பதிவு செய்த நாள் :
'1996ல் கிடைத்த வெற்றியை
லோக்சபா தேர்தலில் பெறுவோம்'

பெங்களூரு : ''அடுத்த லோக்சபா தேர்தலில், 1996ல் நடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை, எதிர்க்கட்சிகள் பெறும்,'' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறினார்.

1996,கிடைத்த வெற்றி,லோக்சபா தேர்தல்,பெறுவோம்


அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், சந்திரபாபு நாயுடு

ஈடுபட்டுள்ளார். காங்., தலைவர் ராகுல், தேசியவாத, காங்., தலைவர் சரத் பவார் உட்பட, பல தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவ கவுடா, கர்நாடக முதல்வர், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி ஆகியோரை, சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார்.

பின், நிருபர்களிடம் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி, அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நின்றால், பா.ஜ.,வுக்கு தோல்வி நிச்சயம் என்பதை, கர்நாடக மக்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.

Advertisement

தேர்தல் கமிஷன், சி.பி.ஐ., போன்றவற்றை, மோடி அரசு, தன் கைப்பொம்மையாக பயன்படுத்தி வருகிறது. நாட்டை காப்பாற்ற, எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்கு பின் முடிவு செய்வோம். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியை, அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், எதிர்க்கட்சிகள் பெறும். இவ்வாறு, சந்திரபாபு நாயுடு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu -  ( Posted via: Dinamalar Android App )
09-நவ-201823:31:21 IST Report Abuse

Anbu Great joke of this Era

Rate this:
vvkiyer - Bangalore,இந்தியா
09-நவ-201819:05:11 IST Report Abuse

vvkiyerThe one point agenda of Naidu is to snub Modi Govt., which did not favourable rwsond to Nidu's request of special status to AP. Arun Jaitley has given reasons why special status could not be fiven to AP,. He aslo said there are other avenues to get the benefits available under secial status. It is shameful, that Naidu wants to honob with Congress, which was detested by the the TDP founder NTR .

Rate this:
bal - chennai,இந்தியா
09-நவ-201810:45:02 IST Report Abuse

balஇத்தனை நாட்கள் பிஜேபியை பிடித்துக் கொண்டு பதவிக்கு வந்தார் நாயுடு... இப்போது இந்த திமிர் பேச்சு...ஏன் ராஜினாமா செய்துவிட்டு திரும்ப முதல்வராக முயற்சி செய்யவேண்டியது தானே.....

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X