புதுடில்லி : 'ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்'' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அவர், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையிலான சமீபத்திய உரசல் குறித்து, மேலும் கூறியதாவது:
மத்திய அரசு, கார் ஓட்டுனர் என்றால், ரிசர்வ் வங்கி, ஓட்டுனரை பாதுகாக்கும் 'பெல்ட்' எனலாம். அந்த பெல்ட் வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் முடிவை பொறுத்து உள்ளது. பெல்ட் அணிந்து கார் ஓட்டினால், எதிர்பாராத நிகழ்வுகளின் போது தப்பிக்கலாம்.
மத்திய அரசுக்கு, இயல்பாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனை இருக்கும். அதேசமயம், நிதிச் சந்தையை ஸ்திரமாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால், மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் மறுக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், நின்று விளையாடி, தன் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். அதுபோல, ரிசர்வ் வங்கி,
அவ்வப்போதைய நிகழ்வுகளுக்கு கொள்கைகளை மாற்றாமல், அறிவார்ந்த சிந்தையுடன் செயல்படவேண்டும்.
அதேசமயம், நவ்ஜோத் சித்துவை, மத்திய அரசுடன் ஒப்பிடலாம். சித்து, அதிரடி ஆட்டம் ஆடி, ரசிகர்களை கவரப் பார்ப்பார். அதில், சாதக, பாதகத்தை கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (18)
Reply
Reply
Reply