அடடே! : தீபாவளிக்கு குறைந்தது ஒலி, காற்று மாசு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அடடே!
தீபாவளிக்கு குறைந்தது ஒலி, காற்று மாசு
பட்டாசு வெடிக்கும் நேரம் அமலால் மாற்றம்
விதி மீறியதாக 2,700 வழக்குகள் பதிவு

தீபாவளி அன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பால், சென்னை உட்பட, தமிழகம் முழுவதும் ஒலி, காற்று மாசு குறைந்துள்ளது. விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக, தமிழகம் முழுவதும், 2,700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தீபாவளி, காற்று மாசு, பட்டாசுஉச்ச நீதிமன்றம் தீர்பை அடுத்து, தீபாவளியன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை; இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிய, சுற்றுப்புற காற்றின் தரம் மற்றும், ஒலி அளவை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்வது வழக்கம்.சென்னையில் ஆய்வு : இதன்படி, தீபாவளிக்கு முன், பின் என, 14 நாட்கள் ஆய்வு நடத்தப்படுகின்றன.


இந்த ஆய்வு, சென்னையில், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை, தி.நகர் ஆகிய, ஐந்து இடங்களில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்தாண்டு தீபாவளியன்று, காற்றில் மிதக்கும் மாசு நுண்துகள்களின் அளவு குறைந்துள்ளது. 2017ல், தீபாவளி அன்று, ஒரு கன மீட்டர் காற்றில், 387 முதல், 777 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் இருந்தன. இது, இந்த தீபாவளியின்று, 48முதல், 114 மைக்ரோ கிராமாக குறைந்துள்ளது. இதில், சவுகார்பேட்டையில் மட்டும், 114 மைக்ரோ கிராம் நுண்துகள்கள் உள்ளதாக பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில், அனுமதிக்கப்பட்ட, 100 மைக்ரோ கிராமிற்குள் தான் பதிவாகியுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும், கந்தக - டை - ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை - ஆக்சைடு, குறைவாக உள்ளது. ஒலி மாசு, 68 முதல், 89 டெசிபல் அளவில் காணப்பட்டது.

மற்ற நகரங்களில்
மதுரை, கோவை, திருச்சி, துாத்துக்குடி, வேலுார் உள்ளிட்ட பிற நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், காற்று மாசு, ஒலி மாசு இரண்டு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 'இதுபற்றிய முழுமையான விபரங்கள், ஓரிரு நாட்களில் கிடைக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியதால், பட்டாசு வெடிப்பது தமிழகத்தில் வெகுவாககுறைந்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசு குறைந்துள்ளது' என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழக அரசு அறிவித்திருந்த விதிகளை மீறி, பட்டாசு வெடித்ததாக, சென்னையில், 344 வழக்குகள்

Advertisement

உட்பட, தமிழகம் முழுவதும், 2,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.விதிகளை மீறி, எளிதில் தீப்பற்றும் பொருட்களை அலட்சியமாக பயன்படுத்துவது மற்றும் அவற்றால் காயம் ஏற்படுத்தியது என, இந்திய தண்டனை சட்டம், 188 மற்றும், 285வது பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்ட பிரிவின்படி, ஒரு மாதம் முதல், ஆறு மாதம் வரை சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும்.இந்த வழக்குகளில், பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அபராதம் வசூலித்த போலீசார், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். நேற்றும், பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து விதிமீறி பட்டாசு வெடித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
08-நவ-201821:49:34 IST Report Abuse

Seitheeeதலைவா, தீபாவளிக்கு ஐநூறு வருஷமா வெடி வெடிகிறோம். உருப்படியா நடக்கிற விஷயம். இந்துக்கள் எது பண்ணினாலும் அது தவறு. இன்னும் பெருகும். தடை வர வர ஆர்வம் ஜாஸ்தியாகும்.

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
08-நவ-201820:35:24 IST Report Abuse

VOICEவழக்கு போட்டதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தை சமாதானப்படுத்த. பன்னீர் & கோ தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் இவர்கள் நலனுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்த தீபாவளி ஒரு நாள் வெடித்தவர்கள் இந்த முறை 3 நாட்கள் வெடித்துள்ளார் என்பது சென்னை சேர்ந்த அனைவர்க்கும் தெரியும். காற்றுமாசு சென்னையில் எப்பொழுதும் குறைவு தான். டெல்லியில் எப்பொழுதும் காற்றுமாசு அதிகம் தான் பட்டாசு போடாத நாட்களிலும் கூட.

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
08-நவ-201820:27:09 IST Report Abuse

அம்பி ஐயர்எப்படியோ.... காசைக் கரியாக்காமல் இருந்தால் சரி....

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X