பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
டில்லியில் அபாய அளவை
எட்டிய காற்று மாசு

புதுடில்லி : உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, தீபாவளி பண்டிகை நாட்களில், மக்கள், அதிக நேரம் பட்டாசு வெடித்ததால், டில்லியில் காற்று மாசு, அபாய அளவை எட்டியுள்ளது.

டில்லி,அபாய அளவை,எட்டிய,காற்று மாசு


தலைநகர் டில்லியில், காற்று மாசு, ஏற்கனவே மோசமடைந்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாசை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்க, உச்ச நீதிமன்றம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல், ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க, தடையும் விதித்தது.

விதிமீறல் :


டில்லியில், தீபாவளியை முன்னிட்டு பெருமளவு பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பதுக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.டில்லியில், தீபாவளி

பண்டிகை அன்று இரவு, 8:௦௦ மணி முதல், 10:௦௦ மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும், பட்டாசுகளை மக்கள் வெடித்தனர்.

நடவடிக்கை:


மயூர் விஹார் எக்ஸ்டென்ஷன், லஜ்பத்நகர், துவாரகா, நொய்டா, ஜஹாங்கிர்பூர் போன்ற பகுதிகளில், தடையை மீறி, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. டில்லியில், நேற்று முன்தினம் இரவு, 10:௦௦ மணி வரை, பட்டாசு கள் வெடிக்கப்பட்டன. இதனால், டில்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு, 7:௦௦ மணியளவில் காற்று மாசு குறியீடு, 286 ஆகவும், 8:௦௦ மணிக்கு, 405 ஆகவும், 9:௦௦ மணிக்கு, 514 ஆகவும் பதிவாகி இருந்தது.

நேற்று காலை, 6:௦௦ மணி நிலவரப்படி, டில்லியில், காற்று மாசு அளவு குறியீடு, 574ஆக இருந்தது. டில்லியில் சில பகுதி களில், காற்றின் மாசு அளவு, 8௦௦க்கு மேல் பதிவாகியிருந்தது. டில்லியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட போலீசார், இது தொடர்புடைய நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். இதற்கிடையே, அனுமதிக்கப்பட்ட நேரத்தை

Advertisement

தாண்டி, பட்டாசு வெடித்ததாக, டில்லியில், 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிருக்கே ஆபத்து :


மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை, 'ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்' எனப்படும், காற்று தர சுட்டெண் அளவீடு மூலம், நிர்ணயிப்பது வழக்கம். இது, 50-க்குள் இருந்தால், நல்ல காற்று. 51 --- 100 என்ற அளவில் இருந்தால், திருப்தி; 101 - --200 மிதமானது; 201 --- 300 மோசமானது; 301 --- 400 மிக மோசமானது; 401 --- 500 மிக மிக மோசமானது என, கூறப்படுகிறது.

அதிக மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், பலவிதமான நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, 'சுவாச கோளாறு உள்ளவர்கள், அதிக மாசடைந்த காற்றை சுவாசித்தால், அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
09-நவ-201809:09:15 IST Report Abuse

tamilகாற்று மாசு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரியும், அதை மக்கள் நேரடியாக உணர்கிறார்கள், காற்று மாசு ஏற்படுத்தும் விஷயங்கள் எவை எவை என்பதை முதலில் கண்டுணர்ந்து ஒவ்வொன்றாக தடுக்க முயலவேண்டும், பட்டாசு என்பது ஒரு நாள் கூத்து, அவ்வளவு தான், மற்ற நாட்களில் காற்று எவ்வாறு மாசு அடைகிறது, அதை நீக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201808:11:23 IST Report Abuse

Srinivasan Kannaiyaவருமுன் காக்கணும்... இல்லே வருகின்ற வளர்கின்ற போதே தடுக்கணும்... எதுவுமே இல்லை என்றால் எப்பிடி...

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
09-நவ-201806:50:32 IST Report Abuse

VOICEஊழல் பணத்தால் வாங்கிய சொத்துக்கள் பெரும்பகுதி டெல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் பலவகைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.. என்ன சட்டம் போட்டாலும் கடவுளின் தீர்ப்பை மாற்றமுடியாது.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X