பெரும்பான்மை இழந்தது டிரம்பின் குடியரசு கட்சி Dinamalar
பதிவு செய்த நாள் :
பெரும்பான்மை இழந்தது டிரம்பின் குடியரசு கட்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில், பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சி, பெரும்பான்மை பலம் பெரும் நிலையில் உள்ளது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி, செனட் சபையை தக்க வைத்துக் கொண்டது.

டிரம்ப், அமெரிக்கா, பெரும்பான்மை, குடியரசு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல், 2016, நவ.,8ல் நடந்தது. இதில், குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க பார்லிமென்டில், 435 உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை, 100 உறுப்பினர்கள் உள்ள செனட் ஆகியவை உள்ளன. பிரதிநிதிகள் சபை, நம் நாட்டின் லோக்சபா போன்றது.பிரதிநிதி சபையில், குடியரசு கட்சிக்கு, 235 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு, 193 உறுப்பினர்களும் இருந்தனர். செனட் சபையில், குடியரசு கட்சிக்கு, 51உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு, 49 உறுப்பினர்களும் உள்ளனர் .

இந்நிலையில், பதவி காலம் முடிந்த பிரதிநிதி சபைக்கும், 35 செனட் உறுப்பினர்கள் பதவிகளுக்கும், 36 கவர்னர்கள் பதவி களுக்கும், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஓட்டுப்பதிவு மிகவும் அதிகமாக இருந்ததாககூறப்படுகிறது.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில், செனட் சபையில், பெரும்பான்மையை, குடியரசு கட்சி தக்க வைத்து கொண்டது.ஆனால், பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சி, பெரும்பான்மை பலம் பெறும் நிலையில் உள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது.தற்போதையை நிலவரப்படி, ஜனநாயக கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன், வர்ஜினியா, புளோரிடா ஆகிய மாகாணங்களில், வெற்றியும் பெற்றுள்ளது.அதிபர் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின், இந்த தேர்தல் நடந்ததால், இது, டிரம்ப் நிர்வாகத்தின் மீதான, மக்களின் கருத்து கணிப்பாக கருதப்பட்டது,அமெரிக்காவில் சமீப காலமாக நடந்த கலாசார பிரச்னை, இனவெறி, குடியுரிமை பிரச்னை போன்ற வற்றால், இடைத்தேர்தலில், டிரம்பின் குடியரசு கட்சி, பெரும் சரிவை சந்தித்துள்ளது என, அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பிரதிநிதிகள் சபையில், எதிர்க்கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதால், அதிபர் டிரம்பின் முடிவுகளை, எதிர்க்கட்சி முடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Advertisement

3 இந்தியர்கள் வெற்றி : அமெரிக்க இடைத்தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், ௧௩ பேர் போட்டியிட்டனர். ஜனநாயக கட்சி சார்பில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக இருந்த, நான்கு இந்தியர்களும் மீண்டும் போட்டியிட்டனர். இதில், கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஜனநாயக கட்சி வேட்பாளர் அமி பெரா - குடியரசு கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ கிரான்ட் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இவர்களை தவிர, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட, ஆறு பேரும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட இருவரும், சுயேச்சை ஒருவரும், ஓட்டு வித்தியாசத்தில், மிகவும் பின்தங்கியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
08-நவ-201820:39:09 IST Report Abuse

varagur swaminathanIf there is any difference you can find between ADMK and DMK , then you can find between these two political parties . Both parties are run by families. Hidden agenda between both. Trump will go slow but will complete his goals.

Rate this:
Gopi Krishna - Chennai,இந்தியா
09-நவ-201811:45:08 IST Report Abuse

Gopi Krishnawho told ADMK run by Family and i accept as you said DMK run by Family...

Rate this:
Meenu - Chennai,இந்தியா
08-நவ-201816:53:51 IST Report Abuse

Meenuஇது மாதிரி இந்தியாவிலும் இரண்டாண்டிற்கு ஒரு முறை இடை தேர்தல் வைக்க வேண்டும். நம் நாட்டில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஐந்தாண்டுகள் என்ன வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்கிறார்கள், கொள்ளை அடிக்கின்றனர், யாரும் கேட்க முடியாது, மக்கள் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி உள்ளது. இந்த முறையை மாற்ற வேண்டும். அமெரிக்காவை டிரம்ப், நம் நாட்டில் மோடி, ஆட்சி செய்வது மிக கேவலமாக இருக்கிறது. அங்கு அவருக்கும் இங்கு இவருக்கும் வரும் தேர்தலில் சேற்றை வாரி பூசிவிடுவார்கள் மக்கள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-நவ-201808:51:06 IST Report Abuse

Srinivasan Kannaiyaடிரம்ப் பக்கம் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கிறது

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X