத்தா மட்டும்தான், இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்கும்,'' ''ஏங்க்கா.. தீபாவளிக்கு வேறென்ன ஸ்பெஷல்?''''இருக்குதுடி. சமீபத்தில், திருப்பூருக்கு வந்த 'டாஸ்மாக்' அதிகாரி, சும்மா தட்டி எடுக்கறாராம். வசூல் பண்ணி கொடுக்கிறது, ஆபீஸர்கள் டிரான்ஸ்பர், ரெய்டுக்கு போறது உட்பட முக்கிய வேலைகள், மூன்று சூப்பர்வைசர்கள் நினைத்தால் மட்டுமே நடக்குமாம்,''
''ஓேஹா... அப்படியா விஷயம். சட்டம் போடுற அந்த மும்மூர்த்தி யாருங்க்கா?''''அது தெரியலையே. தெரிஞ்சாதான் சொல்லிடுவேன். சரிப்பா...! கெளம்பலாம். இப்ப போனாதான் சரியாயிருக்கும்,'' என்ற சித்ரா எழுந்தாள். அப்போது, மித்ராவின் அம்மா, டிவியை 'ஆன்' செய்தார். அதில், 'வெங்கடாசலம், கண்ணன், சரவணன் ஆகியோரது, வாக்குமூலத்தின் அடிப்படையில்...' என, செய்தி வாசிக்கப்பட்டது. அதைப்பார்த்தவாறு, இருவரும்கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X