நெருக்கடியில் பொது துறை வங்கிகள் : அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நெருக்கடியில் பொது துறை வங்கிகள்
அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி

மும்பை: வாராக் கடன் பிரச்னையில் சிக்கியுள்ள பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளுக்கு, அடுத்த ஐந்து மாதங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய், மூலதனம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது/

பொதுத்துறை வங்கி, தேவை, நெருக்கடி

இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, 'கிரிசில்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்திய வங்கித் துறையில், 2019 ஏப்., முதல் 'பேசல்-3' விதிமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன இருப்பு விகிதம், 9.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், பெரும்பாலான வங்கிகள், வாராக் கடன் பிரச்னையால், சமீப காலமாக, இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், அவற்றின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இந்த

வகையில், நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் காலாண்டில், 13 வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், நிர்ணயிக்கப்பட்டதை விட, மிகவும் குறைவாக உள்ளது.இவற்றில், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பிரிவின் கீழ் உள்ள, 11 வங்கிகளின் சொத்து மதிப்பு, வெகுவாக சரிந்துள்ளது. வாராக் கடன் உயர்ந்து, வருவாய் குறைந்துள்ளது.இத்தகைய சூழலில், 'பேசல்-3'விதிமுறையை பின்பற்ற, பொதுத் துறை வங்கிகளுக்கு, அடுத்த ஐந்து மாதங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதை திரட்டிக் கொள்ளும் நிலையில், வங்கிகள் இல்லை. சந்தையிலும் சாதகமற்ற சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு, பங்கு மூலதனம் மூலம், பொதுத் துறை வங்கிகளை காப்பாற்ற முனைந்தால், நிதிப் பற்றாக்குறை உயரும் அபாயமும் உள்ளது.

இரு மடங்கு :

ஏற்கனவே, மறு பங்கு மூலதன திட்டம் மூலம், வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, 2017, அக்டோபரில், மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில், தற்போது வரை, 1.12 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு, 53ஆயிரம் கோடி ரூபாய் மூலதன உதவியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வங்கிகள், பேசல் - 3 விதிமுறையை கடைப்பிடிக்க, இதை விட, இரு மடங்கு, அதாவது, 1.20 லட்சம் கோடி ரூபாய் தேவை.

Advertisement

நிதி பற்றாக்குறை

: நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில், ஏற்கனவே, 95 சதவீதம் எட்டப்பட்டுஉள்ளது. இந்நிலையில், வங்கிகளுக்கு நிதியுதவி வழங்கினால், அது, நிதிப் பற்றாக்குறை இலக்கை விஞ்ச வழி வகுத்து விடும்.இந்நிலையில், வங்கிகள் பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு கோரிய, 3.60 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை தர, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இத்தகைய சூழலில், வங்கிகள் எப்படி, 'பேசல்-3' விதிமுறையை அமல்படுத்தப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துஉள்ளது.

கொடுத்தும் பயனில்லை

: கடந்த மூன்று நிதியாண்டுகளில், மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய் மூலதன உதவி வழங்கியுள்ளது. அதில், 1.30 லட்சம் கோடி ரூபாயை, வங்கிகள், இழப்பை சரிகட்டவே பயன்படுத்தியுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
16-நவ-201803:58:27 IST Report Abuse

POLLACHI  JEAYASELVAN   sanjose USAபணக்கார தேவதைகளின் பாதுகாவலன் இந்தியாவில் இது வரை யாரும் பார்த்திராத மாபெரும் தலைவன் மோடியின் நல்ல நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறோம் .வாழ்க மோடி, ஒழிக முட்டாள் மாக்கள்

Rate this:
G.Loganathan - Coimbatore,இந்தியா
08-நவ-201819:03:41 IST Report Abuse

G.Loganathanஒரே வழி, நடத்த முடியாமல் இருக்கும் வங்கிகளில் உள்ள அணைத்து அதிகாரிகளையும் எவ்வித நிகழ் கால - எதிர் கால பலன்களும் இல்லாமல் வேலை நீக்கம் செய்ய வேண்டும். வேலை இல்லாமல் இருக்கும் b.com பட்டதாரிகளுக்கு (லஞ்சம் இல்லாமல்) வேலை கொடுங்கள். ஓரிரு வருடங்களில் அந்த வங்கிகள் எப்படி செயல் படுகின்றது அன்று பாருங்கள். மொபைல் போனில் சொந்த கதை பாடிக்கொண்டிருக்கும் வங்கி அதிகாரிகள் இருக்கும் வரை உருப்பட வழியே இல்லை.

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
08-நவ-201816:15:21 IST Report Abuse

Jaya Ramஆமாங்க நாம ஆரம்பிக்காத கல்வி நிறுவனத்திற்கு 1000 கோடி கடன் கொடுத்துள்ளோம் அல்லவா அதை போலத்தானே

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X