கார் மீது தள்ளி வாலிபரை கொன்ற டி.எஸ்.பி.,க்கு வலை

Added : நவ 06, 2018 | கருத்துகள் (1)
Advertisement

திருவனந்தபுரம்: வாக்குவாதம் செய்த வாலிபரை, ஓடும் கார் முன் தள்ளி கொலை செய்த, டி.எஸ்.பி.,யை போலீசார் தேடி வருகின்றனர்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யட்டின்கரா பகுதி, டி.எஸ்.பி.,யாக இருப்பவர், ஹரி குமார். நேற்று முன்தினம் இவர், நெய்யட்டின்கரா அருகே, கொடங்கவிலாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார். காரை, சாலையோரம் நிறுத்திவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார்.இவரது காருக்கு பின், கொடங்கவிலாவை சேர்ந்த சனல், 32 என்பவர், தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஓட்டலுக்கு சென்றார்.உறவினர் வீட்டிலிருந்து வந்த ஹரி குமார், தனது காரை எடுக்க முயன்றார். ஆனால், சனலின் வண்டி நிறுத்தப்பட்டிருந்ததால், அவரால் காரை எடுக்க முடியவில்லை.ஓட்டலில் இருந்து வந்த சனல், தனது வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது, ஹரி குமார், சனலை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.மிகவும் கோபம் அடைந்த ஹரிகுமார், சனலை பிடித்து, சாலையில் தள்ளினார். அப்போது, வேகமாக வந்த கார், சனல் மீது ஏறியது. இதில், சனல் படுகாயம் அடைந்தார்.படுகாயம் அடைந்த சனல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், ஹரி குமாரை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஹரி குமாரை கைது செய்வதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் உறுதியளித்ததால், சாலை மறியலை மக்கள் கைவிட்டனர்.இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டி.எஸ்.பி. ஹரிகுமார், பணி நீக்கம் செய்யப்பட்டுளளார்; அவர் மீது, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaram Kandalu - Madurai,இந்தியா
07-நவ-201802:55:14 IST Report Abuse
Rajaram Kandalu ஒரு நிமிட ஆத்திரம் + அகங்காரம் கொண்டு செய்த செயல் இரண்டு பேரின் வாழ்வை நாசமாக்கி விட்டது. நான் என்ற மமதை, என்னை ஒருவன் எதிர்ப்பதா என்ற எண்ணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X