ஈரான் துறைமுகத்தை மேம்படுத்த அமெரிக்கா அனுமதி : இந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
அனுமதி!
ஈரான் துறைமுகத்தை மேம்படுத்த அமெரிக்கா...
இந்தியாவுக்கு முக்கியத்துவம் தந்து நடவடிக்கை

வாஷிங்டன்: ஈரானிடமிருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. இப்போது, ஈரானில், சபஹார் துறைமுக மேம்பாட்டு பணிகளை, இந்தியா மேற்கொள்ள, அதிபர் டிரம்ப் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, ஈரான், அமெரிக்கா, துறைமுகம்


மேற்காசிய நாடான ஈரானுக்கு, ௨௦௧௬ல் பிரதமர் மோடி சென்றார். அப்போது, இந்தியா - ஈரான் இடையே, 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில், சபஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம், மிக முக்கியமானது. இந்தியா- - ஆப்கனை இணைப்பதில், சபஹார் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சபஹார் வர்த்தக பிராந்தியத்தில், அலுமினியம் முதல் உரம் வரை, பல திட்டங்களில், இந்தியா பல கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் மூலம், ஈரானில் இந்தியா கால் பதிக்க உதவும்.

இதன் மூலம், பாகிஸ்தான் வழியை தவிர்த்து, ஆப்கன், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை, இந்தியா தொடர்பு கொள்ள முடியும். குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகம் மற்றும் சபஹார் துறைமுகம் இடையிலான துாரம், டில்லி - மும்பை இடையேயான துாரத்தை விட குறைவு. இதனால் எந்த ஒரு பொருளையும், ஈரானுக்கு எளிதாக எடுத்து செல்ல முடியும். அங்கிருந்து ஆப்கன், ரஷ்யாவுக்கு, ரயில் மற்றும் சாலை வழியாக, பொருட்களை எடுத்து செல்ல முடியும். இதனால், இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த, இந்தியா அதிக ஆர்வம் காட்டியது.
இதற்கிடையே, 2015ல், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகுவதாக, கடந்த ஜூனில், அதிபர் டிரம்ப் அறிவித்தார். அத்துடன், 'ஈரானுக்கெதிராக பொருளாதார தடைகளை, அமெரிக்கா

மேற்கொள்ளும்' என, அறிவித்தார். பொருளாதார தடை விதிக்கப்பட்டதால், ஈரானிலிருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும் நடவடிக்கைகளில், அமெரிக்கா ஈடுபட்டது, 'ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள், நவ., 4-ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும். இல்லாவிடில், அந்த நாடுகள், பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என, அமெரிக்கா தெரிவித்தது. இதனால், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அதிர்ச்சியடைந்தன.
இது தொடர்பாக, அமெரிக்காவிடம் பேச்சு நடத்திவந்தன. இதன் எதிரொலியாக, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு, அமெரிக்கா, சில நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சபஹார் துறைமுக பணிகளும், பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கனை இணைக்கும் ரயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இது பற்றி, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது:ஈரான் மீதான பொருளாதார தடைகள், நவ., ௫ முதல், அமலுக்கு வந்துள்ளன. எனினும், சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதில், இந்தியாவுக்கு உள்ள பங்கை, அமெரிக்கா அறிந்துள்ளது.குறிப்பாக, உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனை மறுசீரமைக்க, இந்த திட்டம் பெரிதும் உதவும், இது பற்றி தீவிர ஆலோசனைக்கு பின், சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், அங்கிருந்து, ஆப்கனுக்கு பொருட்களை எடுத்து செல்வதற்காக, ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அனுமதி வழங்க, டிரம்ப் அரசு முடிவுசெய்துள்ளது.ஈரானிலிருந்து, பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும், இந்தியாவுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்கனின் வளர்ச்சியை மனதில் கொண்டே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறுகையில்,'இந்தியாவுடனான நட்புறவின் முக்கியத்துவத்தை அதிபர் டிரம்ப் புரிந்து வைத்துள்ளார். இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், ஈரானில் சபஹார் துறைமுக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்றன.

Advertisement

சீனாவை ஓரங்கட்ட முயற்சி :

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதல் வரி விதித்து, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு, சீனா கூடுதல் வரி விதித்தது, இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே, பொருளாதார போர் ஏற்பட்டுள்ளது. இது பற்றி, டிரம்ப் நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: ஆசியாவில், சீனாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என, டிரம்ப் விரும்புகிறார். அதனால், சீனாவுக்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் அரசு எடுத்து வருகிறது. பாகிஸ்தானின் கவாதர் துறைமுகத்தை மேம்படுத்த, சீனா முதலீடு செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், சபஹார் துறைமுக மேம்பாட்டு பணிகளுக்கு, அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

காரணம் என்ன? :

'அமெரிக்காவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு அந்நாடு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது' என, அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள, 'ஹெரிடேஜ் பவுண்டேஷன்' என்ற அமைப்பின் தலைவர் ஜெப் ஸ்மித் கூறியதாவது:ஆசிய நாடுகளில், இந்தியாவுடனான நட்புக்கு, டிரம்ப் அரசு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.'சபஹார் துறைமுக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காவிட்டால், சீனா உள்ளிட்ட நாடுகள், அந்த பணிகளை மேற்கொள்ளும்; அது அமெரிக்காவுக்கு நல்லதல்ல' என, இந்தியா திறம்பட தெரிவித்ததும், இந்த அனுமதிக்கு காரணம்.மேலும், 'ஈரானின், அணு ஆயுத திட்டங்களை, இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது' என, இந்தியா உறுதியளித்ததும் ஒரு காரணம்.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி, சபஹார் துறைமுக பணிக்கு அனுமதி ஆகியவை மூலம், இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பின் முக்கியத்துவத்தை, அதிபர் டிரம்ப் புரிந்து வைத்துள்ளது தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
08-நவ-201822:06:56 IST Report Abuse

r.sundaramமலரின் மகள் அவர்களே, நீங்கள் எழுதிய கட்டுரை மிகவும் கருத்தாழம் மிக்கதாக இருந்தது. மோடியின் ராஜ தந்திரத்தால் அமெரிக்க நாட்டின் இரண்டு தடைகளிலிருந்தும் வெளி வந்துள்ளோம். அதே மாதிரி தற்போது பெட்ரோல் விலையும் தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தாண்டு வரும் தேர்தலிலும் மோடியே வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கடவுளை கூட்டாக பிராத்திப்போமாக.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
08-நவ-201815:15:10 IST Report Abuse

ganapati sbவெளியுறவுத்துறை சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டுக்கள்

Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
08-நவ-201815:56:58 IST Report Abuse

Aravindhakshanபிரதமரின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம்தான். இந்தியா பல விஷயங்களில் வல்லரசாக மாறிவருகிறது. அதற்கு காரணம் நாட்டின் தலைமை மிகச்சிறந்தவகையில் அமைய வேண்டும். அந்த மிகச்சிறந்த ஆளுமை நம் பிரதமரிடம் உள்ளதால்தான் உலக நாடுகள் பல இந்தியாவுடன் தொழில்நுட்ப கூட்டு ஒத்துழைப்பு, வணிகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு போன்றவற்றில் ஒத்துழைத்துக்கொண்டுள்ளன. வெளியுறவுக்கொள்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பலமாக உள்ளது. பிரதமரின் இடைவிடாத வெளிநாட்டு பயணங்களால் உறவுகள் பலப்பட்டு நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்துவருகின்றன. பலன்கள் உடனடியாக வெளியில் தெரியவராது. மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சி பாதையில் நம் நாடு சென்றுகொண்டுள்ளது....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-நவ-201812:36:17 IST Report Abuse

மலரின் மகள்பழங்காலம் தொட்டே நம்முடன் வர்த்தக தொடர்பு கொண்ட ஒரு நட்பு நாடு. இந்தியர்கள் நிறைய பேர் அங்கு வேலை செய்து வந்தார்கள். யுத்தத்திற்கு பிறகு நிலை மாறி நாளும் அதை சரிசெய்து நாம் அவர்களுடனானன உறவை மேம்படுத்தி கொண்டே இருக்கிறோம். இருவருக்குமான பரஸ்பர உதவிகள் நன்மைகள் என்றும் இருக்கிறது. மோடியின் அரசில் இருப்போர் செய்கின்ற டிப்ளமேடிக் செயலுக்கு கிடைக்கும் வெற்றி இது. சரியாக அந்நிய செயல் பாடுகளை கணித்து தீர்க்க தரிசனமாக செயல்படுகிறார்கள்., வெளிநாட்டு கொள்கையில் பஞ்ச ஷீல கொள்கையை மாற்றாமலேயே அதை ஓரம்கட்டிவிட்டு இன்றைக்கும் நாளைக்கும் எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஸபாஹா துறைமுகம் நமக்கு வெளிநாடுகளில் இருக்கும் சிறந்த துறைமுகங்களில் மிக முக்கியமானது ராணுவ பொருளாதார ரீதியாக. ஆப்கான் சீரமைப்பு ஆப்ரிக்காவுடன் நல்லுறவு ரசியாவின் தொடர் நட்பு என்று மத்திய கிழக்கு மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான நமது வரககத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த துறைமுகம். ஏற்கனவே நமது கப்பல் நிறுவனங்கள் அந்த தேசங்களிலெல்லாம் சிறப்பாக அனுமதி பெற்று கிளைகளை திறந்திருக்கின்றன. மென்பொருள் மற்றும் கடின உழைப்பிற்கான தொழிலாளர் நம்மிடம் திறமையாக நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் மூலம் திரைகடல் தோறும் திரவியம் கொணர வழி இருக்கிறது. சீனர்கள் என்றுமே அவர்கள் மன நிலையில் இருந்து மாற மாட்டார்கள் அது தான் நமக்கு கிடைத்த துருப்பு சீட்டு. வடகொரியாவின் அனைத்து ஏவுகணை அணு ஆயுத சோதனைகளும் சீனாவினால் தான் செய்ய படுகிறது. சீனாவே ஒரு இருண்ட தேசமாகத்தான் அவர்களின் செயல்பாடுகள் வெளிநாட்டவர்களுக்கு இருந்து வருகிறது. வடகொரியா அவர்களோடு சீனாவின் பினாமியாக இருந்தார்கள். சீனாவிற்கு நாடு பிடிக்கும் ஆசையும் உலகிலேயே தாங்கள் தான் முதலிடம் என்று பீற்றி கொள்ளவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இது அமெரிக்கர்களுக்கு உகந்தது அல்ல. ஆசிய பிராந்தியத்தில் சீனா மகோன்னதமாக இருப்பதற்கு காரணம் அவர்களின் அமெரிக்க உறவும் வர்த்தகமும் தான். அமெரிக்காவில் இருக்கும் புத்திசாலி சீனர்கள் மூலம் கிடைத்த உதவியை நன்கு பயன்படுத்தி கொண்டது சீன அரசு. கம்யூனிசம் என்ற ஒன்றை சாமானியர்களுக்கும் காபிடலிசம் என்ற ஒன்றை மிக பணக்காரர்களுக்கும் வழங்கி மகிழும் அரசு அவர்களது. அமெரிக்கர்களிடமிருந்து திறமையாக இரட்டை வேடம் பூண கற்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் சீனாவை உற்று நோக்கும் வல்லுநர்கள். சீனாவை பற்றிய சந்தேகம் உறுதி செய்து கொண்டதால் அமெரிக்கர்களுக்கு ஜப்பான் காரர்களுக்கும் இணைந்து நம்மிடம் உயர்ந்த நட்பை கொள்ளவேண்டிய கட்டாயம். அதை நாமும் சரியாக புரிந்து கொண்டு செயல் படுகிறோம். ஈரான் இராக் ஐக்கிய அரபு அமீரகம் கத்தர் தேசங்கள் மூலம், மட்டுமே கூட நமது எரிபொருள் தேவைகளை எரிபொருள் ஏற்றுமதி தேவைகளை தாராளமாக பூர்த்தி செய்து கொள்ளமுடியும். ஈரான் இராக் போதுமானது சொல்லப்போனால். இரண்டு தேசங்களிலும் தீவிரவாத பயங்கரவாதிகள் இருந்தாலும் ஈரானில் அரசு ஓரளவிற்கு அதை கட்டுப்படுத்தவும் அயல் நாடுகளுடன் சிரியா போன்ற தேசங்களில் தங்களில் செல்வாக்கை வைத்து கொண்டு ரசியாவுடன் இணக்கமாக இருப்பதாலும் அந்த நிலை பல காலம் இருக்கும் என்பதாலும் நமக்கு உகந்தது. இந்திய ஈரான் கடல் வழித்தடம் தனித்துவமானது மற்றும் நமக்கு பிரத்தியேகமானதாக இருக்கவல்லது. வடமேற்கில் இருக்கும் எதிர் நாட்டை சுற்றி வளைத்து நமது ராணுவம் வலை பின்னி இருக்க வல்லது ஈரானின் மண்ணில் நமது துறைமுக செயல்பாடு. அந்த எதிர் நாட்டின் ஒரே சிறப்பு அவர்களின் அந்த துறைமுகம் தான் அதை நம்மிடம் அவர்கள் கடந்த போரிலே தோற்றிருக்கிறார்கள். முன்னரே நாம் அந்த துறைமுகத்தை மட்டும் பிடித்து கொண்டு மற்றவற்றை உடன்படிக்கை செய்திருக்கவேண்டும். அது தீர்க்கதரிசனமாக செய்யப்படாத ஒரு தவறு என்று இன்று கருத இடமிருக்கிறது. வெற்றி பெற்றவன் விட்டு கொடுத்தான் என்ற பெருமையை தேவையில்லாமல் நாம் பெறவேண்டும் என்பதற்காக செய்து கொண்ட ஒரு செயல் அது. இப்போது அதையெல்லாம் சரிசெய்து கடல் பகுதியில் அவர்கள் மூச் என்று இருக்கும் அப்டி செய்தாகி விட்டது. ஆப்கானிஸ்தானை நிர்மாணிக்கும் பொறுப்பை இந்தியாவிடம் கேட்கிறது அமெரிக்கா. ராணுவத்தையும் அங்கே நிறுத்தி தாலிபானை ஒடுக்க சொல்கிறது. ஆப்கானை நிர்மாணிக்கும் செயலை நாம் ஏற்கிறோம். ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கி செயலை செய்வதில்லை. ஐ நா வின் படையில் இருக்கும் நமது அமைதி வீர்கள் தான் அங்கு இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் சிறப்பாக செய்திருக்கிறோம். ஆப்கானின் மொத்த நிர்மாணமும் நம்மிடம் வருகிறது. தகவல் தொழில்நுட்பம் நமது தொலை தொடர்பு துறையினர் அங்கே செயல் படுகிறார்கள். சாலை இருப்பு பாதை வான் வெளி போக்குவரத்து என்று நாம் அங்கே பெரியளவில் இருக்கிறோம். ஆப்ரிக்க தேசத்தில் இருக்கும் கனிம வளங்களை நாம் பராமரித்து வெளிக்கொணர்ந்து பயன்படுத்துகிறோம். ரசியாவுடன் ஏற்கனவே செய்துவரும் வர்த்தகம் வேகமெடுக்கிறது. ஆயத்த ஆடைகள் கம்பளி தேயிலை பொருட்கள் என்பதுடன் புதிதாக மருந்து பொருட்கள் சேர்கின்றன. 2020 கு பிறகு கல்வி வழங்குவதில் நாம் முன்னிலை வகிக்க போகிறோம். வங்கத்தில் முக்கிய மான ஒன்று போக்குவரத்து. குறைந்த செலவு என்பதுடன் விரைவான போக்குவரத்து நம்பகமான தொடர்பு என்பதுதான். அதற்காகத்தான் நாம் ஈரான் துறைமுகத்தை தேர்ந்தெடுத்து வணிகம் செய்கிறோம். மேக் இன் இந்தியா நிச்சயமாக பெரிய வெற்றி பெரும் என்கிறார்கள் வல்லுநர்கள். தற்போது அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தராததற்கு காரணம் நாம் இன்னமும் சில கட்டுமானங்களை infrastructure பூர்த்தி செய்யவில்லை. மேக் இன் இந்திய திட்டத்தின் முக்கியமான கூறு, இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உலக சந்தை என்பதே,. அதற்கான கட்டுமானங்களை செய்து முடித்து விட்டால் நிறைய கம்பனிகள் இங்கே கடைபரப்பும், சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா நோக்கி நிச்சயமாக வரும் அதற்கு அமெரிக்காவின் தாராள ஆதரவு உண்டு. இதை கருதி தான் இந்திய 2050 உலகில் முன்னோடியாக திகழும் என்கிறார்கள். மக்கள் சமூக மாற்றங்கள் தாராளமாக வேகமாக அதிசயிக்க தக்கவகையில் இருக்கிறது. படித்த பண்பான சமுதாயம் சுதந்திரமாக சிந்திக்கும் சமுதாயம் மாற்றங்களை வளர்ச்சியை வேகமாக ஆதரிக்கும் இளையோர் சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறோம். அவர்கள் தாராளமாக வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கவும் அங்கிருந்து நினைத்தால் அம்பாசமுத்திரம் கல்லிடைகுறிச்சிக்கோ அல்லது நெல்லை பேட்டைக்கோ டவுன் பஸ்ஸில் செல்வது போல சென்று வருவார்கள் வெளிநாட்டிற்கு. சிறு முதலாளிகள் நிறையபேர் வெளிநாட்டில் தொழில் செய்வார்கள். சீனாவுக்கும் நமக்குமான வித்தியாயம் மற்றும் நமது மேல் சிறப்பு அது தான். ஸீனர்கள் வெளிநாடுகளில் சென்று உற்பத்தி செய்து வாழ தெரியாது. சிறு முதலாளிகளால் வெளி நாடுகளில் சென்று தொழில் செய்ய தெரியாது. அவர்கள் மொழியை தவிர வேறு மொழி தெரியாது அவர்களுக்கு. கலாச்சாரம் மாற்றமில்லாத வாழ்க்கை. நமக்கு அப்படி இல்லை. நாம் எங்கு வேண்டுமானாலும் எளிதில் மாறி கொள்வோம். தாயகத்துடன் தொடர்புகளை சிறப்பாக தருவதன் மூலம் நாம் பெரியளவில் வளருவோம். அத்தகைய சூழல்கள் பள்ளியிலேயே இருப்பதை பார்க்கலாம், வளர்ந்த இந்தியா பிரமாண்டமான இந்தியா நம் இந்தியா நம் கண் முன்னே காண போகும் சிறப்பு இருக்கிறது நமக்கு.

Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
08-நவ-201816:00:03 IST Report Abuse

Aravindhakshan@மலரின் மகள்...தங்கள் கருத்துக்கள் மிக அருமை. தேசப்பற்றுடன் கூடிய உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-நவ-201818:17:09 IST Report Abuse

மலரின் மகள்திரு பரணீதரன். உங்கள் போன்றோர் பாராட்டுவது எனக்கு உற்சாகம் தருகிறது. உங்களை போன்றோர் தரும் கருத்துக்களை நான் வாட்ஸ் ஆப்பில் எனது உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்வேன். எங்கள் வீட்டு வரவேற்பறை பெரிய டீ வி திரையில் கூட அதை தொடர்ந்து scroll செய்து கொண்டிருப்பேன். நன்றி ஐயா....

Rate this:
Manian - Chennai,இந்தியா
09-நவ-201811:34:10 IST Report Abuse

Manianமலரின் மகள்- நல்ல சிந்தனைதான். ஆனால் சில திருத்தங்களும் வேண்டும். நாம் சுமார் முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் அடிமைகால வாழ்ந்தோம். அவர்கள் மொழியை நானு கற்றோம். சைனராக அப்படி இல்லை. நமது கிராத்தார்கள் எல்லோரும் ஆகாய விமானத்தில் பறக்கவில்லை. அதுபோலவே அவர்கள் வேய் உலகத்தி இப்போது தன பார்க்கிறார்கள். அவர்கள் தான் காகிதம், வெடிமருந்து, போன்றவற்றை கண்டு பிடித்தார்கள். அட கு முறை காரணமாக, அவர்களை மேற்கதியிய விஞ்ஞனத்தை கற்கவில்லை. அதை இப்போது சரி செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் திருடுவதில் மிக சமர்த்தர்கள். ஆகவே, அவர்கள் மேற்கத்திய முட்டாள் பேராசைக்காரர்களின்(நமது பேராசை லஞ்சவியாதிகள் போல்) பேராசையை பயன் படுத்திக் கொள்கிறார்கள். உங்களுக்கு தேவை இல்லாத பழய தொழில்களை எங்களுக்கு விலைக்கு தாருங்கள். எங்கள் நாட்டில் தொழில் தொடங்குங்கள்.ஆனால் தொழில் நுட்பங்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிறா்கள். அமெரிக்கர்கள் ஏமாந்து விட்டார்கள். அதன் பிறகு, வந்த தொழில் நுட்பங்களை இலவசமாக, அவர்கள் நாட்டு நாகரீகப்படி ஏராளமானவர்கள் அதை காப்பி அடிக்கிறார்கள். சைனாவை பற்றிய புரிதல் இல்லாமையால் தங்கள் முட்டாள்தனத்தை இப்போதுதான் அமேரிக்கர்கள் புரிந்து கொள்கிறார். அந்த கோபத்தை தனக்கு பதவியில் எதிரிகள் வராமல் காக்க/இருக்க டிரம்ப் சைனாவுடன் பொருளாதாரப் போர் தொடுத்திருக்கிறார். ஆங்கில மொழி பிரச்சினை இல்லாமல் இருந்தால் சைனாவே இன்று உலகை ஆளும். இன்று அவர்களே ராஜா. தங்களின் சிறந்த ராணுவ வீரர்களை மேற்கத்திய நாடுகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கு அனுப்பி அவர்களது காப்பறிமை பெரும் ஆராச்சிகளை திருடி மிக வேகமாக எல்லாத் துறைகளிம் வேகமாக முன்னேரி வருகிரார்கள், சைனாவில் செயற்கை அறிவு( )-ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ், டேட்டா சயின்ஸ( ) போ்ற துறைகளில் உள்ள அறிஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அமெரிக்காவில் சுமார் 10 பேர்கள் கூட இல்லை என்பது அவர்களுக்கு பயம் தருகிறது. அந்தப் படிப்பிற்கு பன்முகத்தன்மையான ஆராய்ச்சி தேவை. பனைமரம் போன்ற ஒரே விஷயஞானம் போராது.ஆலமரம் போல் படர்ந்த -மேல்நிலை கணிதம், புள்ளிவிவர இயல்,உயர்நிலை மொழியியல்,ஆழ்ந்த இகவேகமாக எல்லாத் தொழில் துறைகளிலும் அமெரிக்காவை முந்தப் பார்க்கிறார்கள்.அவ்களு ஜெட் வஅமானங்கள், ஆயுதம் தங்கி கப்பல்கள், அதிவேக பல்லட் ரயில்கள்,புதியவகை அரிசி ரகங்கள் என்ற நீண்ட பட்டியல் உண்டு. உணவு கிடைத்தால் போதும் என்ற கொள்கையால் எந்தவித வேலலை சம்பந்தப்பட்ட பலனும் இல்லாமல் குறந்த விலைக்கு தயாரிப்பு செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். இருந்தாலும் அதிக ஜன்தொகை காரணமாகவு், மாசு அதிகரிப்பாலும் திண்டாடுகிறார்கள். ஆப்ரிகாவில் ஜிபூட்டியில் நவீன துறைமுகம், கென்யாவில் புதிய ரயில் பாதைகள் போன்றவற்றை சைனீஸ் பொருள்கள், தளவாடங்கள், பணி ஆட்கள் மூலம் கொடுத்து பொருளாதார அடிமைகளாக்க பார்கிறார்கள். ஸரீலங்காவிலும் கால் பதித்து விட்டார்கள். யூரோப்பா வரை பட்டு வழிச்சாலை என்ற பெயரில் ரயில் பாதை அமைத்து விட்டார்கள். பாகிஸதானை பாதி அடிமை ஆக்கி விட்டார்கள். இந்தியாவில் லஞ்சவியாதிகளின் நண்பன். ஆகவே சைனாவின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். எதிரியின் பலம் அறிந்திருக்க வேண்டும்- இன்பர்மேஷன் இஞ்சியரிங், மேல் மட்ட கம்பியூட்டர் சயின்ஸ், ஒலி-ஒளி விஞ்ஞானம் … - இதை சைனா நன்றாக செய்கிறது. சரி பயமுறுத்தல் போதும், அவர்களிடம் என்ன குறைகள் உண்டு? இந்தியாவைப் போலவே விஷய அறிவு (Knowing a subject matter via memorization ) தெரிதல் உண்டு, புரிதல்(Understanding and applying that knowledge in a new situation) போலவே சுய சிந்தனை கிடையாது. பன்முகத் தன்மை- ஒரே விஷயத்திற்குள்ள தொடர் விஷய தொடர்புகள், அவற்றின் தாக்கம் போன்றவை கற்பிக்க படுவதில்லை. அதற்கான முறைகளும் தெரியாது. தோல்விகள் அவர்களை அடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணவிடாது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வெற்றி, தோல்வியை மாற்றலாம் என்ற கிரேக்க தத்துவத்தால் அவர்கள் மறுபடியும் முயற்சி செய்து முன்னேருவார்கள்.கிழக்கத்திய நாடுகள் தோல்வியை ஒப்புக்கொண்டு தவறுகளை கண்டு பிடித்து முன்னேராமல்-தலைவிதி,அதி்ஷ்டம் இல்லாமை, சுய பச்சாதாபம், வழிகாட்டிகள் இலலாமை,, தனித்தன்மை ஒதுக்கி ஊரோடு ஒத்து வாழ் என்ற தத்துவத்தால் தனித்திறமையை வளர்த்துக் கோஒள்வதில்லை, தனியாக சிந்திப்பதை சமுதாயம் வரவேற்பதில்லை. அதனாலேயே இந்தியார, சைனாவில் தலைசிறந்த நோபல் பரிசு பெரும், பொருளாதார முன்னற்றத்திற்கு வழி வகுக்கும் எந்த ஆராய்ச்சிளும் இல்லை. சைனா இதை உணர்ந்து விட்டது. தற்போது வெளிநாட்டு அறிஞ்கர்களுக்கு குடியேற்ற உரிமை குடுக்க ஆரம்பித்து விட்டது.மோடியும் பல நாடுகள் சென்று இதை உணர்கிறார். அமெரிக்காவும் இதை விரும்புகிறது. நாம் அவர்களுக்கு எதிரி இல்லை என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள்....

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X