மியாவ்....மியாவ்....மிரட்டும் 'மீ டூ' Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மிரட்டல்!
மியாவ்....மியாவ்.... மிரட்டும் 'மீ டூ'

உலகை 'மீ டூ' விவகாரம் உலுக்குகிறது. பாலியல் சீண்டல்களை பெண்கள் தைரியமாக வெளியில் சொல்ல 'ருசி கண்ட பூனையாக' இருந்த பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். இன்று தவறு செய்தால், என்றாவது ஒருநாள் குட்டு வெளிப்படும் என்ற அச்ச உணர்வு 'சபல புத்தி' ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மீ டூ, மீ டூ விவகாரம் ,  பாலியல் துன்புறுத்தல், பெண்கள்,  தரானா புர்க், பாலியல் வன்முறை, அமெரிக்க நடிகை அலிஸ்சா மிலானோ,  ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன்,  நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர், பாலியல் பிரச்னை, 
Me too , Me too, Sexual Harassment, Women, Tarana Burk, Sexual Violence,
American actress Alisa Milano, Harvey Weinstein, actress Tanusree Dutta, actor Nana Patekar, sexual problem,'மீ டூ' இயக்கத்தின் பின்னணி கொஞ்சம் வேதனையானது. ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சமூக ஆர்வலர் தரானா புர்க்கிடம், 'நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது,' என 13 வயது சிறுமி ஒருவர் கண்ணீருடன் கேட்டுள்ளார். அதற்கு 'மீ டு' (நானும் பாதிக்கப்பட்டேன்) எனக்கூறி சமாளித்திருக்கிறார். இதே வாசகத்தை பயன்படுத்தி நியூயார்க்கில் 'மீ டு' இயக்கத்தை 2006ல் புர்க் தொடங்கினார். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை துணிச்சலாக தெரியப்படுத்தினார்.


பின் 'மீ டூ ஹேஷ்டேக்' சமூக வலைதளங்களில் 'வைரலாக' பரவியது. அமெரிக்க நடிகை அலிஸ்சா மிலானோ முதன்முதலில் 2017ல் 'டுவிட்டரில்' #Me Too எனக்குறியிட்டு தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்தினார். 2017, அக்., 10ல் ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டேய்ன் மீது நிறைய பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.


இந்தியாவில் அறிமுகம் :இந்தியாவிலும் 'மீ டு' ஜுரம் வேகமாக பரவியது. கலிபோர்னியா பல்கலைக்கழக சட்ட மாணவியான ராய் சர்க்கார், இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளை பாலியல்

ரீதியாகத் துன்புறுத்திய பேராசிரியர்கள் பட்டியலை 2017-ல் 'பேஸ்புக்கில்' முதன் முதலில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் மீது புகார்கள் குவிந்தன. இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவிக்க, 'மீ டூ' சூடு பிடித்தது.


சின்மயி சிக்கல்சுவிட்சர்லாந்து சென்ற போது, பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் கூற, தமிழகத்திலும் 'மீ டூ' குண்டு வெடிக்க துவங்கியது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை அமலா பால் குற்றம்சாட்டினர். நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகாரின் பேரில் அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர்.


'பார்ட்டிக்கு' சென்ற போது பாலியல் பிரச்னைக்கு ஆளானதாக நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். நடிகர் ஜான், நள்ளிரவில் போன் செய்து தொல்லை தந்ததாக 'டிவி' தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி தெரிவித்தார். நடிகை மாயா கிருஷ்ணன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மாடலும் நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் புகார் கூறியது 'மீ டூ' வின் உச்சக்கட்டம்.


அமைச்சர் பதவி காலிவிளையாட்டு அரங்கில் பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தேர்வாளர்கள் மீது புகார் கூறினார். அரசியல் களத்தில் எம்.ஜே.அக்பர் சிக்கினார். பத்திரிகைத்துறையில் பணியாற்றிய போது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதனால் மத்திய அமைச்சர் பதவியை இழந்தார்.


கடந்த காலங்களில் நடந்த பாலியல் கொடுமைகளை பல ஆண்டுகள் கழித்து

Advertisement


கூறுவது சரியா, தனது திருமணத்தில் பங்கேற்ற வைரமுத்துவின் காலில் சின்மயி விழுந்தது ஏன், 'திருட்டு பயலே- 2' பட நிகழ்ச்சியில் சுசி கணேசனை அமலாபால் புகழ்ந்தது ஏன் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். பழிவாங்குவதற்காக 'மீ டூ' பயன்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை மறுக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள், 'அப்போது வெளியே சொல்லும் சூழல் இல்லை. இப்போது பாலியல் வன்முறைகளை தைரியமாக தெரிவிக்க சமூக வலைதளங்கள் உதவுகின்றன,' என, பதிலடி கொடுக்கின்றனர்.


சமூகப்பிரச்னை'மீ டூ' என்பது பெண்களுக்கான பிரச்னை மட்டும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்னை. தங்களுக்கு நேர்ந்த கொடுமையை மனதில் வைத்து நீண்ட காலம் புழுங்கியவர்கள், 'மீ டூ' மூலம் ஆறுதல் தேடுகின்றனர். இவர்களது புகாரை கொச்சைப் படுத்தாமல், உரிய நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சாமான்ய பெண்களும் தங்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களை சொல்ல முன் வர வேண்டும். இந்த இயக்கம், அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை 'அழைக்க' நினைக்கும் ஆண்களுக்கு நிச்சயமாக அச்சத்தை தரும்.

'வி டூ' தெரியுமா

'மீ டூ' ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்க, ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, #வி டூ என்ற ஹேஷ்டேக் மூலம் இயக்கம் தொடங்கியுள்ளனர். இதில், பெண்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை ஆயிரக்கணக்கான ஆண்கள் பதிவிட்டுள்ளனர்.Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-நவ-201819:43:34 IST Report Abuse

Pugazh Vபல வாசகர்கள் யதார்த்தம் அறிந்து நல்ல கருத்து எழுதியிருக்கிறார்கள். மணி, மகாதேவி மற்றும் சண்முகம் பாராட்டுக்கள். இந்த மி டூ வினால் இளம் பெண்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். எந்த கம்பெனியும் / ஆபீஸ் களும் " அது முதல்வகுப்பில் பாஸ் பண்ணியவர்களாக இருந்தாலும்,லேடீஸ் வேணாம் சார், எதுக்கு வம்பு" என்கிறார்கள். இதன் தாக்கம் இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் உணரப்படும்.

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07-நவ-201818:24:50 IST Report Abuse

Mirthika Sathiamoorthiமகளிர் மட்டும் திரைப்படம் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதை ஒரு காமெடி திரைப்படமாக மட்டுமே நாம் இன்றளவும் அணுகி வருகிறோம். ஆனால் அத்திரைப்படத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மீதான நமது புரிதலை நாம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தி இருக்கிறோம் என்று பார்த்தால்... கிட்டத்தட்ட எதுவுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்...ஊடகங்கள் முதல் தனிநபர் வரை இப்போது வரையிலும் சின்மயியின் குற்றச்சாட்டைப் பற்றித்தான் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வைரமுத்துவை நோக்கியோ மீடியாக்கள் ஏன் படையெடுக்கவில்லை? பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நீளும் உங்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியவரை நீங்கள் எப்படி உங்கள் திருமணத்திற்கு அழைக்கலாம்? அவரது காலில் விழுந்து எப்படி ஆசி வாங்கலாம்? அவர் விருது பெற்றதற்கு ட்விட்டரில் எப்படிப் பாராட்ட மனம் வந்தது? இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை கேள்விகளால் துளைத்தெடுப்பதை விட்டு விட்டு. நீங்கள் உங்களது பாலியல் அனுகூலங்களுக்காக உங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது வாஸ்தவம் தானா? அரசியல் அணுக்கத்தைக் காட்டி உங்களது நிகழ்ச்சிகளுக்கு பாடகர்களை வற்புறுத்தி வரவழைத்துப் பங்கேற்கச் செய்தது உண்டா? சின்மயியின் குற்றச்சாட்டை நீங்கள் எந்தெந்த விதத்தில் மறுக்கிறீர்கள்?. அவரது குற்றச்சாட்டுக்கு உள்நோக்கம் உண்டென்பதைப் போலவே உங்களது மறுப்புக்கும் உள்நோக்கம் உண்டு என்று அவர் சொன்னால் அதற்கு உங்களது பதில் என்ன? நீங்கள் அப்பழுக்கற்றவர் என்றால் உங்களுக்காக உங்களை ஆதரித்து இதுவரை உங்கள் பெண் ரசிகைகளிலிருந்து கூட ஒருவரும் குரலெழுப்பாதது ஏன்? ஆண்டாள் விவகாரத்தில் கூட உங்களை ஆதரிக்க பல குரல்கள் எழுந்த நிலையில் இந்த மீடூ வுக்கு எதிராக எதிராக ஒரு குரல் கூட இதுவரை பதிவாகாதது ஏன்? இப்படியெல்லாம் வைரமுத்துவுக்கு அக்னிப் பரீட்சை நிகழ்த்த மீடியாக்கள் தயங்குவது ஏன் என்பது தான் புரியாத புதிர்..அவர் மிக எளிமையாக தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்களைத் தாம் திரட்டி வருவதாகவும் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் எதிர்வினையாற்றி விட்டு அமைதியடைந்து விட்டார். ஆனால் பாவம் சின்மயி இன்னமும் பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்..பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறைய வேண்டும் என்ற நோக்கில் உண்டாக்கப்பட்ட விசாகா கமிட்டியின் பரிந்துரையை இத்தனை வருடங்களில் எத்தனை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன? நமது நாட்டில் பணிக்குச் செல்லும் மகளிரின் எண்ணிக்கையும், விகிதமும் குறைந்து கொண்டே வருகின்றன என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்.? தகுந்த பாதுகாப்பின்மை, தங்குவதற்கான வசதியின்மை, குடும்பத்தினரின் எதிர்ப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் முதலிய காரணங்களினால் எல்லா பெண்களாலும் வேலைக்கு செல்லமுடியாத போது..வேலைக்கு போனபின் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் ஹ்ம்ம்ம்...குற்றம் சுமத்த காலவரையறை வரையறுக்க யாருக்கும் உரிமை இல்லை....காலம் கடந்த தவறுகளை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால், குற்றத்தை நிரூபிக்க முடியுமா? ஒருவேளை நிரூபிக்க முடியாமல் போனால், நிரூபிக்க முடியாத தவறு குற்றமல்லவே நடந்தது தவறே அல்ல என்று சொல்ல முடியுமா பாதிக்கப்பட்ட பெண்மணி குற்றம் சாட்டினால் அது “மீ டூ”. ஆனால் அவர் அப்படி செய்யாமல் அவர்சார்பாக வேடிக்கை பார்த்தவர்கள் குற்றம் சாட்டினால் அதுவும் ஹீ டூ சரிதானே..

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
07-நவ-201817:17:22 IST Report Abuse

N.Purushothamanநடிகர்கள் , இயக்குனர்கள் ,பாடலாசிரியர் எல்லாம் யோக்கியன் என்கிற அளவில் தற்போது கருத்து சொல்லும் நடிகைகளை ,பெண்களை இம்சிக்க கூடாது ...பெரிய அளவில் வளர்ந்துள்ள அல்ப ஆளுங்க உடல் ரீதியாக உறவு வைத்து கொள்ள முடியாது என்பது தெரிந்து தான் இது போன்ற சில்மிஷங்களில் ( Bad Touch ) ஈடுபடுகின்றனர் ...தற்போது புகார் கூறும் அணைத்து பெண்களும் இதை தான் சொல்கின்றனர் ...இது தெரியாமல் ஆண்கள் புகார் கூறும் பெண்களை உடல் ரீதியாக உறவு கொண்டனர் என்கிற ரீதியில் விமர்சனம் வைப்பது துரதிர்ஷ்டவசமானது ...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X