'ஆன்லைன்' முறைக்குள் வர மறுப்பு : வாரிய வீடுகள் விற்பனையில் சிக்கல் Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சிக்கல்!
'ஆன்லைன்' முறைக்குள் வர மறுப்பு
வாரிய வீடுகள் விற்பனையில் சிக்கல்

ஆன்லைன் முறையில் திட்ட அனுமதி பெறும் நடைமுறைக்கு, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகியவை வராததால், அவற்றின் திட்டங்களில், வீடுகள் விற்பனைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ஆன்லைன்' முறைக்குள் வர மறுப்பு : வாரிய வீடுகள் விற்பனையில் சிக்கல்


தமிழகத்தில், கட்டுமான திட்டங்களுக்கு, அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நடைமுறை :

இதற்காக, கட்டுமான திட்ட விண்ணப்பம்

மற்றும் வரைபடங்களை, ஆன்லைன் முறையில் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் பதிவு இன்றி நேரடியாக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப் பட்டுள்ளது. இதை, அனைத்து தனியார் கட்டுமானநிறுவனங்களும் ஏற்று, அதற்கேற்ப செயல்படுகின்றன. ஆனால், வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் போன்ற, அரசு சார்ந்த நிறுவனங்கள், புதிய நடைமுறையை ஏற்க தயங்குகின்றன.

நிறுத்தும் நிலை :

இதுகுறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள், வரைபடங்கள் தாக்கல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு தனியார் கட்டுமான நிறுவனங்கள்ஒத்துழைக்கின்றன. வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகிய அரசு சார்ந்த நிறுவனங்கள், ஒத்துழைப்பது இல்லை. இதனால், அவர்களின் புதிய திட்டங்களுக்கு, முறையான அனுமதி வழங்குவது

Advertisement

நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முடங்கும்

: இதேநிலை தொடர்ந்தால், அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்களில், வீடுகள் விற்பனையாவது முடங்கும். பிற துறைகளிடமிருந்து, அடிப்படை வசதிகளுக்கான இணைப்பு பெறுவது சிக்கலாகும். இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வாயிலாக, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
08-நவ-201817:45:30 IST Report Abuse

kalyanasundaramif agreed the illegal income for staff will be a loss

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
08-நவ-201810:29:32 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஇந்தியாவில் தான் சட்டம் இயற்றுவதில் நடைமுறை படுத்துவதில் சிக்கல் இதை யார் சீர் செய்வது முதலில் மத்திய அரசில் மாநில அரசில் சட்டம் இயற்ற முடிவெடுத்தால் மக்கள் கருத்தினை அறிந்து வாஸும் மக்களுக்கு பிற்காலத்தில் சட்ட சிக்கல் இல்லாமல் நிறைவேற மக்கள் கருத்தை அறிய முன் வர வேண்டும் சட்டம் இயற்றும் அதிகாரிகள் சேயும் தவறுக்கு மக்கள் ஏன் பாதிக்க வேண்டும் , சிவில் கிரிமினல் என்று வரையறுத்து உள்ளார்கள் அதையே சரியாக நீதிமன்றம் கையாளவில்லை இவ்வாறான பிரச்சனையை ஆராய்ந்து இனி வரும் இவ்வாறான வசகுகளுக்கு நீதிமன்றம் ஓவ்வ்வுர் வசக்கையும் எவ்வாறு விசாரணை செய்யணும் நடைமுறை படுத்தனும் என்று வரையறுத்து இருந்தால் தீர்வு காணலாம் எல்லாவற்றிக்கும்

Rate this:
PathyUSA - Houston-Texas state-USA,யூ.எஸ்.ஏ
08-நவ-201812:54:10 IST Report Abuse

PathyUSAHOPE YOU MIGHT APPROACH MR.TRAFFIC RAMASAMY,NAKKIRAN GOPAL SIR OR MR.SUBRAMANIAN SAMY AT DELHI AND GET A PUBLIC INTEREST LITIGATION INITIATED AGAINST THE CM of TN. PathyUSA...

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
08-நவ-201808:24:59 IST Report Abuse

ramanathanலஞ்சத்தில் ஊழலில் திளைத்தவர்கள் ஒத்துழைப்பு அளிப்பது கடினம்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X