சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்

Added : நவ 08, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சிதம்பரம் கருத்து தமிழிசை கிண்டல்

சென்னை:'ராகுலின் தலைமையில் வெற்றி பெற்றோம் என்று கூற முடியாத நிலையில், காங்., கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளார்' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், இரு சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடந்தது. இதில், ஒரு லோக்சபா தொகுதியில் மட்டும், பா.ஜ., வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், 'கர்நாடகா வெற்றிக்கு, கூட்டணி பலன் தந்துள்ளது' என, கூறினார்.
இதை கிண்டலடித்து, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ராகுலின் தலைமையால் வெற்றி பெற்றோம் என்று கூற முடியாத நிலையில், காங்கிரஸ் கட்சியின், ப.சிதம்பரம் உள்ளார்' என, பதிவிட்டுள்ளார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'மோடி தலைமையில் தோற்றோம் என, நீங்கள் கூறுவீர்களா?' என, பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
09-நவ-201800:30:58 IST Report Abuse
yila சிதம்பரம் அவர்களை கமெண்ட் பண்ண வேண்டுமென்றால், அவரின் திறமையில் ஒரு பத்து சதவீதமாவது உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி இவங்க கட்சியில யாராவது.......?
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
09-நவ-201822:25:26 IST Report Abuse
Dr.  Kumarசரியாய் சொன்னீங்க யில-நெல்லை...
Rate this:
Share this comment
Cancel
Kalam - Salem,இந்தியா
08-நவ-201819:27:10 IST Report Abuse
Kalam பிஜேபி ஜெயிக்கட்டும் இல்லை காங்கிரஸ் ஜெய்க்கட்டும் அதெல்லாம் ஜனநாயகம் . ஆனா பிஜேபி ஜெயிச்சா வோட் மெஷின் செட் அப் அப்பிடிங்கறது, பிஜேபி தோத்துட்டா வோட் மெஷின் ஒழுங்கா வேலை செய்யுதா ?
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
09-நவ-201818:52:31 IST Report Abuse
Mohan Sundarrajaraoஅதெல்லாம் வேண்டாம். வோட்டிங் மெஷினில் malpractice செய்யமுடியும் என்கிற ஓரு சந்தேகம் இருக்கும் நிலையில் அதை தூக்கி போடவேண்டியதுதானே....
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
08-நவ-201815:30:44 IST Report Abuse
சுந்தரம் தமிழ்நாட்டில் மோடியின் தலைமையில் பாஜக பெற்ற வெற்றிகளை பட்டியல் இட்டிருந்தால் அம்மையாரின் கருத்தை வரவேற்கலாம்.
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
08-நவ-201820:37:02 IST Report Abuse
JSSதமிழ்நாடு எப்போதும் ஊழல் உதவாக்கரை கேடிகள் பார்ட்டிகளுக்கு வாக்களித்து தான் பழக்கம் அதுவும் ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு. இந்த அழகில் பாஜகவின் வெற்றிகளைப் பற்றி தமிழ்நாட்டில் எப்படி பேசுகிறீர்கள்? தமிழனின் மனம் என்றோ செத்து விட்டது....
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
09-நவ-201800:27:08 IST Report Abuse
yilaகல்வி அறிவில் குறைந்த பிஜேபி ஆளும் மாநிலங்களின் மக்களைப் போல அல்லாமல், தமிழ் நாட்டு மக்களை தலைகீழாக நின்றாலும் பிஜேபி தனது டிரேட் மார்க் பொய்களால் ஏமாற்ற முடியாது என்பதே உண்மை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X