பதிவு செய்த நாள் :
பெருமிதம்!
பொருளாதாரம் சீரானதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி...
செல்லாத ரூபாய் நோட்டு திட்ட பலன்களை பட்டியலிட்டார்

புதுடில்லி : 'செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நமது பொருளாதாரத்தை முறைப்படுத்தி உள்ளது; வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் ஏழைகளுக்கான திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது' என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

பொருளாதாரம்,சீரானதாக,நிதியமைச்சர்,அருண் ஜெட்லி,பெருமிதம்


கடந்த, 2016, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்ட அறிவிப்பு வெளியானது. அதன்படி, 'புழக்கத்தில் இருந்த, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின், இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, 'பேஸ்புக்' சமூகதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், நிறைய பலன்கள் கிடைத்துள்ளன. 2014, மே மாதம், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றபோது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 3.8 கோடியாக இருந்தது. அது தற்போது, 6.86 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த அரசு, 5 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்யும்போது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்துவிடும். செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கையால், பொருளாதாரம் முறைபடுத்தப் பட்டுள்ளது; அதிக வருவாய் கிடைத்துள்ளது. இந்த அதிக வருவாய் மூலம், ஏழை மக்களுக்கான திட்டங்கள், கட்டமைப்பு திட்டங்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன. இதனால், நமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையும் அமல்படுத்தப்பட்டதால், வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மறைமுக வரியின் பங்கு, 4.4 சதவீதத்தில் இருந்து, 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது .செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், கறுப்புப் பணமும், வங்கிக் கணக்குக்கு வந்துவிட்டதாக, சிலர் விமர்சனம் செய்கின்றனர். சரியான தகவல் இல்லாமல் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.


ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்வது அரசின் நோக்கமல்ல. செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், பொருளாதாரத்தை முறைபடுத்துவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்டவைதான் அரசின் நோக்கங்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.இதனால், அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பது போன்ற பல பலன்களை நோக்கியே, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

பணத்தை கையில் வைத்திருந்தவர்கள், வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கில் அதிக முதலீடு செய்த, 17.42 லட்சம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.வங்கிகளில் அதிக முதலீடு செய்யப்பட்டதால், வங்கிகளின் கடன் வழங்கும் திறனும் உயர்ந்துள்ளது. இதனால், பொருளாதாரம் சீரடைந்துள்ளது. இவ்வாறு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், பல்வேறு பலன்கள் நமக்கு கிடைத்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

வடுக்கள் மறையாது!

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின், இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது: முறையாக திட்டமிடாமல், அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், நாட்டின் பொருளாதாரமும், ஒவ்வொரு குடிமகனும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது. வயது, பாலினம், மதம், தொழில் என, எந்த பேதமும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். காலங்கள் காயங்களை ஆற்றும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும், காலம் செல்ல செல்ல, பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள காயங்கள், வடுக்களாக மாறி, எப்போதும் அதன் பாதிப்பை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நாட்டின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதாரத்திலும் அதன் தாக்கத்தை காட்டியது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோர், தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஏன், எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது புரியாமல்அமலான இந்த திட்டத்தால், நாட்டுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டனர். இனியாவது, இதை உணர்ந்து, பலனளிக்காத புதிய முயற்சிகள், மக்களை பாதிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

தொடரும் மர்மம்!

பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பல மோசடிகளை, ஊழல்களை செய்துள்ளது. ஆனால், நமது பொருளாதாரத்தின் மீது திட்டமிட்டு, சுயமாக மிக ஆழமான காயத்தை ஏற்படுத்தியது, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு மோசடிதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதற்காக, இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

-அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி


சிலருக்கு லாபம்!

ஒரு சிலரின் சொந்த லாபத்துக்காகவே, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்கள் என, நாட்டின் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலருக்காக, பெரும்பாலான மக்களை வதைக்கும் இந்த அறிவிப்பு வெளியான நாள், நாட்டின் கறுப்பு தினம்.

-மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்


காங்கிரசுக்கு, பா.ஜ., கேள்வி

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை விமர்சனம் செய்யும் காங்கிரஸ் கட்சிக்கு, பல்வேறு கேள்விகள் எழுப்பி, பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஊழலுக்கு எதிராக, பிரதமர் மோடி அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை உடனடியாக காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்துள்ள நிலையில், குறைந்துள்ளதாக மறுப்பு அரசியல் நடத்துவது ஏன். தொழில் செய்வதற்கு உகந்த நாடு, மிக வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடு என, பல உலக அமைப்புகள் பாராட்டி வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எப்படி கூறுகிறது. ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில், பல அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர், சிதம்பரம் விமர்சனம் செய்வது கேலிக்குறியதாக உள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி குறித்து மற்ற நாடுகள் பாராட்டும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அது தெரியாமல் போனது எப்படி. இவ்வாறு பல கேள்விகளை, பா.ஜ., எழுப்பியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
09-நவ-201822:37:05 IST Report Abuse

மணிமேகலை  யாருடைய பொருளாதாரம் ?????????????????

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-நவ-201821:13:03 IST Report Abuse

Pugazh Vஇந்த செய்தி க்கு எந்த பீஜேபீ வாசகராலும் ஆதாரத்துடன் பின்னூட்டம் போடவே முடியவில்லை பாவம். சும்மா சும்மா கட்டுமரம் சாடலை என்று பிதற்றி வைத்திருக்கிறார்கள்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
09-நவ-201820:19:33 IST Report Abuse

r.sundaramகாங்கிரஸ் கட்சி பொருளாதாரம் பற்றி பேசினால் அது அந்த கட்சியின் பொருளாதாரம் பற்றி மட்டும் தான், நாட்டுப்பொருளாதாரம் பற்றி அல்ல. காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம், நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் சீர்குலைந்துபோய் இருக்கலாம், அதனை அவர்கள் சொல்கிறார்கள், அவ்வளவுதான். நாட்டின் பொருளாதாரம் பற்றி கவலைப்படுபவர்கள் ஊரக வேலைவாய்வாய்ப்பு திட்டத்தை கொண்டு வருவார்களா? அது ஓட்டுக்காகவே கொண்டு வந்த திட்டம். அதனால் நாடு அடைந்த பயன் என்ன, அந்த திட்டத்திற்கு இன்றுவரை நாடு என்ன செலவழித்திருக்கிறது என்று தெரிந்தால் இது புரியும். அதே மாதிரி எம் எல் ஏ, எம் பி இவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டமும் மகா மோசமான ஒரு திட்டமே. எம் பி களின் ஓட்டுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் அது. ஒரு பேருந்து நிறுத்துமிடம் கட்டுவதற்கு எட்டு லட்சம் ருப்பாயாம், எங்கள் ஊர் எம் பி செலவழித்திருக்கிறார். நாற்பது ஆயிரம் ரூபாயில் அந்த வேலையை செய்ய முடியும். இதற்க்கு கணக்கு காட்ட வேண்டாம், ஆடிட் கிடையாது, இது எம் எல் ஏ, எம் பி களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. இதுதான் காங்கிரஸ் கலாச்சாரம்.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X