உ.பி.,யின் பைசாபாத் மாவட்ட பெயர் அயோத்தி என மாற்றம்

Updated : நவ 06, 2018 | Added : நவ 06, 2018 | கருத்துகள் (70)
Share
Advertisement
அயோத்தி: பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் என உ.பி., முதல்வர் கூறியுள்ளார்.வரவேற்கிறேன்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம் கதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இங்கு வந்துள்ள தென் கொரிய அதிபரின் மனைவியை வரவேற்கிறேன். தென் கொரியாவுடன் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கலாசார தொடர்பை
Faizabad, Ayodhya, Yogi Adityanath , Diwali Speech,பைசாபாத், அயோத்தி, யோகி

அயோத்தி: பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் என உ.பி., முதல்வர் கூறியுள்ளார்.


வரவேற்கிறேன்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம் கதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இங்கு வந்துள்ள தென் கொரிய அதிபரின் மனைவியை வரவேற்கிறேன். தென் கொரியாவுடன் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கலாசார தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கடவுள் ராமரை கொண்டாட இங்கு வந்துள்ளோம்.


பெயர் மாற்றம்

நமது பெருமை மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக அயோத்தி உள்ளது. முன்னர் அயோத்தி பெயரை சொல்லவே மக்கள் பயந்தனர். கடந்த காலங்களில் எந்த முதல்வரும் அயோத்தி வந்தது இல்லை. அயோத்தி நகரம், நமது கவுரவம், பெருமையின் சின்னமாக விளங்குகிறது. ராம பிரான் என்றவுடன், எல்லாருக்கும் அயோத்தி நினைவுக்கு வரும். அதனால், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம், இனி, அயோத்தி மாவட்டம் என, பெயர் மாற்றப்படும். அயோத்திக்கு எந்த சக்தியும் அநீதி இழைக்க முடியாது. அதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்.


கல்லூரி, விமான நிலையம்

அயோத்தி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை அறிவித்து உள்ளார்.
அயோத்தியில், ராமரின் தந்தை தசரதரின் பெயரில், மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும். அயோத்தியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். இதற்கு கடவுள் ராமர் பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


கின்னஸ் சாதனை:


இந்நிலையில் சராயு நதிக்கரையில் ஒரே நேரத்தில் 3,01,152 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
07-நவ-201812:58:03 IST Report Abuse
makkal neethi பொருளாதார மேதைகளின் பொருளாதார வளர்ச்சி திட்டம் ..கொரியன் லேடி சிரிக்கிறாள்
Rate this:
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
07-நவ-201812:29:11 IST Report Abuse
Mohamed Ilyas மக்களிடையே வோட் கேட்பதற்கு எதையாவது சொல்லி தானே ஆக வேண்டும் அதனால , ரோடு பெயர மாற்றுவது , ஊரு பெயரை மாற்றுவது , சில வைப்பது என்று எதையாவது மக்கள் கேட்காத விஷயத்தை செய்து அவர்களுடைய தேவைகளிலிருந்து திசை மாற்றுவது தான் இவர்களின் வேலை படேல் சிலையை வைத்து ஒரு வாரம் அயோத்தியை வைத்து ஒரு வாரம் , சிபிஐ ஐ வைத்து ஒரு வாரம் என்று எதையாவது ஒரு திசை திருப்பல்கள் தான் இவர்களின் ஒரே வேலை உருப்படியான செயல் திட்டங்கள் எதுவும் கிடையாது அதுவும் இல்லை என்றால் சபரிமலை , அப்படி கிடைக்கவில்லை என்றால் தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாமா வேண்டாமா என்று ஒரு சர்ச்சை இது ஒரு சர்ச்சை சர்க்கார் அவ்வளவு தான்
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
07-நவ-201812:25:45 IST Report Abuse
ShivRam ShivShyam Mr போராளீஸ் அண்ட் நியூட்ரல் நக்கீஸ், நாம சென்னை தூத்துக்குடி, பக்கத்துக்கு மாநிலங்கள்ல பெங்களூரு மைசூரு துமகூரு கோழிக்கோடு திருவானந்தபுரம் புதுச்சேரி கொச்சி மும்பை கொல்கத்தா னு மாத்தும் போது எங்க சார் போனீங்க ??? இதெல்லாம் எதற்கு செய்யப்பட்டதோ, அதே காரணத்துக்க்காக தான் அயோத்தியும் .. போய் சென்னை கிரிக்கெட் போட்டியை எப்படி தடுக்கலாம்னு ஆராய்ச்சி பண்ணுங்க ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X