பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி கண்டனம்

Updated : நவ 09, 2018 | Added : நவ 09, 2018 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை: சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலவசங்களை அவமதிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டுவிட்டரி்ல் தெரிவித்துள்ளதாவது: சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை
சர்க்கார், நடிகர் ரஜினி, சர்க்கார் சர்ச்சை , சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் , தணிக்கை குழு,   சர்க்கார் போராட்டம், ரஜினி, ரஜினிகாந்த் , 
Sarkar, Actor Rajini, Sarkar Film, Tamil Nadu Politics, Censor Board, Sarkar Controversy, Sarkar protest,Rajini, Rajinikanth

சென்னை: சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலவசங்களை அவமதிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டுவிட்டரி்ல் தெரிவித்துள்ளதாவது: சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்... தணிக்கை குழு தணி்க்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு . இத்தகைய சட்டவிரோதமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் ரஜினி கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
16-நவ-201804:02:45 IST Report Abuse
Nagarajan Duraisamy வசனம் பேசி மக்கள் உணர்வுகளை தூண்டி பணம் பார்க்கும் கூட்டம், தனது தொழில் பாதிப்படைந்தால் கூவுவது நியாயம் தான். இதற்கு காரணம் தங்களுடைய சகாக்கள் தான் என்பதையும் அறிந்தவர்கள். அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா. இங்கு அரசியல் அமைப்பு செரியில்லயா அல்லது சமுதாய அமைப்பு செரியில்லயா என்பது சிந்தனைக்குரியது. அரசியல் அமைப்பு சரியில்லை என்பதைக்கூட தமிழில் சொல்ல தெரியாமல் சிஸ்டம் சரியில்லை என்று பேசி வரும் இவர் சொல்வது நியாயம் தான். மூன்று மணி நேரத்தில் ஒரு கதை சொல்லி அதில் சமூக வக்கிரங்களை விதைத்து, பணத்துக்காக அதை நியாயப்படுத்தும் கூட்டம் இருக்கும் வரையில் எல்லோரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டிய விஷயம் தான். இந்த லட்சணத்தில் மக்கள் படத்தை பார்த்து தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. இதே செய்தியை வாக்காளர்களுக்கு சொல்ல வேண்டிய தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா ?
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
09-நவ-201817:13:41 IST Report Abuse
K E MUKUNDARAJAN கோலிவுட்டின் கந்து வட்டி ஊழல், மீ டூ ஊழல், காசோலை பௌன்ஸ் ஊழல், வரி ஏய்ப்பு , கருப்பு பண ஊழல்,தியேட்டர் அட்டூழியங்கள் , தயாரிப்பாளரையே மாற்றுவது , பெண்களை இழிவுபடுத்தல் போன்ற எல்லா ஆட்டூழியங்களையும் வைத்து ஒரே ஒரு படம் எடுத்தால் அண்ணாச்சிகள் தாங்குவார்களா?
Rate this:
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
09-நவ-201816:05:04 IST Report Abuse
sumutha - chennai சார் நீங்க கண்டனம் தெரிவிச்ச ஓடனே அரசாங்கம் thayaricha அந்த படத்துல இருக்கிற ஆட்சேபகரமான சீனை கட்பண்ணிட்டு படத்தை அரசாங்கம் வெளியிட்டு விட்டது பிளீஸ் அமைச்சர்களை எதுவும் செஞ்சிடாதீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X